உயிரை குடித்த புற்றுநோய்! நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார்! குடும்பம் கதறல்
சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல குணச்சித்திர நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார். அவருக்கு வயது 58.
இயக்குநர்கள் சரவண சுப்பையா, பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சூப்பர் குட் சுப்பிரமணி. இவர் இயக்குநராக முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் நடிகராகிவிட்டார்.

பரியேறும் பெருமாள், காலா, பிசாசு, ரஜினிமுருகன், ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் பரமன் எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் இவர் சூப்பர் குட் சுப்பிரமணி என அழைக்கப்பட்டு வந்தார்.
இவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அப்போது அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும் அது 4ஆவது கட்டம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சுப்பிரமணியின் குடும்பமே அதிர்ந்தது.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் புற்றுநோய் சிகிச்சைக்கு பண உதவி வேண்டும் என அவருடைய குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சுப்பிரமணி, கமாண்டோவின் லவ் ஸ்டோரி எனும் படத்திற்கு டப்பிங் பேசி முடித்தார்.
பிறகு வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த நிலையில் உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரமாக அவருக்கு சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன. ஐசியூவில் இருந்த நிலையில் புற்றுநோய் அவருடைய மூளை, உள்ளிட்ட உடல் உறுப்புகளில் பரவியதால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்துவிட்டார்.
சுப்பிரமணிக்கு மனைவியும் 11 ஆம் வகுப்பு படிக்கும் மகளும் 9ஆம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். தற்போது சூப்பர் குட் சுப்பிரமணியின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருக்கிறது. இன்று இரவு மேற்கு மாம்பலத்தில் இருக்கும் அவரது இல்லத்திற்கு உடல் கொண்டு வரப்படுகிறது. அவருடைய இறுதிச் சடங்கு நாளை நடைபெறுகிறது. இவரது மறைவுக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
சுப்பிரமணிக்கு புற்றுநோய் என தெரியவந்ததும் அவரது குழந்தைகளின் படிப்புச் செலவை நடிகர் கார்த்தி ஏற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
-
வேலூரை மொத்தமாக நனைத்த கோடை மழை.. மதியம் வரைக்கும் 104 டிகிரி வெயில்.. மாலையில் கனமழை! -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு












Click it and Unblock the Notifications