பாலா ஏன் இப்படி பண்ணுன? என் மகனை வைத்தே என்னை கேவலப்படுத்திட்டியே! நடிகர் சிவகுமார் ஆதங்கம்
சென்னை: நடிகர் சிவகுமார் தான் ஆடிய பாடலுக்கு தன்னுடைய மகனை வைத்து தன்னை அசிங்கப்படுத்தி விட்டியே? என்று பாலாவிடம் நிகழ்ச்சி ஒன்றில் கேட்டிருக்கிறார். அதற்கு இயக்குனர் பாலா எதிர்பார்க்காத பதிலை கொடுத்திருக்கிறார்.
கோயம்புத்தூரை சேர்ந்த நடிகர் சிவக்குமார் ஆரம்பத்தில் ஓவியராக இருந்து பிறகு சினிமாவில் சின்ன சின்ன கேரக்டர் மூலமாக அறிமுகமாகி, கதாநாயகனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அதுபோல தற்போது அவருக்கு 83 வயதாகிறது ஆனால் இப்போது அவர் சினிமா மற்றும் சீரியல்களை விட்டு விலகி இருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் முன்னணி நடிகர்கள் பலரோடும் சிவகுமார் நடித்திருக்கிறார்.

சிவகுமாரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தற்போது சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவக்குமார் இயக்குனர் பாலாவிடம் கலகலப்பாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் நான் ஆடிய தகதகவென ஆடவா என்ற பாடலை என்னுடைய மகனை வைத்தே கெடுத்துட்ட. உண்மையை சொல்லு, அந்த பாடலை பிதாமகனில் நீ எதற்காக வச்ச? என்னை கிண்டல் செய்வதற்காக வச்சியா? அல்லது வேறு எதற்காக வச்ச? என்று சிவக்குமார் கேட்க, அதற்கு கொஞ்சம் கூட யோசிக்காத இயக்குனர் பாலா அந்தப் பாடலில் நீங்கள் டான்ஸ் ஆடியதும், உங்க கூட ஆடினவங்க டான்ஸும் பார்க்க காமெடியா இருந்தது அதனாலதான் பிதாமகன் படத்தில் சூர்யாவையும் சிம்ரனையும் வைத்து அந்த பாடலை அப்படி எடுத்துவிட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.

இது அந்த அரங்கத்தில் இருந்த அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. சிவக்குமார் பெரிய கோவக்காரர் என்று சிலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். அதுபோல் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தன்னிடம் அனுமதி கேட்காமல் யாராவது செல்ஃபி எடுத்தால் திடீரென்று அவர்களுடைய போனை பிடுங்கி உடைத்துவிடுவார்.
அதுபோல தன்னுடைய மனதில் பட்டதை எந்த மேடையில் யார் என்றாலும் அவர்கள் முன்பே பேசிவிடுவார். அதேபோல பாலாவும் யாருக்கும் பயப்படாமல் தன்னுடைய மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். இப்போது இவர்கள் இருவரும் பேசிக்கொண்டது பலராலும் கலாய்க்கப்பட்டு வருகிறது.

1973 ஆம் ஆண்டு சிவக்குமார் நடிப்பில் வெளியான காரைக்கால் அம்மையார் திரைப்படத்தில் இடம் பெற்ற "தகதகவென ஆடவா" என்ற பாடலுக்கு நடிகர் சிவகுமார் டான்ஸ் ஆடி இருப்பார். அதே பாடலுக்கு அவருடைய மகனான சூரியா நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கிய பிதாமகன் திரைப்படத்தில் கட் சாங்காக பயன்படுத்தி இருப்பார்.
அதிலும் அந்த பாடலுக்கு மட்டும் நடிகை சிம்ரனும் அந்த படத்தில் டான்ஸ் ஆடி இருப்பார். அந்த பாடல் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் பாடல்களில் ஒன்றாக உருவானது. பல திருவிழாக்களிலும், மேடை நிகழ்ச்சிகளிலும் கூட டான்ஸ் ஆடுவதற்கு இந்த பாடலை பலர் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் பாலா சிவகுமாரை கிண்டல் செய்வதற்காகத்தான் இப்படி பயன்படுத்தினார் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. இப்போது அவரே வெளிப்படையாக சிவகுமார் முன்பே பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications