25 வருட மருத்துவ அனுபவத்தில் சொல்றேன்.. இதை செய்யுங்க! விஜயகுமார் மகள் அனிதா வெளியிட்ட பதிவு
சென்னை: நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் ஆன அனிதா மருத்துவராக இருக்கும் நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மக்களுக்கு வேண்டிய சில அறிவுரைகளை சொல்லி போஸ்ட் போட்டு இருக்கிறார். இது இணையத்தில் பலருடைய பாராட்டை பெற்று வருகிறது.
நடிகர் விஜயகுமாரின் வீட்டில் எல்லோரும் நடிகர்களாக இருக்கும் நிலையில் அவருடைய இரண்டாவது மகள் மட்டும்தான் டாக்டராக இருக்கிறார். இந்த நிலையில் அவர் 25 வருடங்களாக நான் அவசர சிகிச்சை பிரிவில் வேலை பார்த்து வரும் அனுபவத்தில் சொல்கிறேன் எல்லோரும் நிம்மதியாக தூங்க செல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். அதோடு மேலும் சில தகவல்களையும் பகிர்ந்து இருக்கிறார் அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் நடிகர் விஜயகுமார் பல வருடங்களாக சினிமா துறையில் இருந்து வருகிறார். அவர் பல முன்னணி நடிகர்களோடு நடித்து பிரபலமடைந்து இருந்தாலும் அவருடைய வீட்டில் எல்லாருமே நடிகர்களாக இருக்கின்றனர். விஜயகுமார் முத்துக்கண்ணு என்ற மனைவி இருக்கும் நிலையில் அவருக்கு கவிதா, அனிதா, அருண் குமார் என்ற மூன்று பிள்ளைகள் இருக்கும்போது மனைவியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முத்துக்கண்ணுவை பிரிந்த விஜயகுமார் நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மஞ்சுளாவிற்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீ தேவி என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் தான் நடிகர் விஜயகுமாரின் பேத்தி அதாவது விஜயகுமாரின் இரண்டாவது மகளான அனிதாவின் மகள் டாக்டர் தியாவிற்கு திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அது இணையத்தில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோல விஜயகுமாரின் வீட்டில் எல்லோரும் ந நடிகர்களாக இருக்கும் நிலையில் அனிதாவிற்கும் ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது அவருடைய அம்மா திரைப்படங்களில் நடிக்க வைக்க மாட்டேன் என்று உறுதியாக கூறிவிட்டதால் அவர் மருத்துவராகி இருந்தார்.

அதற்கு பிறகு அந்த நேரத்தில் தன்னோடு ஒன்றாக படித்த டாக்டர் கோகுல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தியா மற்றும் ஸ்ரீஜெய் என்ற மகன் இருக்கும் நிலையில் தியாவை போலவே ஸ்ரீஜெய்யும் சமீபத்தில் தான் டாக்டர் ஆகியிருந்தார். அந்த மகிழ்ச்சியை அனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார்.
அதுபோல அனிதா மருத்துவராக பிசியாக இருந்தாலும் கிடைக்கும் நேரங்களில் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். கிடைக்கும் நேரங்களில் சில போட்டோ சூட் புகைப்படங்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில், "எல்லோரும் தூங்கும் போது நிம்மதியாக தூங்க செல்லுங்கள். எதையும் நினைத்து மனதை சஞ்சல படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
நான் 25 வருடங்களாக அவசர சிகிச்சை பிரிவில் வேலை பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன்... பலருக்கும் எந்த ஒரு அசெளகரியத்தையும் ஏற்படுத்தாமல் மரணம் வந்து கொண்டிருக்கிறது. அதனால் இருக்கிற வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டாடுங்கள். கடந்து போனதையோ அல்லது நடக்காததையோ நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள்..." என்று கூறியிருக்கிறார்.
அதுபோல இன்னொரு ஸ்டோரில் என்னுடைய மகள் அவளுடைய மாமியாராகவும் தாயாகவும் இருக்கும் இன்னொரு வீட்டிற்கு போயிருக்கும் நிலையில் எனக்கு இருந்த கவலைகள் குறைய தொடங்கி விட்டது. அதனால் நான் என்னை கவனித்து இளமையாக திரும்பிக் கொண்டிருக்கிறேன் என்று ஸ்டைலிசாக ஹேர் ஸ்டைலை மாற்றி கியூட்டாக அவர் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அது இணையத்தில் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.
அதுபோல அனிதா விஜயகுமார் சமீபத்தில் தன்னுடைய மகளுக்கு திருமணம் முடிந்திருந்த நிலையில் நேற்று முன்தினம் தன்னுடைய மகள் மற்றும் மருமகனுக்கு சென்னையில் பிரமாண்டமாக விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அப்போது குடும்பத்தோடு எடுத்த புகைப்படங்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications