பணம் இல்லாதவர்களிடம் தான் ஜாதி பாக்குறாங்க.. குஷ்பூ செஞ்சதை மறக்க முடியாது! நடிகர் ஸ்ரீ வருத்தம்
சென்னை: சன் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த வானத்தைப்போல சீரியலில் கதாநாயகனாக நடித்த நடிகர் ஸ்ரீ, சின்னத்திரையிலும் ஜாதிகள் இருக்கிறது, ஆனால் பணக்காரர்களிடம் ஜாதிகள் பார்ப்பதில்லை ஏழையாக இருப்பவர்களிடம் தான் ஜாதிகள் பார்க்கிறார்கள். அதுபோல எனக்கு நடிகை குஷ்பூ செய்த உதவியை என்னால் மறக்க முடியாது என்றும் பேசி இருக்கிறார்.
கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல் நகரங்களிலும் இன்னும் பல இடங்களில் ஜாதிகள் கொடுமைகள் நடந்து கொண்டிருக்கிறது. இன்று நவீன காலத்திலும் கூட பல இடங்களில் ஜாதி கொடுமைகள் கௌரவத்திற்காகவும், ஆதாயத்திற்காகவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த வன்கொடுமையில் தானும் பாதிக்கப்பட்டதாக நடிகர் ஸ்ரீ பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

நடிகர் ஸ்ரீ இசை அமைப்பாளர் சங்கர் கணேசின் மகன்தான். சங்கர் கணேஷ் 80ஸ் காலகட்டங்களில் அதிகமான திரைப்படங்களில் பாடல் இசையமைத்திருக்கிறார். ஏழு படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். கழுத்து நிறைய நகைகள் கைகளில் மோதிரங்கள் என்று உடல் முழுக்க தங்க நகையால் அலங்காரம் செய்து கொண்டு வலம் வந்த சங்கர் கணேஷின் மகன் ஸ்ரீ ஆரம்பத்தில் கீதாஞ்சலி என்ற சீரியல் மூலமாக தான் தன்னுடைய நடிப்பை தொடங்கி இருக்கிறார்.
அதைத் தொடர்ந்து கண்மணி, அகல்யா, ஆனந்தம் ,மலர்கள், சிவசக்தி இதயம், கனா காணும் காலங்கள், பிள்ளை நிலா, தலையணை பூக்கள், நாணல், யாரடி நீ மோகினி என பல சீரியல்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் முடிவடைந்த வானத்தைப்போல சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதுபோல சினிமாக்களிலும் நடித்து இருக்கிறார்.
தன்னுடைய தந்தையின் பிரபலத்தை வைத்து தான் நடிக்கக் கூடாது தன்னுடைய திறமையை பார்த்து தனக்கு வாய்ப்பு வர வேண்டும் என்று இவர் அதற்காக முயற்சி செய்து பல இடங்களில் அவமானமும் பட்டதாக பேட்டிகளில் எமோஷனலாக பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில், பொதுவாக இந்த சமுதாயத்தில் ஒரு அவலம் இருக்கிறது. எந்த இடத்திலும் ஜாதிகள் தான் முதன்மையாக பார்க்கப்படுகிறது.
என்ன தான் திறமை இருந்தாலும் இவங்க அந்த ஆளுங்களா என்று முத்திரையை குத்துவார்கள். சின்னத்திரையிலும் ஜாதிகள் அதிகமாக பார்க்கிறார்கள். அதுபோல காசு அதிகமாக இருப்பவரிடம் ஜாதிகள் யாரும் பார்ப்பது கிடையாது. ஏழைகளிடம் தான் ஜாதிகள் பார்க்கிறார்கள். பணக்காரனாக இருந்தால் எந்த ஜாதியா இருந்தாலும் பரவாயில்லை என்று சிலர் பழகுகிறார்கள்.
எனக்கு ஒரு பெரிய வாய்ப்பு கொடுத்து என்னுடைய வாழ்க்கையை மாற்றியது குஷ்பூ மேடம் என்று தான் சொல்வேன். அவர்களை என்னால் சினிமாவில் மறக்க முடியாது. கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாணல் என்ற ஒரு சீரியலில் என்னை கதாநாயகனாக நடிக்க வைத்தார்கள். அந்த சீரியலில் முதலில் குஷ்புவின் தம்பிதான் நடிக்க இருந்தார் அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஸ்ரீ நடித்தால் இந்த கேரக்டர் நன்றாக இருக்கும் என்று சொன்னார்.
அந்த சீரியலில் கதாநாயகியாக நடித்தது நடிகை சோனியா அகர்வால். அந்த நேரத்தில் சினிமாக்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். திருமணம் ஆன புதியதில் முதல் வருடத்திற்குள்ளேயே அவர் நாணல் சீரியலில் நடிக்க வந்தார் அவருக்கு ஜோடியாக நான் தான் நடித்தேன். எனக்கு அந்த வாய்ப்பு கொடுத்தது குஷ்பூ மேடம் தான். ஒரு சிலர் ஜாதிகள் பார்க்காமல் திறமையை மட்டும் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள் என்று அந்த பேட்டியில் ஸ்ரீ பேசி இருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications