இந்த வயசில் காதலிச்சா தப்பா? கவுண்டமணி எங்க வீட்டில் வாடகைக்கு இருந்தப்போ.. ஆர். சுந்தர்ராஜன் மனைவி எமோஷனல்
சென்னை: நடிகர் ஆர். சுந்தர்ராஜன் மனைவி டப்பிங் கலைஞராக 5000 க்கும் மேற்பட்ட படங்களில் பேசியிருக்கும் நிலையில் முதல் முறையாக தன்னுடைய கணவர் பற்றியும் திருமண வாழ்க்கை குறித்தும் பேசி இருக்கும் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் ஆர். சுந்தர்ராஜனின் மனைவியான துர்கா சுந்தர்ராஜன் தன்னுடைய திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்தும் சந்தோஷங்கள் குறித்தும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதோடு தனக்கும் தன்னுடைய கணவர் சுந்தர்ராஜன்னுக்கும் 10 வயது வித்தியாசத்தில் திருமணம் முடிந்திருந்த நிலையிலும் தங்களுடைய திருமண வாழ்க்கை எப்படி இத்தனை நாள் வருடங்களாக மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருக்கிறது என்பது பற்றி பேசி இன்றைய தலைமுறையினருக்கும் மோட்டிவேஷன் கொடுத்திருக்கிறார்.

அது வகையில் நடிகை சுந்தர்ராஜன்க்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. இவர் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே பல திரைப்படங்களில் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் இருந்து வரும் நிலையில் அவருடைய மனைவியும் டப்பிங் கலைஞராகத்தான் இருக்கிறார். அதுவும் சௌந்தர்ராஜன் மனைவியான துர்கா முதல் முறையாக தூறல் நின்னு போச்சு என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் கதாநாயகிகளுக்கு குரல் கொடுக்க தொடங்கி இருக்கிறார்.
அதற்கு முன்பு குழந்தை பருவத்தில் ஒரு திரைப்படத்திற்கு டப்பிங் பேசியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் 5000க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல முன்னணி நடிகைகளுக்கும் துர்கா குரல் கொடுத்திருக்கிறார். அதிலும் இவர் முந்தானை முடிச்சு, அம்மன் பூவே பூச்சூடவா போன்ற பல படங்களில் குரல் கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் தன்னுடைய கணவர் குறித்து வெளிப்படையாக பேட்டியில் பேசியிருக்கிறார். அதாவது எனக்கும் என்னுடைய கனவருக்கும் ஆரம்பத்திலிருந்து பெரிய அளவில் பிரச்சனை வந்தது கிடையாது. காரணம் எனக்கும் என்னுடைய கணவருக்கும் 10 வயசு வித்தியாசத்தில் தான் கல்யாணம் முடிந்தது. எல்லோரும் சொல்வார்கள் அதிகமான வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்டால் பிரச்சனை வரும் என்று, ஆனால் எங்கள் விஷயத்தில் அப்படி எல்லாம் நடக்கவே இல்லை.
என்னை அவர் எந்த இடத்திலும் விட்டுக் கொடுத்தது கிடையாது. அதுபோல அவர் கோபப்பட்டால் நான் சமாதானம் செய்து விடுவேன். நான் கோபப்பட்டால் அவர் சமாதானம் செய்துவிடுவார். நாங்கள் இந்த வயதிலும் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த வயதில் காதலித்தால் தப்பா என்ன? என்று சிரித்தபடியே கேட்டுக் கொண்டிருந்த துர்கா நானும் என்னுடைய கணவரும் ஆரம்ப காலகட்டத்தில் பிஸியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது பத்து வருடங்களாக காரில் தான் குடும்பம் நடத்தினோம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீங்களா அதுதான் உண்மை என்று கூறியிருக்கிறார்.
மேலும் அவர் பேசுகையில் என்னுடைய கணவர் ஒரு இடத்தில் சூட்டிங்கில் இருப்பார். நான் ஒரு இடத்தில் டப்பிங் பேசிக் கொண்டிருப்பேன் அப்போது அவர் ஊருக்கு வரும்போது என்னை ஒரு காரில் வந்து சந்திப்பார். நாங்கள் அந்த காருக்குள்ளே தான் எங்கள் குடும்ப பிரச்சனைகள், அடுத்து என்ன செய்வது என்பதை எல்லாம் பேசிக் கொள்வோம். ஆற அமர அவரும் வீட்டில் அமர்ந்து என்னோடு பேசியது கிடையாது. அதிகமான நாட்கள் நாங்கள் காருக்குள் தான் பேசிக் கொள்வோம் என்று கூறியிருக்கிறார்.

அதோடு தங்களுடைய வீட்டில் நடிகர் கவுண்டமணி ஐந்து வருடங்களாக வாடகைக்கு இருந்தார். அப்போது என்னுடைய கணவர் கவுண்டமணி எல்லாருமே ரொம்பவும் ஜாலியாக பேசிக் கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில் கூட என்னை எல்லாம் ரொம்பவே கலாய்த்து கொண்டிருப்பார்கள். கவுண்டமணி பிறகு வீடு கட்டி அந்த வீட்டுக்கு போன பிறகு எங்களுடைய வீட்டில் இரண்டு வருடங்களாக அவர் சாவியை தராமல் வாடகை மட்டும் தந்து கொண்டு இருந்தார்.
ஏனென்றால் அந்த வீடு அவருக்கு ராசி என்று சொல்லி இருந்தார். சினிமா துறையில் நான் டப்பிங் பேசிய பல கதாநாயகிகள் இப்போதும் என்னோடு டச்சில் இருக்கிறார்கள். அடிக்கடி மெசேஜ் செய்வார்கள். நான் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் அதிகமான கதாநாயகிகளுக்கு டப்பிங் கொடுத்திருக்கிறேன் எல்லோருமே உங்க குரல் அந்த கதாநாயகிக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது என்று சொல்வார்கள். எனக்கு அது ரொம்பவே சந்தோஷமாக இருக்கும். எனக்கு நடிப்பதற்கு பல வாய்ப்புகள் வந்தது ஆனால் நடிப்பதற்கு எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லை என்பதால் அதை விட்டு விட்டேன் என்று அந்த பேட்டியில் துர்கா சுந்தர்ராஜன் பேசி இருக்கிறார்.
-
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
வாழ்க்கையில் சில நேரம் தோற்று போய் விடுகிறோம்.. எதிர்பாராத விஷயங்கள்! எமோஷனலாக பேசிய நடிகர் பிரசாந்த் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications