பாடகர் மனோ எப்படிப்பட்டவர் தெரியுமா? மலேசியாவில் நடந்த சங்கதியை உடைத்த நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி
சென்னை: பழம்பெரும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பல வருடங்களுக்குப் பிறகு விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் 10 நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற ராக் ஸ்டார் மனோ என்ற ரவுண்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார். அப்போது என்னுடைய வாழ்க்கையில் அதிகமாக நான் சிரிப்பதற்கு காரணம் மனோ தான் என்று எமோஷனலாக வெண்ணிறாடை மூர்த்தி பேசியிருந்தார்.
அதுபோல மனோவால் தான் மலேசியாவில் பட்ட அவஸ்தை குறித்தும் அதற்குப் பிறகு மனோ செய்த ரகளையால் ஒரு பெண்ணை தான் தவறாக திட்டியது குறித்தும் அந்த நிகழ்ச்சியில் வெண்ணிற ஆடை மூர்த்தி மனம் திறந்து பேசி இருந்தார்.

வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களாக மூன்று தலைமுறைகளை கண்ட நடிகர் தான் வெண்ணிற ஆடை மூர்த்தி. இவர் எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் தொடங்கி ரஜினி கமல் கூடவும் நடித்து அதைத் தொடர்ந்து அஜித், விஜய் போன்றவர்களோடும் நடித்து பெயர் வங்கி இருந்த நடிகர் வெண்ணிறாடை மூர்த்தி வெள்ளி திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.
அதிலிருந்து இவர்களுடைய காமெடி இரட்டை அர்த்தத்தில் இருந்தாலும் மக்கள் மத்தியில் அதிகமாக ரசிக்கப்படும். அதிலும் இவருடைய வித்தியாசமான சிரிப்பு இவருக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. வெண்ணிற ஆடை மூர்த்தி கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களை தாண்டி சினிமா துறையில் நடித்து இருக்கிறார்.
அதிலும் இவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கலந்து கொண்ட மீண்டும் மீண்டும் சிரிப்பு என்ற நிகழ்ச்சி ஐந்து ஆண்டுகள் ஒளிபரப்பானது. அதுபோல வெண்ணிற ஆடை மூர்த்திக்கு காமெடி மட்டுமல்ல ஜோதிடமும் நன்றாக தெரியும் என்பதால் அதற்கு ஜீ தமிழில் ஒளிபரப்பான ஜோதிட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் ஜோதிடத்தை மட்டும் சொல்லாமல் இடை இடையே புராண கதைகளையும் சுவாரசியமாக சொல்லி பலருடைய மனதை கவர்ந்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. இதனால் இவருடைய ரசிகர்கள் இவரை தேடிக் கொண்டிருந்தனர். இப்படியான நிலையில்தான் திடீரென்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் 10 நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற ராக் ஸ்டார் மனோ என்ற ரவுண்ட் நடைபெற்ற போது அதில் சிறப்பு விருந்தினராக வெண்ணிறாடை மூர்த்தி கலந்து கொண்டிருந்தார்.
அதில் அவர் பேசுகையில் மனோ என்னுடைய பையன். பொதுவாக தன்னுடைய துணையாகவும், தன்னுடைய கஷ்டங்களையும் பங்கு கொடுத்துக் கொள்பவர்களை தான் பிள்ளைகள் என்று சொல்வார்கள். அந்த வகையில் மனோ எனக்கு எப்போதுமே பிள்ளைதான். நான் அதிகமாக சிரித்தது மனோவால் மட்டும்தான். வீட்டில் நான் சிரிக்கவே மாட்டேன்.
வீட்டில் சிரித்தால் அவர்கள் அதிகமாக அட்வான்டேஜ் எடுத்துக்கொள்வார்கள் என்று நான் சிரிக்க மாட்டேன். வெளியே சினிமாவில் சிரிக்கிறோம் என்றால் அங்கே பணத்திற்காக சிரிக்கிறோம். ஆனால் நிஜத்தில் மனம் விட்டு சிரிக்கிறோம் என்றால் அது மனோவிடம் மட்டும்தான். அதுபோல என்னுடைய இளைய பையனின் பெயர் கூட மனு தான். அதனால் எனக்கு எப்போதுமே மனோவை ரொம்பவே பிடிக்கும். ஆனால் மனோ என்னிடம் தான் அதிகமாக ரகளை செய்வார்.
அவர் ஒரு சேட்டை பிடித்த பையன் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் என்னிடம் செய்த ஒரு சேட்டையை நான் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஒருமுறை மலேசியாவுக்கு நாங்க போயிருந்தோம். அப்போ அங்க ஒரு பொண்ணு என்கிட்ட வந்து இருந்து சார் நான் உங்களோட ரசிகை சின்ன வயசிலிருந்து உங்களோட படங்களை பார்த்திருக்கிறேன் என்று ரொம்ப பாசமா பேசிக்கிட்டே இருந்து. எனக்கு கொஞ்சம் சந்தேகமா இருந்தது, இதுவரைக்கும் நம்மகிட்ட எந்த ரசிகையும் இப்படி பேசினது கிடையாதே என்று யோசித்தேன்.
ஆனால் ஒரு கட்டத்தில் நான் கண்டுபிடித்தேன் அது ஆண் தான் பெண் வேடம் போட்டு வந்திருக்கிறார் என்று அது வேறு யாருமில்லை இந்த மனோ தான், என்னை அப்படி கலாட்டா செய்தது. பிறகு மலேசியாவில் இருந்து வந்த பிறகும் இவர் மாறவே இல்லை. அடிக்கடி போன் போட்டு பெண்போல பேசிக் கொண்டே இருப்பார். ஒரு முறை அப்படித்தான் நான் அதிகமாக திட்டி விட்டேன். நீ யாருன்னு எனக்கு தெரியும் வந்தேன்னா கன்னத்தில் அறைந்திடுவேன் என்றெல்லாம் கூட திட்டி இருந்தேன்.
ஆனால் அது நிஜத்தில் வேறு ஒரு பொண்ணு தான் பேசியிருக்கிறது என்பது எனக்கு பிறகுதான் புரிந்தது. இப்படி இந்த மனோவால் நான் சில பிரச்சனைகளில் சிக்கவும் செய்திருக்கிறேன் என்று அந்த நிகழ்ச்சியில் கலகலப்பாக வெண்ணிறாடை மூர்த்தி பேசியிருக்கிறார். இவரை பல வருடங்களுக்குப் பிறகு இந்த மாதிரி கலகலப்பாக பார்த்த ரசிகர்கள் இவர் மீண்டும் திரைப்படங்களில் வரவேண்டும் என்று வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!!












Click it and Unblock the Notifications