கதாநாயகன்னு சொல்லி ஏமாற்றம்! டி.ஆருடன் கசப்பான அனுபவம்.. செத்து போய் விட மாட்டேன், சிவக்குமார் உருக்கம்
சென்னை: நடிகர் சிவகுமார் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது தமிழ் சினிமாவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவம் குறித்து மனம் திறந்து பேசி இருந்தார். அதில் நடிகர் ராஜேந்திரன் உடன் தனக்கு ஒரு கசப்பான சம்பவம் ஏற்பட்டது என்று கூறியிருக்கிறார். அதோடு தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஏமாற்றம் குறித்தும் சிவகுமார் அந்த பேட்டியில் உருக்கமாக பேசி இருந்தார்.
நடிகர் சிவகுமார் ஆரம்பத்தில் துணை கதாபாத்திரத்தில் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் பிறகு கதாநாயகனாக நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் கதாநாயகர்களின் அப்பாவாகவும், அண்ணாவாகவும் நடிக்க தொடங்கிவிட்டார். அதற்கு பிறகு சீரியலில் நடிக்க தொடங்கியிருந்தார். ஆனால் திடீரென்று சீரியல் மற்றும் சினிமா என மொத்தமாக விலகி இப்போது ஓவியம், புத்தகம் எழுத்து என்று பிசியாக இருக்கிறார்.

டி ராஜேந்திரன் பற்றி சிவகுமார் பேட்டி
அதுபோல பள்ளி கல்லூரி விழாக்களிலும் கலந்து கொண்டு தன்னுடைய கடந்த கால நினைவுகளை பேசி, மாணவர்களுக்கு அறிவுரைகளையும் கொடுத்து வருகிறார். அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது டி ராஜேந்திரன் உடன் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் பற்றி பேசி இருந்தார். அதில் டி ராஜேந்திரன் கே கோபாலகிருஷ்ணனுக்கு பிறகு ஸ்கிரிப்ட்டை கையில் எடுக்காமல் படங்களை இயக்குவதில் சிறந்த ஒரு இயக்குனர்.
மாற்றப்பட்ட கதை
அந்த வகையில் டி ராஜேந்தர் மீது எனக்கு நல்ல ஒரு மரியாதை இருக்கிறது. ஆனால் அவர் படம் ஆரம்பிக்கும் போது நீங்கதான் ஹீரோ என சொன்னார். அதற்கு பிறகு படம் முடிவதற்குள் "தங்கைக்கு ஒரு கீதம்" படத்தில் அவருக்கு புகழ் வருகிற மாதிரி அவருடைய கேரக்டரை தூக்கி வைத்து என்னுடைய கேரக்டர் டம்மியாக வைத்தும் எடுத்துவிட்டார். ஹீரோவுக்கான ரோல் இடைவேளைக்கு அப்புறம் வருகிற மாதிரி கதை கதையை மாற்றிவிட்டார்.
சிவக்குமார் வருத்தம்
எனக்கும் ரசிகர்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அப்போ கிடையாது. படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆனது அப்போது ஒரு பெண் ரசிகை என்னிடம் வந்து அழுது கொண்டே கூறினார். அதாவது நீங்க ஹீரோவாக இருந்தாலும் உங்களுடைய கேரக்டர் இடைவெளிக்கு பிறகு தான் வருகிறது என்று அந்தப் பெண் அழுது கொண்டு சொன்னார். அப்போது நான் "சிவக்குமார் ஒன்னும் செத்து விடமாட்டான், தைரியமாக இரு.. என சொன்னேன். பிறகு இதையெல்லாம் தாண்டி வந்து விட்டேன்.
கசப்பான சம்பவங்கள்
இந்த மாதிரி சில கசப்பான சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கிறது. ஆனால் டி ராஜேந்திரன் ஒரு மேதை. அவரே கதை, வசனம் எழுதுவார். டைரக்ட் பண்ணுவார், மியூசிக் போடுவார் எல்லாவற்றிலும் தனிப்பட்ட முறையில் அவர் ஒரு மேதை தான் ஆனால் எனக்கு தான் சின்னதாக வருத்தம் வந்துவிட்டது என்று சிவகுமார் பேசி இருக்கிறார்.

தங்கைக்கு ஒரு கீதம் படம்
டி ராஜேந்திரன் பற்றி அவருடன் நடித்த நடிகைகள் எல்லோருமே பெருமையாக பேசுவார்கள். டி ராஜேந்திரன் எந்த நடிகையையும் தொட்டு பேச மாட்டார் நடிகைகளிடம் அவ்வளவு கண்ணியமாக நடந்து கொள்வார் என்று எல்லோரும் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் சிவகுமார் பேசிய பேட்டி இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தங்கைக்கு ஒரு கீதம் திரைப்படம் 1983 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த திரைப்படத்தை டி ராஜேந்தர் இயக்க அவருடைய மனைவி உஷா ராஜேந்தர் தயாரித்திருந்தார். அதுபோல இந்த திரைப்படத்தில் சிவகுமார், டி ராஜேந்தர், நளினி, ஆனந்தபாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்திற்கு டி ராஜேந்தர் தான் இசை அமைத்திருந்தார். இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம்.












Click it and Unblock the Notifications