சிவகார்த்திகேயனின் பராசக்தி துணிச்சல்! சூர்யாவுக்கு வந்த கலர் பயம்.. கிரியேட்டிவிட்டி எங்கே? பிரபலம்
சென்னை: இந்தி எதிர்ப்புக்கு எதிராக சிவகார்த்திகேயன் நடிக்க துவங்கிவிட்டார்.. ஆனால், சூர்யா ஏன் இன்னமும் தயக்கம் காட்டுகிறார்? என்று பிரபல பட தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சந்தேகம் எழுப்பியிருக்கிறார்.. சிவகார்த்திகேயன் நடித்துள்ள "பராசக்தி" பட டைட்டில் குறித்தும் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
1952ல் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான படம் பராசக்தி. 73 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சுதா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படத்திற்கு இந்த பராசக்தி டைட்டிலை வைத்துள்ளார்கள். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது.

அதேசமயம் விஜய் ஆன்டனியும் தன்னுடைய 25வது படத்தின் தலைப்பை வெளியிட்டிருந்தார். இதனால், 2 படங்களுக்கும் ஒரே தலைப்பா? என்பது போன்ற குழப்பங்களும் ஏற்பட்டது. இதனிடையே, ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து சிவகார்த்திகேயன் படத்திற்குதான் பராசக்தி என்ற தலைப்பை முறைப்படி வாங்கி உள்ளார்கள் என்று பராசக்தி படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனமே, ஒரு அறிக்கை வெளியிட்டு, இந்த குழப்பத்தை தீர்த்து வைத்திருந்தது.
பராசக்தி படம்: தாய்மொழி காக்க இந்தி எதிர்ப்புப் போரில் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியான இந்த மாணவனின் கதை தான், சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் என்பதால், இதற்கான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.
இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு , ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில், சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் குறித்தும், நடிகர் சூர்யா நடக்கவிருந்த புறநானூறு படம் குறித்தும், சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
கிரியேட்டிவிட்டி: "பராசக்தி என்பது பவர்ஃபுல் டைட்டில்தான்.. ஏன் உங்களுக்கெல்லாம் புது டைட்டில் கிடைக்கலியா? கிரியேட்டிவிட்டி செத்துப்போயிடுச்சா? யாருக்குமே புதுசா யோசிக்க வரலியா? இந்த பராசக்தி பட டைட்டிலை வைத்துக் கொண்டு, 4 நாட்களாக விவாதம் நடந்துட்டு இருக்கு..
சிவகார்த்திகேயன் நல்லா நடிச்சிருக்காரு என்பது வேற விஷயம். ஆனால், யாருமே பண்ணாத விஷயத்தை, சிவகார்த்திகேயன் அந்த பராசக்தி படத்தில் செய்துட்டதை போல, பரபரப்பை கிரியேட் பண்றீங்களே ஏன்? ஏன் ஒரு நெருப்பை கொளுத்தி போடறீங்க? ஒரு டைட்டிலைகூட சொந்தமாக உங்களால வைக்க முடியல. இந்த பழைய டைட்டிலுக்கு, இவங்களுக்குள்ள போட்டிகள் வேற..!!
நடிகர் திலகம்: நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பிரம்மாண்டமான நடிப்பு, கலைஞர் எழுதிய பவர்ஃபுல் வசனத்தில், ஏவிஎம் தயாரித்த அந்த பராசக்தி படத்தின் வீர்யத்தை, இப்போ இவங்கெல்லாம் மீண்டும் தருவார்களா என்பதே சந்தேகமாக இருக்கு.. நிறைய பொருட்செலவிலும், டெக்னிக்கலாகவும் எவ்வளவோ சினிமா வந்துவிட்டபிறகு, டைட்டிலிலும் புதுமை செய்ய வேண்டியதுதானே?
புறநானூறு படத்தில் ஏன் சூர்யா நடிக்கவில்லை என்று தெரியவில்லை.. தமிழகத்தில் 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்திதான், அந்த படமும் எடுக்கப்படுகிறது. இந்தி பிரச்சனைக்கு எதிராக சிவகார்த்திகேயன் நடிக்கவந்துட்டாரு. ஆனால், அந்த தைரியம் ஏன் சூர்யாவுக்கு இல்லை. தனக்கு கலர் பூசிவிடுவார்கள் என்று பயப்படும்போது, மும்பையில் எதுக்கு சூர்யா செட்டில் ஆகணும்?
யோகிபாபு : எந்த நடிகராக இருந்தாலும், ஒருஅளவுக்கு மேல் வளர்ந்துவிட்டால் மமதை வந்துவிடுகிறது.. நாம நினைக்கிறதுதான் சினிமா, நாம நடிக்கிறதுதான் நடிப்பு என்று நினைத்து கொள்கிறார்கள். நம்மள விட்டால் வேறு காமெடி நடிகரே இல்லை என்று யோகிபாபு சொல்றாராம்.. சினிமா இன்னைக்கு அப்படியாயிருச்சு. சூர்யாவை பொறுத்தவரை மிகச்சிறந்த நடிகர்.. அதில் மாற்றுக் கருத்தே இல்லை.. ஆனால், சில தவறான முடிவுகளை எடுத்துவிட்டாரோ? நல்ல இயக்குனர்களை மிஸ் பண்ணிட்டாரோ? என்று தோன்றுகிறது.
கதைத்தேர்வு: கவுதம் வாசுதேவன், ஹரி, சுதா கோங்கரா போன்றோரின் படங்களை எல்லாம் தவறவிட்டிருக்க கூடாது. சில நல்ல படங்களை சூர்யா மிஸ் பண்ணியதை போலவே, பாலாவிடமும் தன்னுடைய 8 கோடியை மிஸ் பண்ணிட்டாரு. எனவே, கதைத்தேர்வில் சூர்யா இன்னும் கவனமாக இருக்கலாம்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications