என் பேரன் ராஜராஜ சோழனின் பரம்பரையிலிருந்து வந்தவன்.. எல்லா தெய்வமும் துணை.. விஜயகுமார் எமோஷனல்
சென்னை: நடிகர் விஜயகுமாரின் பேரனும் நடிகை வனிதாவின் மகனுமான விஜய் ஸ்ரீ ஹரி பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் மாம்போ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கான முதல் போஸ்டர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது விஜயகுமார் தன்னுடைய பேரன் ராஜராஜ சோழனின் பரம்பரையிலிருந்து வந்தவன் என்று பேசியது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
பழம்பெரும் நடிகரான விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். அதில் இரண்டாவது மனைவியான மஞ்சுளாவின் மூத்த மகளான நடிகை வனிதா அவருடைய குடும்பத்தோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். ஆனாலும் வனிதா 2000 ஆண்டில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்திருந்தார். அவருக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற ஒரு மகனும் இருக்கிறார்.

ஆனால் ஆகாஷோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வனிதா அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். விஜய் ஸ்ரீஹரி தன்னுடைய தந்தையோடு தன்னுடைய தாத்தா விஜயகுமாரின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் விஜய் ஸ்ரீஹரி பிரபு சாலமன் இயக்கம் "மாம்போ" என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ரோஜா காம்பைன்ஸ் காஜா மைதீன் இந்த படத்தை தயாரிக்கிறார்.
இந்த படத்திற்கான டைட்டில் அறிவிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு விஜயகுமார் தன்னுடைய பேரன் விஜய் ஸ்ரீஹரி பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் விஜய் ஸ்ரீ ஹரி வாழ்க்கையில் தன்னைத்தானே ஒவ்வொரு கட்டமாக மெருகேற்றி இருக்கிறார். பள்ளியில் படிக்கும் போது அவர் ரொம்பவும் ஆக்டிவாக இருப்பார். சக நண்பர்களோடு இணக்கமாக செயல்படுவார். அதனாலேயே இவருடைய பள்ளி நண்பர்கள் எல்லோரும் அவரை தான் வகுப்பு தலைவராக மாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார்கள்.
ஆனால் அந்தப் பள்ளியின் பிரின்சிபல் விஜய் ஸ்ரீஹரியை வகுப்பு தலைவர் ஆக மாற்ற முடியாது என்று சொல்லிவிட்டார். உடனே எனக்கு விஜய் ஸ்ரீஹரி போன் செய்தார். நான் அடுத்த நாள் சென்று பிரின்சிபலிடம் எதனால் நீங்கள் இவரை வகுப்பு தலைவராக மாற்ற முடியாது என்று சொல்கிறீர்கள். அவரோடு படிக்கும் மாணவர்கள் எல்லோரும் இவர்தான் தலைவராக இருக்க வேண்டும் என்று சொல்லும் நிலையில் நீங்கள் இவ்வளவு உறுதியாக முடியாது என்று சொல்வதற்கு என்ன காரணம் என்று கேட்டேன்.
அதற்கு அவர் விஜய் ஸ்ரீஹரிக்கு படிப்பை விட விளையாட்டில் தான் அதிகமான ஆர்வம் இருக்கிறது என்று சொன்னார். உடனே நான் அப்போ அவருடைய வகுப்பு ஆசிரியை கூப்பிடுங்க அவர்களிடம் கேட்டு விடுவோம் என்று சொன்னேன். அவருடைய வகுப்பு ஆசிரியர் வந்தார். அவரிடம் நான் விஜய் ஸ்ரீஹரி எப்படி படிக்கிறான் என்று கேட்டேன் அதற்கு அவர் படிப்பில் குறை சொல்ல முடியாது நன்றாக தான் படித்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னார்.
அதற்குப் பிறகு பிரின்சிபால் விஜய் ஸ்ரீஹரியை மாணவர்களின் தலைவராக மாற்றி இருந்தார். அதற்கு பிறகு லண்டனுக்கு சென்று சினிமா பற்றிய எல்லா படிப்பையும் படித்திருக்கிறார். நான் எந்த சூழ்நிலையிலும் என்னுடைய பிள்ளைகள் நம்முடைய வற்புறுத்தலினால் எதையும் செய்யக்கூடாது அவர்களுக்காக விருப்பம் எதுவாக இருக்கிறதோ அதில் ஈடுபடட்டும் என்று நினைப்பவன். அதனால் தான் விஜய் ஸ்ரீஹரியிடம் படிப்பு முடிந்து விட்டதே நீ என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டேன்.
அவர் நான் நடிக்கவா அல்லது இயக்கவா என்ற குழப்பத்தில் இருக்கிறேன் என்று சொன்னார். நான் என்னுடைய குழப்பமான முடிவுகளுக்கு எப்போதுமே ரஜினியிடம் தான் ஆலோசனை கேட்பேன். அதுபோல விஜய் ஸ்ரீஹரி பற்றி ரஜினி இடம் ஆலோசனை கேட்டேன். அதற்கு அவர் நல்ல இயக்குனர் நல்ல தயாரிப்பு நிறுவனம் மூலமாக அறிமுகப்படுத்துங்கள் என்று என் பேரனுக்கு சினிமாவில் ஜெயிக்க சில ஆலோசனைகளையும் சொன்னார்.
பிறகு அவருடைய அப்பா ஆகாஷ் ஆசைக்காக பிரபு சாலமன் இயக்கத்தில் அவரை கதாநாயக அறிமுகப்படுத்தலாம் என்று முடிவு எடுத்தோம். காஜா மைதீன் ஒத்துழைப்போடு இந்த படம் வந்துள்ளது. அதுபோல இன்னொரு விஷயத்தையும் நாம் சொல்ல வேண்டும் காஜா மைதீன் வடிவத்தில் அல்லாஹ்வும், இயக்குனர் பிரபு சாலமன் வடிவத்தில் இயேசுவும், இசையமைப்பாளர் இமானின் மாதாவின் ஆசிகளும் என்னுடைய பேரனுக்கு கிடைக்க வேண்டும்.
என்னுடைய பேரன் விஜய் ஸ்ரீஹரி மாமன்னன் ராஜராஜ சோழனின் வம்சத்தில் இருந்து வந்ததால் அவன் சிவனே என்று இருந்து தயாரிப்பாளர், இயக்குனர் என்ன சொல்கிறார்களோ அதை மட்டும் செய்து அவனுடைய ஆசை கனவில் ஜெயிக்க வேண்டும் அதற்கு மக்களும் பத்திரிக்கையாளர்களும் சப்போர்ட் அளிக்க வேண்டும் என்று விஜயகுமார் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதே நேரத்தில் அந்த நிகழ்ச்சியில் சில நிமிடங்கள் பேசிய விஜயகுமார் எந்த இடத்திலும் வனிதா பெயரை உச்சரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications