கேவலத்தை சிவக்குமாரால் பொறுக்க முடியல.. திடீர் முடிவுக்கு இதுவா காரணம்? யாரந்த நடிகை.. மீண்டும் பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சிவக்குமார், 100 பூக்களின் பெயர்களையும் ஒரே மூச்சில் சொல்லி அசத்தியிருந்த வீடியோ, இன்னமும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதேபோல, சிவக்குமார் ஏன் சினிமாவிலிருந்து ஒதுங்கினார் என்பது குறித்தும் மீண்டும் பேசப்பட்டு வருகிறது.

பிரபல நடிகர், சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு, சென்னையில் உள்ள ஓவியக் கல்லூரியில் பயின்றுள்ளார்.. விளம்பர ஓவியங்கள் வரைபவராக ஆரம்பத்தில் பணியாற்றியுமிருக்கிறார்.

Television Sivakumar Actress

கூடாத பழக்கங்களை தவிர்த்தும், உடற்பயிற்சி மற்றும் யோகாசனம் உள்ளிட்ட மனவளக்கலையில் தீவிர அக்கறை செலுத்தியும், கிசுகிசுக்களுக்கு இரையாகாமலும் இளமைமாறாத உடற்கட்டுடன் இன்றும் காணப்படும் சிவக்குமாரை தமிழ் திரையுலகின் மார்கண்டேயன் என்பார்கள்.

திடீரென சர்ப்ரைஸ் தந்த சிவக்குமார்

தான் உண்டு தன் நடிப்புண்டு என்று தன்னுடைய வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த சிவகுமார், தமிழ் சினிமாவில் எந்த ஒரு கிசுகிசுக்களிலும், வதந்திகளிலும் சிக்காத நடிகர் என்றே கூறலாம். மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்.

கடந்த வாரம்கூட, சென்னை அம்பத்தூரில் உள்ள சேது பாஸ்கரா பள்ளி வளாகத்தில் சிவக்குமாரின் திருக்குறள் 100 உரை தொடர்பான மாணவர்களின் உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுடன் உரையாற்றிய சிவக்குமார், உலகில் உள்ள எல்லா மக்களும் எல்லா வளங்களும் பெற்று நன்றாக வாழ வேண்டும் என புன்சிரிப்பையும் 100 பூக்களை பற்றி, அந்த 100 பூக்களின் பெயர்களையும் மூச்சுவிடாமல் சொல்லி அசத்திவிட்டார்.

கடைசி படம் இதுதான்

ஆனால், ஒருகட்டத்துக்கு பிறகு இவர் சினிமாவில் நடிக்காமல் போய்விட்டார்.. கடந்த 2001ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான 'பூவெல்லாம் உன் வாசம்' படம் தான் சிவகுமார் கடைசியாக நடித்த படமாகும்.

சிவக்குமார் திரைப்படங்களில் சமீபகாலமாக ஏன் நடிப்பதில்லை என்ற காரணத்தை, நேர்காணல் ஒன்றில் மூத்த பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணன் ஒரு சம்பவத்தை பகிர்ந்திருந்தார்.. அதில் அவர் சொல்லும்போது, "சின்னத்திரையில் நடித்து வந்த சிவகுமார், ஒரு நாள் ஷாட்டில் உணர்ச்சிவசமிக்க ஒரு டயலாக்கை பேசிக்கொண்டிருந்தார், அப்போது அதே சீரியலில் நடித்த துணை நடிகை ஒருவர் சத்தமாக போன் பேசிக்கொண்டிருந்தார்.

அந்த சத்தம் சிவகுமாரின் ஷாட்டுக்கு இடையூறாக இருந்திருக்கிறது. அந்த சமயத்தில் இவர் அந்த நடிகையை நோக்கி 'என்னமா இங்க டயலாக் பேசிட்டு இருக்கேன் நீ இப்படி சத்தமா போன்ல பேசிட்டு இருக்க" என்று கூறினார்.

எடுத்த திடீர் முடிவு

அதற்கு அந்த நடிகை ''என்ன சார் இப்படி பண்றீங்க.. இத்தனை வருஷமா நடிச்சிட்டு இருக்கீங்க.. எப்படியும் டப்பிங் பேச போறீங்க டப்பிங்ல பாத்துக்கங்க" என்று சொல்லிவிட்டு, தன்னுடைய போன் பேச்சை அதே சத்தத்துடன் தொடங்கியிருக்கிறார்.

அன்றைய கால சினிமா எப்படி இருந்தது? இன்றைய சினிமா எப்படி இருக்கிறது? என்று இதற்கு மேலும் நாம் நடிக்கணுமா? என்று யோசித்த சிவகுமார், இனி சினிமாவில், சீரியலில் நடிக்க கூடாது என்று முடிவு செய்து விலகியதாக சித்ரா லட்சுமணன் பகிர்ந்திருந்தார்.

கேவலங்களை பொறுக்க முடியல

இந்நிலையில், நடிகர் சூர்யா மற்றும் சிவக்குமார் குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ளார்.. அதில், "ஆரம்பத்தில் சூர்யாவுக்கு கதைத்தேர்வில் சிவக்குமார் சார் உதவியிருக்கலாம். எப்போதுமே சிவக்குமார், தான் நடிக்கும் படங்களுக்கும் நல்ல நல்ல கதைகளையே தேர்ந்தெடுத்து நடிப்பார்.. சிறப்பு மிக்க நடிகர்..

எங்கள் நிறுவனத்தில், தயாரிக்கப்பட்ட தண்டிக்கப்பட்ட நியாயங்கள், தீர்ப்புகள் திருத்தப்படலாம், பௌர்ணமி அலைகள் போன்ற படங்களில் நடித்தார்.. அத்தனையும் நல்ல படங்கள்.. சிவக்குமார் சார் நடித்து, எத்தனையோ படங்கள் ஹிட்டாயின. ஆனால், இந்த சினிமாவின் கேவலங்களை பொறுக்க முடியாமல், சினிமாவிலிருந்தே ஒதுங்கிவிட்டார்..வேண்டாம் என்று முடிவு செய்யும் அளவுக்கு, இந்த சினிமா அவரை தள்ளிவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+