டயலாக்கை வாந்தி எடுக்குறது தானே நடிப்பு? இப்போ நான் பண்றதை யாராவது பண்ண முடியுமா? சிவகுமார் ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சிவக்குமார் தான் சினிமாவை விட்டு விலகியது எதற்காக என்று பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் நடிப்பு என்பது போண்டா, பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு வாந்தி எடுப்பது போன்றது தான். ஆனால் இப்போது நான் செய்து கொண்டிருக்கும் செயலை வேறு யாராவது செய்ய முடியுமா? என்று சிவகுமார் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

நடிகர் சூர்யா மற்றும் கார்த்தியின் அப்பாவான சிவகுமார் ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயகனாக நடித்து பிறகு பல முன்னணி நடிகர்களுக்கு அப்பா அண்ணன் கேரக்டரில் நடித்திருந்தார். அதுபோல சினிமா மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்து இருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் சீரியலில் மற்றும் சினிமாவை விட்டு விலகி இருக்கிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது தான் எதற்காக சினிமாவை விட்டு விலகினேன் என்பது குறித்து பேசி இருக்கிறார்.

sivakumar

அதில் சிவகுமார் பேசுகையில், நான் எம்ஜிஆர், சிவாஜிக்கு தம்பியாக நடித்திருக்கிறேன். அதுபோல கதாநாயகனாகவும் பல முன்னணி நடிகர்களோடு சேர்ந்தும் நடித்திருக்கிறேன். இது எல்லாம் இருந்தாலும் சீரியலில் நான் நடித்துக் கொண்டு இருந்ததை மறக்க முடியாது. சினிமாவை விடவும் எனக்கு சீரியலில் தான் அதிகமான பணம் கிடைத்தது. ஆனால் நான் ராதிகா நடித்த ஒரு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது என் பக்கத்தில் இன்னொரு பெண் ஃபோனில் பேசி சிரித்துக் கொண்டிருந்தார்.

நான் சிவாஜி கணேசன் எப்படி பாசமலர் திரைப்படத்தில் ஃபீல் பண்ணி நடித்திருப்பாரோ அதுபோல ஃபீல் பண்ணி நடித்தேன். ஆனால் அதை பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை கஷ்டப்பட்டு நான் நடித்துக் கொண்டிருக்கும் போது அலட்சியப்படுத்துற மாதிரி சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த ஒரு பெண் நடிகை செய்த செயல் என்னை நடிப்பை விட்டு விலகிப்போக சொன்னது.

நடிப்பவர்களுக்கு இங்கே மரியாதை இல்லை. இனி எதற்கு இந்த நடிப்பு என்றுதான் நான் முடிவெடுத்து சினிமாவை விட்டு விலகி வந்தேன் என்று சிவகுமார் கூறியிருக்கிறார். அதற்கு அவரிடம் பேட்டி எடுத்த நடிகர் சித்ரா லட்சுமணன் இந்த ஒரு சின்ன விஷயத்திற்காக நீங்கள் சினிமாவை விட்டு விலகி இருக்கணுமா? என்று கேட்க, அதற்கு ஆமாம் நடிப்பு என்பது பஜ்ஜி போண்டா சாப்பிட்டுவிட்டு வாந்தி எடுப்பது போல தானே? அதை நான் செய்ய வேண்டாம் என்று முடிவு எடுத்தேன்.

sivakumar

நடித்துவிட்டு விலகிய பிறகு தான் நான் கம்பராமாயணத்தை 5 வருஷமா ஆராய்ச்சி செய்து இருக்கிறேன். இப்போ திருக்குறளை நான்கு வருஷமா ஆராய்ச்சி செஞ்சுட்டு இருக்கிறேன். நடிக்கிறதை யாரு வேணாலும் நடிக்கலாம். ஆனால் இது போன்ற ஆராய்ச்சி யாராலயாவது செய்ய முடியுமா? திருக்குறளில் எவ்வளவு விஷயங்கள் புதைந்து கிடக்கிறது அது பலருக்கு தெரியாது அதை வெளியே பலருக்கு சொல்ல வேண்டும் என்பதற்காக நான் முயற்சி எடுத்து இருக்கிறேன்.

ஒரு விஷயம் செய்கிறோம் என்றால் அதிலிருந்து நாம மேல தான் போகணும் நான் கதாநாயகனாக நடித்து, அதற்குப் பிறகு அப்பா கேரக்டரில் நடித்தேன். ஆனால் என்னுடைய நடிப்பை சிலர் மதிக்கல அதற்குப் பிறகு நான் சினிமாவில் இருந்து கொண்டு இருந்தால் என்னை இனி வடிவேலுக்கு தம்பி வேஷம் போட சொல்லுவாங்க, சூர்யாவிற்கு கால் அமுக்க சொல்லுவாங்க... கார்த்திக்கு நான் கை அமுக்கணுமா? இப்படித்தானே எனக்கு காட்சிகள் கொடுக்கப் போறாங்க?

இனி எனக்கு கதாநாயகன் கேரக்டரா கொடுக்கப் போறாங்க? ஏற்கனவே நான் ஹீரோ போல இருக்கும்போதே விஜயகாந்துக்கு அப்பாவாக மீசையில் டை அடிச்சு என்னை நடிக்க வச்சாங்க. இனி என்ன செய்யப் போறாங்க மேலும் இதே மீசையில் டை அடிப்பாங்க, தாடி வைக்க போறாங்க.. இதைத்தானே செய்யப் போறாங்க அதனால தான் அந்த நடிப்பு வேண்டான்னு நான் விட்டேன் என்று தன்னுடைய ஆதங்கத்தை சிவகுமார் வெளிப்படுத்தி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+