சர்ச்சையை ஏற்படுத்திய சிவகார்த்திகேயன் பேச்சுக்கு சூரி சொன்ன வார்த்தை.. விழுந்த கைத்தட்டல்கள்
சென்னை: நடிகர் சூரி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் சூரி பற்றி பேசியது பெரிய அளவில் பேசப்படும் நிலையில் சூரி மேடையிலேயே சிவகார்த்திகேயனை கலாய்த்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசியது பெரிய அளவில் பேசப்படுகிறது. அதாவது வாழ்க்கையில் அடி மட்டத்தில் இருக்கும் மக்கள் படும் பாடு ஆண் ஆதிக்கம் போன்றவற்றைப் பற்றி விளக்கும் படமாக இந்த கொட்டு காளி திரைப்படம் தயாராகி இருக்கிறது. கொட்டுக்காளி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு சிவகார்த்திகேயன் படுமாஸாக வந்திருந்தார்.

இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசுகையில், நான் யாரையும் கண்டுபிடிச்சு இவங்களுக்கு நான் தான் வாழ்க்கை கொடுத்தேன், என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் என்னை அப்படியே சொல்லி சொல்லி பழக்கப்படுத்தி விட்டார்கள். அப்படிப்பட்ட ஆள் நான் இல்லை என்று சொல்லி இருந்தார். சிவகார்த்திகேயன் இப்படி பேசியது நடிகர் தனுஷை மறைமுகமாக தாக்கி தான் என்று இணையத்தில் சிலர் மீம்ஸ்கள் வெளியீட்டு வருகிறார்கள்.
காரணம் தனுஷ் தான் சிவகார்த்திகேயனை 3 படத்தின் மூலமாக வாய்ப்பு கொடுத்து சினிமாவில் அறிமுகம் ஆக்கினார். அந்த திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இடையே நல்ல நட்பு உருவானது, எங்கே போனாலும் இருவரும் ஒன்றாகவே பேசுவது அமர்வது என்று ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்தனர்.
ஆனால் ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனுக்கு மார்க்கெட் உயர இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை வளர்த்து விட்டதே தனுஷ் தான் அப்படிப்பட்டவரை இந்த மாதிரி ஒதுக்கலாமா என்று சிவகார்த்திகேயனுக்கு எதிராக சிலர் சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வந்தனர். அதுபோல ஒருமுறை தனுஷ் ஒரு நிகழ்ச்சியில், ஒரு நல்ல காமெடி ஸ்கிரிப்ட் இருந்தால் சொல் என ஒரு இயக்குனரிடம் ஒரு நடிகருக்காக கேட்டேன் என்று சொல்லியிருந்தார்.
அது சிவகார்த்திகேயனுக்காக தான் என்றும் கூறப்பட்டது. அதனால் சிவகார்த்திகேயன் கொட்டுக்காளி ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இப்படி பேசினாரா? என்று பல கேள்விகள் வருகிறது. இன்னும் ஒரு சிலர் விஜய் டிவி குறித்து தான் சிவகார்த்திகேயன் இப்படி பேசினாரா என்றும் இன்னும் சிலர் இசையமைப்பாளர் இமானை தாக்கி சிவகார்த்திகேயன் பேசினாரா? என்றும் பல்வேறு விதமான மீம்ஸ் களும் வதந்திகளும் பரவி வருகிறது.
இது ஒரு பக்கத்தில் இருக்கும் நிலையில் இது பற்றி சிவகார்த்திகேயனை தொடர்ந்து பேசிய சூரி தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார். அதாவது சூரி பேசத் தொடங்கியதும், இன்னைக்கு நிறைய சேனல்களிலும் இணையத்திலும் சிவகார்த்திகேயன் பேசியதுதான் கண்டன்ட்டாகிவிட்டது. அவர் சொன்ன விஷயம் வேறு ஆனால் இங்கே வேறு விஷயமாக எல்லோரும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
அதுபோல முக்கியமான செய்திகள் நிறைய வந்துட்டே இருக்கு ஆனா அதையெல்லாம் விட்டுட்டு இதைத்தான் நிறைய பேரு நோட் பண்றாங்க. அதிலும் எனக்கு எங்கிருந்தெல்லாம் ரசிகர்கள் வருகிறார்கள்? எதில் வருகிறார்கள்? என்றெல்லாம் கூட செய்திகள் சேகரிக்கிறார்கள். அதைப்பற்றி தான் பலரும் பேசிகொண்டிருக்கிறார்கள். சூரிக்கு பஸ்லலாம் ரசிகர்கள் வராங்களே என்று பரபரப்பா பேசுறாங்க.
எல்லோருக்கும் சென்னையில் இருந்து ரசிகர்கள் வர முடியாது. நாலு ஊரிலிருந்து தான் ரசிகர்கள் வரவேண்டும். நாலு ஊரில் இருந்து வருகிறவர்கள் பாதயாததிரையாக வர முடியாது. பஸ்லதான வர முடியும். சூரிக்கு மதுரையிலிருந்து பஸ்ல ஃபேன்ஸ் வராங்க என்று சொல்லுறாங்க. மதுரையிலிருந்து வரவங்க பஸ்ல வராம எப்படி வர முடியும்? ஆனால் அதை கூட ஒரு பெரிய விஷயமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல, இதைக் கேட்டு சிவகார்த்திகேயன் கைதட்டி விழுந்து விழுந்து சிரிக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications