அம்மன் உணவகம் நடத்தி வரும் நடிகர் சூரி! விநாயகர் சதுர்த்தியில் தொடங்கிய புதிய தொழில்!
சென்னை: நடிகர் சூரி ஏற்கெனவே ஹோட்டல் தொழில் செய்து வரும் நிலையில் தற்போது விநாயகர் சதுர்த்தி அன்று புதியதொரு தொழிலை தொடங்கியுள்ளார். அவருக்கு இணையதளவாசிகள் எல்லாம் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
சந்தானம், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் தொலைகாட்சியில் இருந்துதான் சினிமாவுக்குள் நுழைந்தனர். இன்றைய காலகட்டத்தில் இருவருமே பெரிய ஸ்டார்கள்தான். இருவருமே விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு சென்றவர்கள்தான்.

அந்த வகையில் மதுரையை சேர்ந்த சூரி, தனது மதுரை ஸ்லாங்கில் அடிக்கும் லூட்டிகள் அருமையாக இருக்கும். இவர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து காமெடியில் கலக்கியுள்ளார். அண்ணாத்த படத்திலும் ரஜினியுடன் காமெடி செய்திருப்பார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் விடுகதை என்ற படத்தில் ஹீரோவாகவும் சூரி நடித்துள்ளார். இவர் வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்டு பிரமாதமாக நடித்திருந்தார். அதனாலேயே அவர் பரோட்டா சூரி என்றே அழைக்கப்படுகிறார்.
இவர் வின்னர் படத்தில் கைப்புள்ள கேரக்டரில் நடித்த வடிவேலுவின் அடியாளாக வருவார். சூர்யா, கார்த்தி, விஷால், சிவகார்த்திகேயனுடன் நிறைய ரோலில் நடித்துள்ளார். சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த சூரி பின்னாளில் காமெடினாகவும் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் சீரியலிலும் நடித்துள்ளாராம். இவர் திருமதி செல்வம் தொடரில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். அதில் மெக்கானிக் கடையில் பாயாக சூரியும் நடித்திருந்தார். இந்த நிலையில் காமெடியில் கொடி கட்டி பறந்து வரும் சூரி, தற்போது அண்மையில் நடித்த மாமன் படம் செம ஹிட்!
இது காமெடி மட்டும் இல்லாமல் லவ், எமோஷன், கோபம், பாசம், பரிவு என எல்லாவற்றையும் ஒரு சேர சேர்த்து நடித்திருந்தார். இவர் அம்மன் உணவகம் என்ற ஒரு ஹோட்டலை மதுரையில் நடத்தி வருகிறார். அந்த வகையில் அவர் புதியதொரு தொழிலையும் தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து நடிகர் சூரி தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம், இன்று எங்கள் குடும்பத்துக்கு ஒரு இரட்டை மகிழ்ச்சி 💐
என் அன்பு தம்பி, என் twin லக்ஷ்மணன் பிறந்தநாள் 🎂✨
அவரோட உழைப்பு, போராட்டம், தியாகம் இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியமே இல்லை. அதே நாளில் எங்கள் கனவின் அடுத்த படியாக
"அம்மன் ஸ்வீட்ஸ் - புதிய பிரிவு" துவக்க விழாவும் நடந்தது.
இந்த வெற்றி எங்கள் குடும்ப உழைப்போடும்,
உங்கள் அன்பு & ஆசீர்வாதத்தோடும் தான் சாத்தியமானது. என் தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் .
மேலும், உங்களுக்கெல்லாம் இதயம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் . இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications