Sivakumar: எங்க அப்பா கருப்பா, சிகப்பானு தெரியாது! நான் இந்த தூரம் வர பட்ட கஷ்டம்! சிவகுமார் உருக்கம்
சென்னை: நடிகரும், நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக்கின் அப்பாவுமான சிவகுமாருக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார். டாக்டர் பட்டத்தை வாங்கிய சிவகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது தன்னுடைய தந்தையின் மறைவுக்கு பிறகு தான் பட்ட கஷ்டங்கள் குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் மூன்றாவது ஆண்டு பட்டமளிப்பு விழா கலைவாணர் அரங்கத்தில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் ஓவியரும் நடிகருமான சிவக்குமார் மற்றும் ஓவியர் குருசாமி சந்திரசேகர் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை முதல்வர் வழங்கினார். நடிகர் சிவகுமார் 80ஸ் காலகட்டத்தில் சினிமாவில் என்ட்ரி ஆனாலும் இப்போது உள்ள தலைமுறைகளுக்கும் இவர் தெரியும். காரணம் அடிக்கடி சோசியல் மீடியாவில் இவர் பரபரப்பு ஏற்படுத்துவார்.

தன்னோடு செல்பி எடுக்க வந்த ஒரு ரசிகரின் செல்போனை பிடுங்கி உடைத்ததை வைத்தே பலரும் இவரை இப்போதும் ட்ரோல் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் ட்ரோல் செய்கிறவர்கள் என்னதான் இவரை கலாய்த்தாலும் இவர் தன்னுடைய கேரக்டரை எப்போதும் மாற்றிக் கொள்வது கிடையாது என்றே சொல்லிக் கொண்டிருக்கிறார்.
சிவகுமாரை நடிகராக பலருக்கும் தெரிந்திருந்தாலும் இவர் ஒரு எழுத்தாளர், மேடைப்பேச்சாளர், கம்பராமாயணத்தில் பிஹெச்டி செய்தவர் என்று பல விஷயங்கள் பலருக்கும் தெரியாது. இந்த விஷயங்களை தான் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார். அப்போது அவர் பேசும்போது நான் என்னுடைய அப்பாவை பார்த்ததே கிடையாது. எங்க அப்பா கருப்பா, சிவப்பானு கூட எனக்கு தெரியாது. ஏன்னா நான் பிறந்து பத்து மாதத்தில் எங்க அப்பா இறந்து போயிட்டாரு.
அப்பா இறந்த பிறகு எங்க அம்மா தான் என்னை கஷ்டப்பட்டு படிக்க வச்சாங்க. அந்த நேரத்தில் ரொம்பவும் கஷ்டப்பட்டேன். கூட படிச்சவங்க எல்லாம் டாக்டராகனும் இன்ஜினியர் ஆகணும்னு சொல்லும் போது எனக்கு மட்டும் ஓவியர் ஆகணும்னு ஆசையாக இருந்து. அதனால படிப்பை முடிச்சதும் சென்னைக்கு வந்து ஒரு கம்பெனியில் உதவி ஓவியரா வேலைக்கு சேர்ந்தேன். அதற்கு கூட சிவாஜி சார் தான் எனக்குரெக்கமண்ட் செய்தாரு.
ஓவியராக வேலை பார்த்துட்டு இருக்கும்போது லீவு நாளில் தஞ்சாவூர் கோயிலுக்கோ இல்லன்னா மதுரை கோவிலுக்கோ போயிடுவேன். காலையிலிருந்து சாயங்காலம் வரைக்கும் உட்கார்ந்து ஓவியம் வரைஞ்சுட்டு இருப்பேன். எப்படியாவது ஓவியர் ஆகணும்னு நான் நினைச்சுட்டு இருந்த நேரத்துலதான் ஓவியம் வரைவதெல்லாம் பெரிய வேலையே இல்ல, இது ஒரு விஷயம்மானு சிலர் கேள்வி கேட்டாங்க. ஓவியருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கல.
இதனால என்ன பண்ணலாம்னு நினைச்சுட்டு இருந்த நேரம் சினிமாவுக்கு போகலாம்னு முயற்சி செய்தேன். அந்த நேரத்தில் சிவாஜி எம்ஜிஆர் எல்லாம் ஹை லெவலில் இருந்தாங்க. என் முகம் அழகா இருக்கு என்று எனக்கு ஒரு சில சாமி படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு ஹீரோவாக நடிக்க தொடங்கினேன். 175க்கும் மேற்பட்ட படத்தில் நடிச்சேன்.
கதாநாயகனாகவும் குணசித்திர வேடங்களிலும் நாம இத்தனை வருஷமா சினிமாவில் இருந்தும் ரஜினி மாதிரியோ, கமல் மாதிரியே நம்மளால வர முடியல... நமக்கு அப்பொழுது இது செட் ஆகாது இனி என்ன பண்ணலாம்னு நினைச்ச நேரத்துலதான் மேடைப்பேச்சு பேசலாம்னு முடிவு எடுத்தேன். அதற்குப் பிறகு அதை நோக்கி என்னுடைய பயணம் போச்சு. நான் 46 வயசு இருக்கும் போது தான் கம்ப ராமாயணத்தில் டாக்டர் பட்டம் பெற்றேன்.
மேடையில் நான் பேசிய வீடியோக்கள் எல்லா டிவியிலும் வந்தது இந்த வயசிலும் என்னால் கம்பீரமாக பேச முடியும். அதற்கு காரணம் பல இடங்களில் விழுந்த அடியும், அதிலிருந்து மேலே வர வேண்டும் என்று நான் எடுத்த முயற்சிகளும் தான். இன்னைக்கு எனக்கு இந்த விருது கிடைத்ததற்கு கூட காரணம் ஆரம்பத்தில் நான் கடுமையாக உழைத்தது தான் என்று சிவக்குமார் பேசி இருக்கிறார்.
சிவகுமாரின் இந்த பேச்சை கேட்ட அதிகமானோர் இவரை நம்ம குறைவா எடை போட்டு விட்டோமோ இவருக்குள் எவ்வளவு திறமைகள் இருக்கிறதா? என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் சில நெட்டிசன்கள் இவர் இப்போ கூட திருந்தல தற்பெருமை பேசிக்கொண்டு இருக்கிறாரே என்று தங்களுடைய வன்மதையும் கொட்டி இருக்கிறார்கள். அதற்கு சிவகுமாரின் ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள். அவர் தான் கஷ்டப்பட்டு அடைந்த வெற்றிகளையும் அனுபவத்தையும் தானே சொல்லுகிறார் அடுத்தவங்களை குறை சொல்லி பேசலையே என்று விவாதத்தை தொடங்கி இருக்கிறார்கள். சிவகுமாரின் பேச்சை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க பாஸ்
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications