இனி நான் இந்த விஜய் டிவி சீரியலில் இல்லை.. கதாநாயகன் போட்ட அதிரடி போஸ்ட்! இனி இதுதான் கதை ?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தனம் சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீகுமார் இனி நான் தனம் சீரியலில் இல்லை என்று பதிவு வெளியிட்டிருக்கிறார். தான் கடைசி நாள் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களை அதில் பகிர்ந்து இருக்கிறார்.
நடிகர் ஸ்ரீகுமார் பல வருடங்களாக சின்னத்திரையில் இருக்கிறார். அதனால் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரீட்சையமானவர்தான். அதே நேரத்தில் வெள்ளி திரையிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் உட்பட ஒரு சில திரைப்படங்களில் முக்கியமான கேரக்டர்களும் நடித்திருக்கிறார். சன் டிவியில் ஸ்ரீகுமார் நடித்து வந்த வானத்தைப்போல சீரியல் சமீபத்தில் தான் முடிவடைந்தது.

விஜய் டிவி சீரியல்
இந்த சீரியல் முடிவடைந்த சில மாதங்களிலேயே விஜய் டிவியில் தனம் சீரியலில் கதாநாயகனாக கமிட் ஆகி இருந்தார். ஆனால் அந்த சீரியலின் கதைப்படி ஹீரோ பாதியிலேயே இறந்து போய்விடுவார். அவருடைய இறப்பிற்கு பிறகு ஹீரோவின் குடும்பத்தை கதாநாயகி தான் கவனித்துக் கொள்கிறார். ஆட்டோ ஓட்டும் ஹீரோவை தன்னுடைய குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி கதாநாயகி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.
தனம் சீரியல் கதை
தனத்தை திருமணம் செய்ததை கதாநாயகன் குடும்பமும் விரும்பவில்லை. ஆனாலும் திருமணத்திற்கு பிறகு தனமும் அவருடைய கணவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அதே நேரத்தில் அம்மாவின் கனவுகளையும், சபதத்தையும் கதாநாயகன் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில்தான் அவருக்கு விபத்து ஏற்படுகிறது. அதுவும் அவருடைய சொந்த தம்பியால் தான் அவர் இறந்து போகிறார். இந்த உண்மை குடும்பத்திற்கு தெரியவில்லை.
நடிகர் ஸ்ரீகுமார் விளக்கம்
ரொம்பவும் சென்சிடிவ் ஆன கேரக்டரில் தான் ஸ்ரீகுமார் அந்த சீரியலில் நடித்திருந்தார். பாதியிலேயே சீரியலில் இறந்து போவதை ரசிகர்கள் விரும்பவில்லை. கதாநாயகனே இறந்துவிட்டால் சீரியல் எப்படி இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனாலும் தான் இந்த சீரியலில் நடிப்பதற்கு முக்கிய காரணம் ஒரு பெண் தன்னுடைய கணவரின் இறப்பிற்கு பிறகு தைரியமாக முடிவெடுக்கிறார், அவருடைய குடும்பத்திற்கு தூணாக இருக்கிறார் இது போன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சீரியலில் நான் கதாநாயகனாக இல்லை, சின்ன கேரக்டரில் நடிக்க வேண்டும் என்றாலும் கூட நடித்துக் கொடுப்பேன் என்று ஸ்ரீகுமார் கூறியிருந்தார்.
கடைசி நாள் புகைப்படம்
ஸ்ரீகுமாரின் காட்சிகள் அந்த சீரியலில் முடிந்துவிட்டன. அவர் இறப்பு காட்சிகளும் வந்துவிட்டது. அவருடைய இறப்பிற்கு பிறகு கதாநாயகி தனம் ஆட்டோ ஓட்டுவதற்காக ஹீரோவிடம் சம்மதம் கேட்கும் காட்சிகள் உண்டு. அதில் கனவில் தான் ஸ்ரீகுமார் வருவது போன்று காட்சிகள் இருந்தது. அதையும் இப்போது நடித்து முடித்துவிட்டார். தன்னுடைய கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை பகிர்ந்த ஸ்ரீகுமார் இனி நான் தனம் சீரியலில் வரமாட்டேன், இதுவரைக்கும் எனக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி இன்னமும் இந்த சீரியலுக்கு தொடர்ந்து நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று அதில் பகிர்ந்து இருக்கிறார்.
பெண்களின் பாராட்டு
அதோடு தனம் சீரியல் ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுத்த சில வீடியோக்களையும் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். தனம் சீரியலில் இவர் நடிப்பதை பார்த்து சில வயதான பெண்கள் இவரை ஆசிர்வதித்து பேசி இருக்கிறார்கள். அந்த காட்சிகளும் ஸ்ரீ தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிந்து இருக்கிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications