சூர்யா பற்றி பெருமையாக பேசிய சிவகுமார்.. பழசு எல்லாம் மறந்துடுச்சா? விஷால் கொடுத்த விளக்கம்!
சென்னை : நடிகர் சிவகுமார் தன்னுடைய மகன் சூர்யா தான் தமிழ் சினிமாவில் முதலில் சிக்ஸ் பேக் வைத்த நடிகர், அதற்கு முன்பு யாரும் வைக்கவில்லை என்று ரெட்ரோ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசி இருந்தார். இது குறித்து இணையத்தில் பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் நடிகர் விஷால், தனுஷ் தான் முதல் முதலாக சிக்ஸ் பேக் வைத்தது அதற்கு பிறகு நான் வைத்தேன் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் தான் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகர் சிவகுமாரும் ஒருவர். இவர் பேசுவது மற்றும் நடந்து கொள்வது அடிக்கடி இணையத்தில் ரசிகர்களால் விமர்சனங்களை சந்திக்கப்பட்டு வருகிறது. நடிகர் சிவகுமார் இப்போது சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் தனியார் நிகழ்ச்சிகள் மற்றும் கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருகிறார்.

அதிருப்தி செயல்
தமிழ் மீது தனக்கு இருக்கும் காதலை மேடைகளில் வெளிப்படுத்தி வருகிறார். அதே நேரத்தில் ரசிகர்களிடம் இவர் பேசுவது தான் விமர்சனங்களை சந்திக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு சிவகுமாரை ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயற்சி செய்தபோது சிவக்குமார் அவருடைய போனை பிடுங்கி உடைத்து விட்டார். இது பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு பிறகு இவரிடம் செல்பி எடுக்க வேண்டும் என்றாலே ரசிகர்கள் பயந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அப்பா பாசம்
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகுமார் பேசியதும் பெரும் பரபரப்பை விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. பொதுவாக எல்லா பெற்றோருக்கும் தங்களுடைய பிள்ளைகள் தான் பெஸ்ட். ஆனால் அதே நேரத்தில் மற்றவர்களை குறைத்து பேசி தன்னுடைய பிள்ளை மட்டும் தான் திறமைசாலி என்று பேசுவதை யாரும் விரும்ப மாட்டார்கள்.
மீண்டும் வரும் சூர்யா
அதுபோலத்தான் நடிகர் சூர்யா பல திரைப்படங்களில் தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். திரைப்படக் காட்சிக்காக தன்னால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவிற்கு உழைப்பையும் கொடுத்து வருகிறார். சமீப காலமாக அவருடைய திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி கொடுக்கவில்லை. ஆனாலும் அவர் மீண்டும் பழைய நிலைக்கு வருவார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.
சிவகுமார் சொன்ன கருத்து
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் என்னுடைய மகன் சூர்யா தான் முதல் முறை சிக்ஸ் பேக் வைத்தது. அதற்கு முன்பு எந்த நடிகர்டா வச்சது என்று சிவக்குமார் பேசி இருந்தார். சூர்யாக்கு பிறகும் எந்த நடிகரும் சிக்ஸ் பேக் வைக்கவில்லையே என்று சிவகுமார் பேசியது தான் ரசிகர்களை ட்ரிகர் செய்து விட்டது. அப்போ எங்க நடிகர் எல்லாம் வைத்தது சும்மாவா? என்று பலர் கேள்வி எழுப்பினர்.
சிக்ஸ் பேக் நடிகர்கள்
அதாவது சூர்யாவுக்கு முன்பே தனுஷ், விஷால், அர்ஜுன், அருண்பாண்டியன், மொட்டை ராஜேந்திரன் போன்ற பலர் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார்கள். ஆனால் இவர் அதையெல்லாம் மறந்துவிட்டாரே என்று பலரும் பேசி வந்தனர். இந்த நிலையில் இது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் விஷால் பேசும்போது தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார். அதில் பேசும்போதே சிரித்துக் கொண்டுதான் பேச்சை தொடங்குகிறார்.
விஷால் விளக்கம்
முதல் முதலில் சிக்ஸ் பேக் வைத்தது தனுஷ் தான். வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன் படத்திற்காக தனுஷ் தான் முதல் முதலில் சிக்ஸ் பேக் வைத்தது. அதற்குப் பிறகு 2008 ஆம் ஆண்டில் சத்தியம் திரைப்படத்திற்காக நான் வைத்தேன். அந்த படத்திற்கு பிறகு மதகஜராஜா படத்திற்காகவும் வைத்தேன். அதற்கு பிறகு மற்றவர்கள் வைத்தார்கள் ஆனால் இதை எல்லாம் அவர் மறந்து பேசி இருப்பார் என்று விஷால் சிரித்தப்படியே விளக்கம் கொடுத்து இருக்கிறார். விஷால் தனுஷ் முதல் முதலில் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார் என்று கூறினாலும் ரசிகர்கள் மொட்டை ராஜேந்திரன் நான் கடவுள் படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்திருந்தாரே என்று ஞாபகப்படுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications