சிவகார்த்திகேயன் இப்படி பண்ணுவார்னு நினைக்கல.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ஸ்ரீ நெகிழ்ச்சி
சென்னை: நடிகர் ஸ்ரீகுமார் அமரன் திரைப்படத்தில் தான் நடிக்கும் போது சிவகார்த்திகேயன் தன்னை பார்த்ததும் முதல் நாள் சூட்டிங் ஸ்பாட்டில் செய்த செயல் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். இந்த வீடியோவை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பகிர்ந்து பாராட்டி வருகிறார்கள்.
நடிகர் கமல்ஹாசன் தயாரித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் அமரன் திரைப்படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படமாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்காக பல ரிஸ்க் எடுத்து நடித்த சிவகார்த்திகேயன் திரைப்பட பிரமோஷனுக்காக பேட்டிகளில் பேசிக் கண்டிருக்கிறார்.

அதோடு அமரன் திரைப்படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகர் ஸ்ரீகுமார் அமரன் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில் அவரும் இந்த திரைப்பட அனுபவங்கள் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்.
நடிகர் ஸ்ரீகுமார் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் கூட அவர் நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வானத்தைப்போல சீரியல் முடிவுக்கு வந்தது. அதே நேரத்தில் அமரன் திரைப்படத்தில் தான் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் அது தனக்கு பெருமை என்று ஸ்ரீகுமார் கூறியிருக்கிறார்.
அதோடு ஒரு சிலர் பழசை மறக்காமல் நம்மை பிரமிக்க வைக்கிறார்கள். அதில் ஒருவர் தான் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் டிவி நிகழ்ச்சிகளில் இருக்கும் போதே எனக்கு நல்ல பழக்கம் உண்டு. அந்த நேரத்தில் நான் ஏதாவது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டால் கூட அவர் எனக்கு மெசேஜ் செய்து என்னை பாராட்டி இருக்கிறார்.
அதுபோல நானும் சிவகார்த்திகேயனிடம் பேசி இருக்கிறேன். ஆனால் சில வருடங்களாக எங்களுக்குள் கேப் விழுந்துவிட்டது. அமரன் திரைப்படத்தில் நான் நடிக்க போகிறேன் என்று சொன்னதும் சிவகார்த்திகேயன் முன்பு போல நம்மிடம் பேசுவாரா? இல்லையா? என்ற ஒரு குழப்பமும் தயக்கமும் எனக்குள் இருந்தது.
காரணம் முன்பு இருந்த மாதிரி சிவகார்த்திகேயன் இப்போ இல்ல அவர் டாப்பில் இருக்கும் ஹீரோவாக இருக்கிறார். நம்மளோடு பழைய மாதிரி பேசுவாரா? என்று யோசித்துக் கொண்டே போனேன். முதல் நாள் நான் சூட்டிங் ஸ்பாட்டிற்கு போகும்போது கீழே குனிந்து காலில் ஷூ லேஸ் சிவகார்த்திகேயன் கட்டிக் கொண்டிருந்தார்.
என்னை பார்த்ததும் உடனே ஓடி வந்து கட்டி பிடித்து விட்டார். அண்ணன் எப்படி இருக்கீங்க உக்காருங்க என்று சொன்னார். எனக்கு அங்கு நிறைய பேர் இருந்தபோது உட்காருவதற்கே ஒரு மாதிரி இருந்தது. ஆனால் அண்ணே உட்காருங்க அண்ணே என்று எப்போதும் என்னிடம் உரிமையாக சொல்வது போலவே பல்லை கடித்துக்கொண்டு விளையாட்டா சொன்னார்.
அதற்கு பிறகு நான் அங்கு இயல்பாக இருந்தேன். அந்த சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த கடைசி நாள் வரைக்கும் நல்ல மரியாதை கொடுத்தார்கள். அதற்கு காரணம் என்னிடம் சிவகார்த்திகேயன் நடந்து கொண்ட விதம்தான். ஆனால் இதுபோல எல்லோரும் நடந்து கொள்கிறார்களா என்று கேட்டால் சந்தேகம் தான்.
சீரியலில் நாங்க நடிக்கும் போது சிலர் இப்போ கொஞ்சம் வளர்ந்திருக்கிறாங்க அவங்க எல்லாம் நாம போனா கண்டுக்கவே மாட்டாங்க. ஏன் உட்காருங்கன்னு கூட சொல்ல மாட்டாங்க. நிற்க வைத்து காலுக்கு மேல் கால் போட்டு கெத்தா தான் பேசுவாங்க. நான் காலுக்கு மேல் கால் போடுவது தப்புன்னு சொல்லல.
ஆனால் நம்ம முகத்தில் போடறது மாதிரி உட்கார்ந்திருப்பாங்க. பேசிக்கா உட்காருங்கள் என்று சொல்றதுக்கு கூட கிடையாது. ஏன்னா அவங்க இப்ப வளர்ந்துட்டோம் என்ற கெத்து காமிக்கிறாங்க. ஆனால் சிவகார்த்திகேயன் அப்படி நடந்து கொள்ளவில்லை எனக்கு அது வியப்பா இருந்தது என்று அந்த பேட்டியில் நடிகர் ஸ்ரீ நெகிழ்ச்சியோடு பகிர்ந்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications