நடிகர் விஜய்யின் அம்மா தொடர்ந்து பார்க்கும் சன் டிவி சீரியல்..? எது தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்
நடிகர் விஜய்யின் அம்மா சோபா சந்திரசேகர் தான் சன் டிவியில் பிரபல சீரியலை தொடர்ந்து பார்ப்பேன் என்று கூறியிருக்கிறார்.
சென்னை: நடிகர் விஜய்யின் அம்மாவான பாடகி சோபா சந்திரசேகர் சமீபத்தில் தான் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலை விரும்பி பார்ப்பேன் என்று கூறியிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து விஜய் டிவியில் இரண்டு சீரியல்கள் பார்ப்பேன் அதற்கு பிறகு தான் டிவியை ஆஃப் பண்ணுவேன் என்று பேட்டி ஒன்றில் சோபா சந்திரசேகர் கூறியிருக்கிறார்.
ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் விரும்பி பார்க்கப்படும் சீரியல் ஆக எதிர்நீச்சல் இருக்கும் நிலையில் தற்போது சோபா சந்திரசேகரின் பேட்டி இந்த சீரியலின் ரசிகர்களுக்கு மேலும் உத்வேகத்தை கொடுத்து இருக்கிறது.

எதார்த்தமான கதைக்கலாம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் நாளுக்கு நாள் ரசிகர்களின் வட்டாரத்தை பெருக்கிக் கொண்டே இருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் பலருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் வருவதும், சீரியலில் அதிகப்படியான அடாவடி இல்லாமல் ஒரு வீட்டிற்குள்ளே நடக்கும் சண்டை சச்சரவு பிரச்சனைகள் எதார்த்தமாக இருப்பதால் இந்த சீரியலை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த சீரியலை பல வருடங்களுக்குப் பிறகு திருச்செல்வன் இயக்கி வருவது மேலும் இந்த சீரியலுக்கு ஒரு சிறப்பாக இருந்து வருகிறது.

எதிர்பார்க்கும் ரசிகர்கள்
எதிர்நீச்சல் சீரியல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பு ஆனாலும் ரசிகர்கள் இந்த சீரியலை பார்ப்பதற்காகவே பலர் காத்து கிடக்கின்றனர். சன் டிவியில் இந்த சீரியல் ஒளிபரப்பு ஆவதால் இதனை சன் டிவியில் ஒளிபரப்பான பிறகு தான் சன் நெக்ஸ்ட் ஆப் இல் பார்க்க முடியும். அதனாலயே சீரியலின் ப்ரோமோ வெளியான நேரத்தில் இருந்து இந்த சீரியல் எபிசோடுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஒவ்வொரு சீரியலின் ப்ரோமோவில் கூட அதிகமான ரசிகர்கள் எதிர்நீச்சல் சீரியலின் பிரமோவை பற்றி அதிகமான கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

விரும்பி பார்க்கும் சீரியல்
எந்த வகையில் நடிகர் விஜய்யின் அம்மாவான சோபா சந்திரசேகர் பேட்டி ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் "எதிர்நீச்சல் சீரியல்" எனக்கு ரொம்ப பிடிக்கும். மேலும் நான் பாண்டியன் ஸ்டோர் சீரியல், பாக்கியலட்சுமி போன்ற சீரியல்களை தொடர்ந்து பார்ப்பேன். இதையெல்லாம் பார்த்து முடித்த பிறகு தான் டிவியை ஆஃப் பண்ணுவேன் என்று கூறியிருக்கிறார். இதை எதிர்நீச்சல் சீரியலின் ரசிகர்கள் பகிர்ந்து பாராட்டி வருகிறார்கள்.

பிரபலங்களின் மனம் கவர்ந்த சீரியல்
ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய வீட்டிலும் எதிர்நீச்சல் சீரியல் பார்க்கப்பட்டு வருவதாக கூறி இருந்த நிலையில், தற்போது நடிகர் விஜய்யின் வீட்டில் எதிர்நீச்சல் சீரியல் பார்க்கப்பட்டு வருகின்றனர். இந்த சீரியல் தொடர்ந்து சாதாரண மக்கள் மட்டுமல்லாமல் பிரபலங்கள் வரைக்கும் பார்த்து பாராட்டப்படும் சீரியலாக இருந்து வருகிறது. ஆதி குணசேகரன் வில்லனாக மிரட்டி கொண்டிருந்தாலும், அவரையும் ரசிக்கும் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர். கதாநாயகியாக ஜனனி குணசேகரனை எதிர்த்துக்கொண்டு வீட்டில் இருக்கும் பெண்களின் சுயமரியாதையை காப்பாற்றி அவர்களை எப்போது எதிர் நீச்சல் அடிக்க வைக்க போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications