வாடிவாசலில் நடிகர் சூரியை தேடிய உதயநிதி.. மதுரை அலங்காநல்லூரில் கருப்பனை அவிழ்த்துவிட்டதுமே "மேஜிக்"
சென்னை: மதுரையில் பொங்கல் பண்டிகையை தன்னுடைய குடும்பத்தினருடன் சிறப்பாக கொண்டாடினார் நடிகர் சூரி.. இது தொடர்பான வீடியோவையும் சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அதுமட்டுமல்ல, இன்றுதான் சூரியின் கருப்பன் காளை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கிறது.
பிரபல நகைச்சுவை நடிகர் சூரி, நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடியிருந்தார்.. இது தொடர்பாகவும், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு வீடியோவை ஷேர் செய்திருந்தார்.

இந்த வீடியோவுக்கு சூரி, "குடும்பத்திற்குள் விட்டுக்கொடுங்கள்' அன்புகாட்டுங்கள் ! அனுசரித்துப் போங்கள் ! இந்தக் குடும்பத்தில் ஒருவனாக நிற்பதே என் கொடுப்பினை ! கூடுவோம்... கொண்டாடுவோம்! இது எங்கள் வீட்டுப் பொங்கல்.." என்று பதிவிட்டிருந்தது இணையவாசிகளை கவர்ந்திருந்தது.
இந்நிலையில், மதுரையை சேர்ந்த நடிகர் சூரி, ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த காளைதான் தற்போது அனைவரது கவனத்தையும் குவித்து வருகிறது.. இந்த காளையை இந்த முறையும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இறக்கிவிட முடிவு செய்த சூரி, இதற்கெனவே நேரம் ஒதுக்கி காளையை போட்டிக்கு தயார் செய்து வந்தார்.
4 நாட்களுக்கு முன்புகூட, இது தொடர்பாக வீடியோ ஒன்றை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், தன்னுடைய காளைக்கு ரோஜாப்பூ அணிவித்திருந்தார்.. மேலும், அந்த காளைக்கு நடிகர் சூரி அன்புடன் உணவு வழங்கி, அதன் நெற்றியில் முத்தம் தந்தார்.. பிறகு காளைக்கு தீபாராதனை காட்டி, அதன் கயிற்றை பிடித்து கொண்டு நடந்து செல்கிறார். தாடியுடன் காணப்பட்டாலும், பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையை அணிந்திருந்தார் சூரி.
கருப்பன்: இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பன் என்கிற தனது காளையுடன் வீடியோ வெளியிட்டிருந்ததுடன், " பொங்கலுக்கு களத்தில் இறங்க தயாராக நிற்கிறான் கருப்பன்" என இந்த வீடியோவில் அவர் கேப்ஷனும் பதிவிட்டிருந்தார்.
சூரியின் இந்த காளை இன்று 16ம் தேதி நடைபெறக்கூடிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றது.. கடந்த வருடமும், நடிகர் சூரியன் காளை ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் என்னாகுமோ? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
கருப்பன் வெற்றி: அந்தவகையில், சூரியின் காளையான ராஜாக்கூர் கருப்பன், கட்டவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசல் தாண்டி சீறிபாய்ந்த சூரியின் கருப்பனை, எந்த மாடு வீரர்களாலுமே பிடிக்க முடியவில்லை. இப்படி பிடிபடாமல் போனது இது முதல்முறை இல்லை.. ஏற்கனவே 50-க்கும் மேற்பட்ட போட்டிகளில் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில், இதுவரை பிடிபடாத மாடாக இந்த கருப்பன் உள்ளது.
அந்தவகையில் இன்றைய தினமும், கருப்பனை யாராலும் பிடிக்க முடியவில்லை. அதனால் தற்போதும் கருப்பனே வெற்றி பெற்று, பரிசுகளை அள்ளியிருக்கிறது.. முன்னதாக, கருப்பன் காளை கட்டவிழ்த்து வெளியே வந்தபோது, அங்கிருந்த வர்ணனையாளர்கள், அது நடிகர் சூரியின் காளை என்று மைக்கில் அறிவித்தார்கள்.. அதைக்கேட்ட உதயநிதி, எங்கே சூரி, வரவில்லையா? என்று ஆர்வத்துடன் கேட்டார்.
இன்பநிதி: முன்னதாக, அலங்கநால்லூர் ஜல்லிக்கட்டைப் பார்க்க, துணை முதல்வர் உதயநிதியுடன், அவரது மகன் இன்பநிதியும் வந்திருந்து போட்டியைக் கண்டு ரசித்தார். சிறந்த காளை, மாடுபிடி வீரர்களுக்கு இன்பநிதியை வைத்து பரிசு கொடுக்க வைத்தது ஜல்லிக்கட்டு களத்தை தாண்டி, அரசியல் வட்டாரத்திலும் மிகுந்த கவனத்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications