தன் மகன் விஜயின் பிறந்த நாளில் திடீர் வீடியோ வெளியிட்ட எஸ்.ஏ சந்திரசேகர்.. இப்படி ஒரு வேண்டுகோளா?
சென்னை: நடிகர் விஜய்யின் ஐம்பதாவது பிறந்த நாளான இன்று அவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர் தன்னுடைய மகனிடம் பெரிய வேண்டுகோள் ஒன்றை வைத்து அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோ அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
நடிகர் விஜய் தன்னுடைய பிறந்த நாளை ரசிகர்கள் யாரும் கொண்டாட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனாலும் அவருடைய தீவிரமான ரசிகர்கள் விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். இன்று கூட காலையில் விஜய் பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஒரு சிறுவர் கையில் நெருப்பு வைத்து செங்கல்லை உடைக்கும் வீர செயல் செய்யும் போது தவறுதலாக கையில் நெருப்பு பட்ட வீடியோ பெரிய அளவில் பரபரப்பு ஏற்படுத்தியது.

பிறகு அந்த சிறுவர் சாகசம் செய்பவர்களின் வாழ்க்கையில் இதுவெல்லாம் சகஜம் என்று ஒரு வீடியோவும் வெளியிட்டு இருந்தார். சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்தால் பலர் உயிரிழந்த நிலையில் உடனே தன்னுடைய கருத்துக்களை விஜய் அறிக்கையாக வெளியிட்டிருந்த நிலையில் அதுவும் பெரிய அளவில் பேசப்பட்டது. எந்த நடிகர்களும் பேசாமல் தயங்கிக் கொண்டிருக்கும் போது முதல் ஆளாக விஜய் இந்த சம்பவத்திற்கு குரல் கொடுத்திருக்கிறார் என்று பலர் அவரை பாராட்டி வந்தனர்.
அது போல விஷ சாராயம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் விஜய் சந்தித்திருந்தார். இது சிலருடைய பாராட்டுகளையும் பலருடைய விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று விஜயின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் சந்திரசேகர் பேசுகையில், ஹலோ விஜய் இந்த பிறந்தநாள் உனக்கு சிறப்பான பிறந்த நாளாக இருக்க வேண்டும் என்று நான் வேண்டுகிறேன்.
உன்னால இந்த தமிழ் நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும்... குறிப்பா தாய்மார்களுக்கு செல்ல பிள்ளையாகவும், இளைஞர்களுக்கு அண்ணனாகவும், தம்பியாகவும், தோழனாகவும், மாறனும்னு நான் ஆசைப்படுறேன் என்று அந்த வீடியோவில் தன்னுடைய மகன் விஜய்யிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்ற நிலையில் பலரும் இந்த வீடியோவில் விஜய்க்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
ஏற்கனவே விஜய்யின் பிறந்த பிறந்தநாளில் அவரைப் பார்க்க வேண்டும் என்று அவருடைய வீட்டு வாசலில் பல இளைஞர்கள் காத்திருந்த நிலையில் அவர்களுக்கு விஜய் திடீர் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். அந்த வீடியோக்களும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications