நடிகர் ஸ்ரீயை கண்டுபிடிச்சாச்சு.. சென்னையில் இல்லை.. அவர் போஸ்ட்க்கு பின்னாடி இருப்பது இதுதான்! பிரபலம் உருக்கம்
சென்னை: கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமடைந்து பல திரைப்படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீ சில நாட்களாக போடும் போஸ்டை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகி இருந்தனர். அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த நிலையில் இப்போது அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டதாக அவருடைய தோழி பேசி இருக்கிறார்.
சமூக வலைத்தளத்தில் இரண்டு நாட்களாக நடிகர் ஸ்ரீ பற்றிய பேச்சு அதிகமாக இருந்து வருகிறது. சின்னத்திரை வெள்ளித்திரை ரசிகர்கள் பலருக்கும் பரீட்சயமான ஸ்ரீயின் பரிதாப நிலை பார்ப்போரை கலங்க வைத்திருக்கிறது. இவரா இப்படி மாறிவிட்டாரே? என்று பலர் பரிதவித்து வருகிறார்கள். இவருடைய சோசியல் மீடியா அக்கவுண்டில் ரசிகர்கள் பலரும் இவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வரவேண்டும் என்று கமெண்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நடிகர் ஸ்ரீ இருக்கும் இடம்
இந்த நிலையில் ஸ்ரீ பற்றி பல தகவல்களும் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. அவர் குறித்து அவருடைய தோழியும் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் ஸ்ரீயின் தோழி இன்று பேசிய ஒரு பேட்டியில் ஸ்ரீயின் தற்போதைய நிலை குறித்து பேசி இருக்கிறார். ஸ்ரீ இப்போது சென்னையில் இல்லை, இவர் எங்கேயோ ஒரு வீட்டில் ஒரு அறையில் அடைந்திருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் ஹரியானாவில் உள்ள குருகிராம் என்ற ஒரு இடத்தில் ஸ்ரீ இருப்பதாகவும், அவர் இருக்கும் சரியான லொகேஷனையும் நாங்கள் கண்டுபிடித்து விட்டோம், ஆனால் அதை இப்போது வெளியே சொல்ல முடியாது ஏனென்றால் அந்த விஷயம் தெரிந்தால் ஸ்ரீ அங்கிருந்தும் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு சென்று விடுவார். அவர் அந்த அளவிற்கு மன உளைச்சலில் இருக்கிறார் என்று அவருடைய தோழி கூறி இருக்கிறார்.
தோழியின் விளக்கம்
ஸ்ரீ போதை பழக்கத்தாலும், மன அழுத்தத்தாலோ ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார் என்று பலர் கூறி வந்தனர். ஆனால் அதை அவருடைய தோழி மறுத்திருக்கிறார். ஸ்ரீ எனக்கு ஸ்கூல் படிக்கும்போது இருந்தே தெரியும் அவர் நடிக்கும் போது கூட புகை பிடிப்பாரே தவிர குடிக்க மாட்டார். அவருக்கு போதை பழக்கம் எல்லாம் கிடையாது. ஆனால் அவருக்கு ஒரு விதமான பிரச்சனை இருந்து கொண்டே இருந்தது.
காதுக்குள் அந்த குரல்
அவருடைய காதுக்குள் யாரோ ஒருவர் எப்போதும் பேசிக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது என்று சொல்லி இருக்கிறார். அவருக்கு 3 படத்தில் நடிகர் தனுஷுக்கு எப்படி ஒரு குரல் கேட்டுக் கொண்டே இருக்குமோ அதே போல ஒரு குரல் கேட்கிறது என்று சொல்லி இருக்கிறார். அதாவது அவருக்கு ஹாலூசினேஷன் என்ற வியாதி இருக்கிறது. இந்த நோய் வந்தால் இல்லாத ஒரு விஷயம் இருப்பதாகவே நம்பிக் கொண்டிருப்பார்கள்.
வித்தியாசமான நோய்
அதுவும் அவருடைய காதுக்குள் கேட்கும் குரல் அவரை தவறாக வழி நடத்துவதாக சொல்லி இருக்கிறார். அதுபோல ஸ்ரீக்கு சொசைட்டி உடன் ஒட்டாமல் தனியாக இருப்பது மற்றும் யாரையும் பார்க்காமல் யாருடையும் பேசாமல் இருப்பது போன்ற ஒரு வித்தியாசமான நோயும் இருக்கிறது, இந்த மாதிரி நோய் வந்தவர்கள் அடுத்தவர்கள் ஏதாவது அட்வைஸ் செய்தாலோ அல்லது அவரிடம் நெருங்கி பழக ஆரம்பித்தாலோ கூட அந்த இடத்தை விட்டு போய்விடுவார்கள் என்று கூறியிருக்கிறார்.

சம்பள பாக்கி
அதுபோல ஸ்ரீ செய்யும் செயல்கள் வேண்டும் என்று செய்யவில்லை அவரை அறியாமலேயே அது போன்று செய்து கொண்டிருக்கிறார். ஸ்ரீ நடித்த இறுகப்பற்று மற்றும் வில் அம்பு போன்ற படத்தில் அவருக்கு முழுமையான சம்பளம் கிடைக்கவில்லை என்று தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் ஒரு வருடத்திற்கு முன்பே போஸ்ட் போட்டு இருக்கிறார்.
தோழியின் வருத்தம்
அதுபோல அந்த போஸ்டை மூன்று முறை ரிப்பீட்டும் செய்திருக்கிறார். இதனால் அந்தப் படத்தில் இவருக்கு சம்பளம் கிடைக்காத விரக்தியும் இவருடைய இந்த நிலைமைக்கு காரணம் என்று கூறப்பபட்டு வருகிறது. இது குறித்து ஸ்ரீயின் தோழி பேசுகையில் வில் அம்பு படத்தில் நடித்ததற்கு தனக்கான சம்பளத்தை கொடுக்காமல் இழுத்தடித்துகின்றனர் என்று என் மடியில் படுத்து அழுது கொண்டு இருந்தான். ஆனால் இனி அவரை சீக்கிரமாக மீட்டு விரைவில் குணமடைய செய்வோம். அவனுக்காக ரசிகர்கள் எத்தனை பேர் வேண்டிக் கொள்கிறார்கள் என்று அவனுக்கு புரிய வைப்போம். அவனை பழைய நிலைக்கு கண்டிப்பாக கொண்டுவர முயற்சிக்கிறோம் என்று அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications