காதலை அறிவித்த அடுத்த நொடி, தன்ஷிகா திரும்பியதும் ரேகா நாயருக்கு முத்தம் கொடுத்த விஷால்.. நெகிழ்ந்த நடிகை
சென்னை: நடிகர் விஷால் தனக்கு விரைவில் திருமணம் நடக்கப்போகிறது என்று சில நாட்களுக்கு முன்புதான் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து நேற்று தன்னுடைய வருங்கால மனைவி யார் என்பது குறித்து அறிவித்தார். தான் நடிகை சாய் தன்ஷிகாவை கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாக கூறியிருந்தார். இதனால் எல்லோரும் அவரை பாராட்டி இருந்தனர். அப்போது விஷாலுக்கு வாழ்த்து சொன்ன நடிகை ரேகா நாயருக்கு நெற்றியில் முத்தம் கொடுத்து தன்னுடைய அன்பை விஷால் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தீராத விளையாட்டு பிள்ளை என்ற படத்தில் விஷால் நடித்தது தான் நடித்தார் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டிருக்கிறார். பல வருடங்களாக சினிமாவில் இருக்கும் விஷால் அந்த நடிகையை காதலித்தார், இந்த நடிகையை காதலித்தார் என்றெல்லாம் அடிக்கடி செய்திகள் பரவி வருவது வாடிக்கைதான். இவர் பேசுவது மட்டுமல்லாமல் சில நிகழ்ச்சிகளில் கெஸ்ட் ஆக கலந்து கொண்டால் கூட அந்த நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு சம்பவம் செய்துவிட்டு போய்விடுகிறார்.

விஷால் காதலிக்கும் நடிகை
சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய திரைப்படத்தின் பிரமோஷனில் கலந்துகொண்டபோது இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததை பார்த்ததும் ரசிகர்கள் பதறிப் போயிருந்தனர். அந்த நேரத்தில் விஷால் குறித்து பல்வேறு வதந்திகளும் பரவி வந்தது. ஆனால் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு வாரத்திலேயே பழைய நிலைக்கு திரும்பிய விஷால் அனைவரிடமும் கெத்தாக பேசி இருந்தார்.
விஷால் திருமண தேதி அறிவிப்பு
அதுபோல தன்னுடைய ரசிகர்கள் தன்மீது வைத்திருக்கும் அன்பைத்தான் புரிந்து கொண்டதாகவும் கூறியிருந்தார். விஷாலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே? இவருக்கு எப்போது தான் திருமணம் என்பது பலருடைய கேள்வியாக இருந்தது. இதற்கு சில மாதங்களுக்கு முன்பே விஷால் விளக்கம் கொடுத்திருந்தார். நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழாவை தொடர்ந்து என்னுடைய திருமணம் தான் முதலில் அந்த மண்டபத்தில் நடக்கும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று நடிகை சாய் தன்ஷிகாவே தான் காதலிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இசை வெளியீட்டு விழா
தன்ஷிகா நடித்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஷால் தன்னுடைய திருமண தேதியையும் அறிவித்திருந்தார். அதேபோல விஷால் தன்னை நம்புபவர்கள் மீது அளவு கடந்த அன்பை காட்டுவார் என்பது எல்லோரும் சொல்லி இருக்கிறார்கள். அதே நேரத்தில் அதே அன்பு காட்டுதலே அவருக்கு சர்ச்சைகளையும் உருவாக்குகிறது. பல வருடங்களுக்குப் பிறகு வெளியான மத கஜ ராஜா திரைப்பட பிரமோஷனில் நடிகை குஷ்பூ மற்றும் அஞ்சலியை பார்த்ததும் கட்டி அணைத்து இருந்தார். அந்த வீடியோக்கள் அந்த நேரத்தில் அதிகமாக ட்ரோலானது.

நடிகைக்கு முத்தம்
அதேபோல நேற்று தான் சாய் தன்ஷிகாவை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று அறிவித்திருந்தார். அந்த நேரத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் விஷால் மற்றும் தன்ஷிகா ஜோடிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டு இருந்தனர். அப்போது விஷாலுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வந்த நடிகை ரேகா நாயரை பார்த்ததும் அவரைக் கட்டி அணைத்து நெற்றியில் முத்தம் கொடுத்து தன்னுடைய அன்பை விஷால் வெளிப்படுத்தி இருந்தார்.
ரேகா நாயர் அதிரடி
அதற்கு முன்பு சாய் தன்ஷிகாவிற்கும் தலையில் முத்தம் கொடுத்து இருந்தார். இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து வழக்கம் போல விஷாலை சிலர் விமர்சிக்க தொடங்கிவிட்டனர். ரேகா நாயர் தன்னை பற்றி ஏதாவது வதந்திகள் பரவினாலோ அல்லது யாராவது சர்ச்சையாக பேசினாலோ அவர்களை முகத்துக்கு நேராகவே வெளுத்து வாங்கி விடுவார். ஆனால் இப்பொழுது விஷால் அவருக்கு கொடுத்த முத்தம் குறித்து அவரே அமைதியாக தான் பேசிக் கொண்டு இருந்தார். ஆனால் இது குறித்து பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications