பேத்திக்காக இரவோடு இரவாக விஜயகுமார் செய்த வேலை.. கண்கலங்கிய அருண் விஜய்! பிரபலம் ஓப்பன்
சென்னை: சமீபத்தில் பலரையும் வியக்க வைத்த திருமணம் என்றால் அது விஜயகுமார் வீட்டு திருமணம் தான். நடிகர் விஜயகுமார் வீட்டில் அவருடைய குழந்தைகள் எல்லோருமே நடிகர்களாக இருக்கும் நிலையில் அவருடைய பேத்தியின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் இப்போதும் வலம் வந்து கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் விஜயகுமார் வீட்டு திருமணத்தில் நடந்த பல சுவாரசியமான நிகழ்வுகள் பற்றி விஜயகுமாரின் மகளான அனிதாவின் நெருங்கிய தோழி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் விஜயகுமார் தன்னுடைய பேத்திக்காக பார்த்து பார்த்து செய்த வேலைகள் குறித்து அவர் பெருமையாக பேசி இருக்கிறார்.

அந்த வகையில் பொதுவாக திருமணம் என்பது இரு நபர்கள் மட்டும் அல்லாமல் இரண்டு நபர்களை சார்ந்த குடும்பத்தினரும் சந்தோஷமாகவும் நெகிழ்வோடும் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாக இருந்தாலும் சமீபத்தில் நடிகர் விஜயகுமார் வீட்டில் நடந்த திருமணம் பலரையும் வியக்க வைத்து இருந்தது. கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக விஜயகுமார் பேத்தியின் திருமணம் ஒவ்வொரு பங்க்ஷனோடும் நடைபெற்றது.
அதுபோல விஜயகுமாரின் குடும்பத்தில் எல்லோருமே நடிகராக இருக்கும் பட்சத்தில் அவருடைய இரண்டாவது மகள் அனிதா மட்டும் தான் டாக்டர் படித்து ஒரு டாக்டராக இருக்கிறார். இந்த நிலையில் அனிதா தன்னோடு படித்த கோகுல் என்பவரை காதலித்து திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆகி இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சென்னையில் புது வீடு வாங்கி கிரகப்பிரவேசம் வைத்திருந்தார்.

அந்த நேரத்தில் தன்னுடைய மகள் தியாவின் எங்கேஜ்மென்டையும் எளிமையாக முடித்து வைத்திருந்தார். விஜயகுமாரின் மகள் அனிதாவின் மகளும் ஒரு டாக்டராக இருக்கிறார். அவர் லண்டனில் படிக்கும் போது அவரோடு ஒன்றாக படித்த தீலன் என்பவரை காதலித்திருக்கிறார் இவர்களுடைய காதல் இரு வீட்டாருக்கும் தெரிய இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து ஒரு வருடங்களாக இவர்களுடைய திருமணத்திற்கு வேலை பார்த்திருக்கிறார்கள்.
இப்படியாக திருமணம் நாள் வந்தபோது யாரும் எதிர்பார்க்காத சில நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடைபெற்றிருக்கிறது. அதாவது இவர்களுடைய வீட்டில் இரண்டு நாள் மெஹந்தி பங்க்ஷன் நடைபெற்று இருக்கிறது. முதல் நாள் மெஹந்தி பங்க்ஷனில் அவர்களுடைய வீட்டை சார்ந்த பெண்களுக்கு போடப்பட்டிருக்கிறது. அப்போதே 100 பெண்களுக்கு மேலே இருந்தார்களாம். அதோடு இரண்டு நாள் பங்க்ஷன் நடத்த வேண்டும் என்று பிளான் சொன்னது கூட விஜயகுமார் தானாம்.
காரணம் முதல் நாள் வீட்டில் உள்ள பெண்கள் எல்லாம் மெஹந்தி போட்டு விட்டால் பிறகு உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும் வரும்போது அவர்களை வரவேற்பதற்கு ஈசியாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் கடைசி நேரத்தில் இந்த பிளான் போட்டதால் கொஞ்சம் பேருக்கு தகுந்த மாதிரி இடத்தை அலங்காரம் பண்ணுங்க என்று அனிதா சொல்லிவிட்டாராம்.

ஆனால் விஜயகுமார் அனிதா குடும்பத்தினர் மண்டபத்திற்கு வருவதற்கு முன்பு அங்கு ஆட்களை வைத்து பிரம்மாண்டமாக அலங்காரம் செய்திருக்கிறார். ஒரு பெரிய ஊஞ்சல் அது பக்கத்தில் மரத்தில் வண்ண வண்ண விளக்குகள் எல்லாம் ஒளிர விட்டு தன்னுடைய பேத்திக்கு தன்னுடைய அன்பை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்.

அதோடு தியா தன்னுடைய அம்மா அப்பாவோடு ஆரம்பத்தில் துபாயிலிருந்து பிறகு லண்டனுக்கு படிக்க சென்று இருந்தாலும் விடுமுறை நேரத்தில் ஊருக்கு வரும்போது தன்னுடைய மாமாவோடு தான் அதிகமான நேரத்தை செலவிடுவாராம், அதனாலையே தியாவை மணக்கோலத்தில் பார்க்கும்போது அருண் விஜய் கண்கலங்கி இருந்தாராம்.

அதுபோல தியா சங்கீத் பங்க்ஷனில் மேடையில் பேசும்போதும் தன்னுடைய தாய் மாமாவான அருண் விஜய் குறித்து தனக்கு இருக்கும் பாசத்தை வெளிக்காட்ட அப்போது அருண் விஜய் ரொம்பவே பீல் பண்ணி அழுதார் என்று விஜயகுமாரின் மகள் அனிதாவின் தோழி அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

அதோடு தியா தன்னுடைய அம்மா அப்பாவோடு ஆரம்பத்தில் துபாயிலிருந்து பிறகு லண்டனுக்கு படிக்க சென்று இருந்தாலும் விடுமுறை நேரத்தில் ஊருக்கு வரும்போது தன்னுடைய மாமாவோடு தான் அதிகமான நேரத்தை செலவிடுவாராம், அதனாலையே தியாவை மனக்கோலத்தில் பார்க்கும்போது அருண் விஜய் கண்கலங்கி இருந்தாராம்.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications