நடிகர் விஜயகுமார் மகளா இது? தோழிகளோடு கொண்டாடிய ஃபங்ஷன்.. அட! அந்த கேப்ஷன் தான் செம
சென்னை: நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகளான அனிதா டாக்டராக இருக்கும் நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் தோழிகளோடு கொண்டாடிய ஹோலி பண்டிகை புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அது அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.
விஜயகுமார் வீட்டில் எல்லோருமே நடிகர்களாக இருக்கும் நிலையில் அதில் அவருடைய இரண்டாவது மகள் அனிதா மட்டும் தான் மாறுபட்டு இருக்கிறார். டாக்டருக்கு படித்து முடித்து அனிதா இப்பொழுது வெளிநாட்டில் டாக்டராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் சமீபத்தில் தான் சென்னையில் வீடு வாங்கியிருந்தார். அந்த கிரகப்பிரவேசத்தை பிரமாண்டமாகக் கொண்டாடி இருந்தார். அதைத் தொடர்ந்து அந்த வீட்டில் வைத்து தன்னுடைய மகளுக்கு திருமணத்தையும் பிரம்மாண்டமாக நடத்தி முடித்து இருந்தார்.

நடிகர் விஜயகுமார் ஆரம்பத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகி பிறகு குணசித்திர வேடங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்கள். வெள்ளிதிரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அதிகமாக இவர் நடிக்கும் கேரக்டர்கள் பெருமை வாய்ந்த கேரக்டர்களாக தான் இருக்கிறது. அதிலும் நாட்டாமை, நட்புக்காக போன்ற திரைப்படத்தில் இவருடைய நடிப்பு வேற லெவலில் இருக்கும்.
அதனாலேயே இவருக்கு நாட்டாமை என்ற செல்ல பெயரும் மக்கள் மத்தியில் உண்டு. அதை வைத்தே விஜயகுமார் சீரியல்களிலும் குணச்சித்திர வேடங்களிலேயே நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் விஜயகுமாருக்கு முத்து கண்ணு என்ற மனைவி இருக்கிறார். அவருக்கு அனிதா, கவிதா, அருண் விஜய் என மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.

ஆனால் முத்துக்கண்ணுவோடு ஆரம்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்திருந்தார். அந்த நேரத்தில் நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். மஞ்சுளாவுக்கு வனிதா, பிரித்தா, ஸ்ரீதேவி என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். இதில் நடிகை வனிதா மட்டும் குடும்ப பிரச்சனை காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கிறார். ஆனால் மீதமுள்ள எல்லோருமே ஒரே குடும்பமாக சந்தோஷமாக இருக்கின்றனர்.
அடிக்கடி புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா மட்டும் தனக்கு பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தாலும் அதை விட்டுவிட்டு மருத்துவம் படித்து டாக்டராகி இருக்கிறார். அதுபோல அனிதாவின் கணவர் கோகுலும் டாக்டர்தான். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களை தொடர்ந்து அனிதாவின் மகள் மற்றும் மகனும் டாக்டராக மாறி இருக்கின்றனர். இந்த நிலையில் அனிதாவின் மகள் தியாவிற்கு சமீபத்தில் திருமணம் முடிவடைந்தது. அந்த செய்தி இணையத்தில் அதிகமாக பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னுடைய மகள் திருமணத்திற்கு பிறகு இப்போது அனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தோழிகளோடு கடற்கரையில் ஹோலி பண்டிகை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

அது குறித்த ஒரு கேப்ஷனும் கொடுத்திருக்கிறார். அதில் "உங்கள் மனதில் உறுதியாக இருந்தால் நீங்கள் எப்போதும் சந்தோஷமான விஷயங்களை அனுபவிக்க முடியும் என்பது என்னுடைய அனுபவம். நான் என் சென்னை பெண்கள் அணியுடன் சந்தோஷமாக ஹோலி பண்டிகையை கொண்டாடினேன். பெண்கள் நீங்கள் மிகவும் அற்புதமாக இருந்தீர்கள். அந்த மாலை நேரம் எனக்கு நிறைய பாசிட்டிவான அன்பும், சிரிப்பும் கிடைத்தது. அதனாலேயே இந்த நாள் ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருந்தது" என்று அதில் பகிர்ந்திருக்கிறார்.

அதேபோல தன்னுடைய ஸ்டோரில் ஒரு கியூட்டான வீடியோவும் பகிர்ந்து இருக்கிறார். அது நடிகர் சிவா பேசிய டயலாக் தான். அதாவது அதில் "ஒருவர் நம்மை விட்டு பிரிய வேண்டும் என்று நினைக்கிறார். நாம் வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டால் நாம என்ன செய்ய வேண்டும் என்றால்... உடனே கதவை திறந்து இப்படியே போங்க என்று சொல்லிவிட வேண்டும் அவ்வளவு தான்" என்று அதில் சிவா சிரித்தபடியே பேச அந்த வீடியோவை பகிர்ந்த அனிதா, இது நல்ல முடிவாய் இருக்கு என்று கூறி இருக்கிறார். இதை பலர் லைக் செய்து வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications