பிரபல இயக்குனர் செய்த அவமானம்.. கூனிக்குறுகி நின்றேன்! சினிமா அவலங்களை உடைத்த நடிகர் வையாபுரி
சென்னை: சினிமாவில் 10, 20 வருடம் இருப்பவர்களுக்கு ஒரு காலத்துக்கு பிறகு வாய்ப்புகள் குறைவது என்பது புதிதல்ல. ஆனால் நீங்கள் பழைய ஆள் இப்போ இன்ஸ்டாகிராமில் புதியதாக நிறைய பேர் இருக்கிறார்கள் என்று சொல்லி ஒரு இயக்குனர் தன்னை சந்திக்க கூட மறுத்துவிட்டதாக நடிகர் வையாபுரி சொல்லி இருப்பது இப்போது சின்னத்திரை, வெள்ளித்திரை வட்டாரத்தில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
நடிகர் வையாபுரி வீடியோ
ஒரு ப்ரொடக்ஷன் மேனேஜர் கூப்பிட்டதால் அந்த இயக்குநரை சந்திக்க வையாபுரி போயிருக்கிறார். சினிமாவில் இத்தனை வருஷங்களாக நடித்த ஒருவர் என்பதால் வழக்கம் போல கதை கேட்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்திருக்கிறார். ஆனால் அங்கே நடந்தது வேறு. இவரை பார்த்ததும் அந்த இயக்குனர் இவரை எதுக்கு இங்க வர சொன்னிங்க? இவர் பழைய ஆள். இப்போ instagramல் புதுசா நிறைய பேர் இருக்கிறாங்க. அவங்கள போட்டாதான் ரசிகர்கள் ரசிப்பாங்க. இவரை எல்லாரும் மறந்திருப்பாங்க அதனால நான் இல்லன்னு சொல்லிருங்க என்று அந்த இயக்குனர் சொல்லிவிட்டாராம்.
இயக்குனரின் அவமானம்
உடனே அந்த அந்த மேனேஜர் இவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அவர் உங்களை சந்திக்க விரும்பல சார் நீங்க போயிட்டு வாங்க என்று சொல்லி இருக்கிறார். அதைக் கேட்டு வையாபுரிக்கு ரொம்பவும் வருத்தமாக இருந்ததாம். ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை ஆனால் பழைய ஆள் என்று ஒதுக்குவது என்பது பல வருடங்கள் சினிமாவில் உழைத்த ஒருவனுக்கு எவ்வளவு வலிக்கும் என்று வையாபுரி உருக்கமாக பேசி இருக்கிறார்.
அதற்கு பிறகு தான் அவர் இன்ஸ்டாகிராமில் வீடியோஸ் வெளியிட ஆரம்பித்திருக்கிறார். இந்த இன்ஸ்டாகிராமில் பாலோவர்ஸ் இல்லை என்றுதானே என்னை ஒதுக்குனீங்க. ஆனா இப்போ என்னை அதிகமான மக்கள் பாலோ பண்ணுறாங்க, எனக்குள்ள திறமையையும் என்னுடைய பழைய கதைகளையும் அவங்க ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று இப்போ நான் காட்டி விட்டேன் என்று அவர் insta வீடியோவில் உருக்கமாக பேசியிருக்கிறார்.

இன்ஸ்டாவில் இணைந்த காரணம்
ஏற்கனவே இதுபோல பல நடிகர்கள் பேசி இருக்கிறார்கள். இப்போது ஒரு நடிகருக்கு இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ், யூடியூப் பிரசன்ஸ், ரிலீஸ் ரீச் என்று இருந்தால் தான் வாய்ப்பு கொடுக்குறாங்க என்று வேதனையை சொல்லி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது வையாபுரியும் இணைந்து இருக்கிறார். 1980 களின் இறுதியில் தேனியில் இருந்து சென்னைக்கு வந்து நடிகராக வேண்டும் என்ற கனவுடன் போராடியவர் வையாபுரி.
வாய்ப்பு கிடைத்த காலத்தில் ஹோட்டலில் வேலை பார்த்துக்கொண்டு தொலைக்காட்சி வாயிலாகவே நடிப்பில் காலடி எடுத்து வைத்து சின்ன சின்ன வேடங்களில் நடித்த பாலு மகேந்திராவின் ராமர் அப்துல்லா படத்தின் மூலம் சினிமாவில் கவனம் பெற்றார். அதற்கு பிறகு காதலா காதலா, துள்ளாத மனமும் துள்ளும், ஜெமினி, போக்கிரி என பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.
வையாபுரி நடித்த படங்கள்
கமல்ஹாசன் உடன் பல படங்களில் இணைந்து நடித்திருந்தார். மணிரத்தினத்தின் ராவணன் படத்தில் அவர் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்து கவனம் பெற்றார். அதுபோல விஜயின் லியோ படத்திலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். அதை தொடர்ந்து தன்னால் முடிந்த அளவிற்கு பயணித்து வருகிறார்.
நடிகர் யஷ் நிகழ்ச்சியில் விபத்து.. ஓடாமல் நின்று வெளிப்படையாக கொடுக்க அட்வைஸ்.. இது பலருக்கு பாடம்!
ஆனாலும் சினிமாவில் அவருக்கென ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் அவருக்கு இருந்து கொண்டே இருக்கிறது. ஒரு சிலருக்கு திறமை இருந்தாலும் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் தான் இருக்கிறது. அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
