டி.ராஜேந்திரன் ரொம்ப நல்லவன்.. என்னை பற்றி அப்படி எழுதினான்.. பழசை மறக்கல! நடிகர் தியாகு எமோஷனல்
சென்னை: நடிகர் தியாகு பேட்டி ஒன்றில் டி.ராஜேந்திரன் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக கருத்துக்களை பெற்று வருகிறது.
டி.ராஜேந்திரன் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், அரசியல் பிரமுகர் என்று பல திறமைகளை கொண்டிருக்கும் நிலையில் அவருடைய திரைப்படம் 80ஸ் காலகட்டத்தில் மட்டுமல்லாமல் இப்போதும் பலரால் விரும்பப்பட்டு வருகிறது. அதிலும் டி ராஜேந்திரனின் அடுக்கு மொழி வசனம் பலருடைய ஃபேவரைட் ஆக இருக்கிறது.

அதனாலேயே இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதோடு இவருடைய மகன் சிலம்பரசனையும் தமிழ் சினிமாவில் களம் இறக்கி பலரையும் வியக்க வைத்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய சிலம்பரசன் இப்போது ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல டி ராஜேந்திரன் மற்ற நடிகர்களைப் போல இல்லாமல் தன்னோடு நடிக்கும் கதாநாயகி மீது தன்னுடைய கை படாமலேயே நடித்து இருக்கிறார்.
அதையே தன்னுடைய சபதம் ஆகவும் எடுத்து இருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. அதுபோல இப்பொழுது ட்ரெண்டிங்கில் இருக்கும் தாடி ஸ்டைலை 80ஸ் காலகட்டத்திலேயே ராஜேந்திரன் கடைப்பிடித்து இருக்கிறார். இந்த நிலையில் ராஜேந்திரன் குறித்து நடிகர் தியாகு சாய் வித் சித்ரா என்ற நிகழ்ச்சியில் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். தியாகு பேசுகையில் காசு பணம் எல்லாம் இன்னைக்கு வரும் நாளைக்கு போய்விடும்.
எவ்வளவு பெரிய கோடீஸ்வரனா இருந்தாலும் காசு யார் கூடயாவது வருதான்னு சொல்ல சொல்லுங்க... செத்தவன் கூட காசு போய் இருக்கா? கடவுள் மேல நம்பிக்கை வச்சு வாழ்ந்தோம்னா கடவுள் நம்ம கூட இருப்பாரு. நான் எல்லாம் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு தான் வளர்ந்து இருக்கிறேன். எங்க வீட்டில நல்ல வசதி தான். ஆனாலும் எனக்குன்னு செலவுக்கு 100 ரூபாய் காசு கூட தந்தது கிடையாது.
ஒருவேளை சாப்பிட்டுட்டு சுத்திட்டு இருந்திருக்கிறேன் என்று பேசிக் கொண்டிருந்த தியாகு டி ராஜேந்திரன் உஷா பத்திரிக்கையில் தியாகு குறித்து எழுதியதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் என்னுடைய நண்பன் டி ராஜேந்திரன் உஷா பத்திரிக்கையில், தியாகு இல்லை என்றால் நான் இல்லை. தியாகு தான் என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தினான். ஒருவேளை சோற்றுக்கு கஷ்டப்பட்டு காய்ந்த வயிற்றுக்கு சோறு போட்டவன் தியாகு என்று டி ராஜேந்திரன் உஷா பத்திரிக்கையில் எழுதி இருந்தான்.
அதன் நான் மறக்க மாட்டேன். டி ராஜேந்திரன் ரொம்ப நல்லவன். ரொம்ப பாசக்காரன். இன்னைக்கு வரைக்கும் அவனும் நானும் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். அப்போ கூட அவன் தியாகு நாம எப்படி எல்லாம் இருந்தோம்டா என்று பழசை எல்லாம் பேசிக்கிட்டு இருப்பான். நேற்று கூட என்கிட்ட எங்களுடைய ஆரம்ப காலகட்டத்தில் நாங்கள் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசிக்கொண்டு இருந்தான். ராஜேந்திரன் இன்னைக்கு எவ்வளவோ வளர்ந்து இருக்கிறான். ஆனாலும் கொஞ்சம் கூட பழசை மறக்கல. அவன் எனக்கு ஆரம்பத்தில் இருந்த அதே நண்பனாக தான் இப்போதும் இருக்கிறான் என்று அந்த பேட்டியில் தியாகு எமோஷனலாக பேசியிருக்கிறார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications