Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஷாலா இது? "திரும்ப வந்துட்டேனு சொல்லு".. வதந்தியை நொறுக்கி, மதகஜராஜா பார்க்க கெத்தாக வந்த விஷால்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகர் விஷாலின் இன்றைய வீடியோ ஒன்று, தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதைப்பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் பூரித்து போயிருக்கிறார்கள்.. விஷாலுக்கு என்ன ஆச்சு தெரியுமா?

கடந்த வாரம் மதகஜராஜா விழாவுக்கு விஷால் வந்திருந்தபோது, ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை தந்திருந்தார. கடும் காய்ச்சலுடனே படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு வந்துள்ளார் என்று விளக்கம் தரப்பட்டது.

television vishal actor vishal

ஆனாலும், விஷால் நடுக்கத்துடன் பேசியது, மைக்கைகூட பிடிக்க முடியாமல் தடுமாறியது, வித்தியாசமான தோற்றத்தில் காணப்பட்டது, சரியாக பேசக்கூட முடியாமல் நாக்கு குழறியது போன்றவை எல்லாமே வீடியோவாக இணையத்தில் வெளியாகி பெரும் வைரலானது. இதனை பார்த்த ரசிகர்கள், அவருக்கு என்னாச்சு? என்று கவலையுடன் கேட்க துவங்கினார்கள்.

டாக்டர்கள்: விஷாலின் டாக்டர்கள், அவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் குறித்து விளக்கம் தந்து அறிக்கை வெளியிட்டார்கள்.. எனினும் யூடியூப் சேனல்கள், விஷாலின் உடல்நிலை குறித்த பல்வேறு தகவல்களை வெளியிட்டவாறே இருந்தனர்.

"விஷால் ஏற்கனவே மதுபழக்கம் உள்ளவர்.. ஏகப்பட்ட கடன் தொல்லைகள் இருக்கின்றன.. இதன்காரணமாகவே நிறையவே இப்போது மனஉளைச்சலில் உள்ளார். மதுப்போதைக்கு அடிமையாகிவிட்டார்.. மதுவஸ்துக்களுக்கும் ஆளாகிவிட்டார்.. கோகைன் உள்ளிட்டவைகள் எடுத்து கொண்டார்.. மது, மாது பழக்கம் கை உதறலுக்கு காரணம்.. விஜயகாந்த் போலவே நிலைமை ஆகிவிட்டது" என்று பல்வேறு தகவல்களை வெளியிட்டனர்.

மேலும் சிலர், அவன் இவன் படத்தில் மாறுகண் வேண்டும் என்பதற்காக கண்ணை தைத்துக் கொண்டதாகவும், இதற்கெல்லாம் காரணம் பாலாதான் என்றும் குற்றஞ்சாட்டினார்கள்.

சிகிச்சை: எனினும், விஷாலின் நண்பர்கள், விஷால் உடல்நிலை தேறி விரைந்து வருவார் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.. டாக்டரை பார்த்து சிகிச்சை எடுத்துக்கொண்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும் அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவித்தனர்.

நேற்றுகூட, ஜெயம்ரவி ஒரு பேட்டியில், " விஷாலை விட ஒரு தைரியசாலி யாரும் கிடையாது. அவருக்கு ஒரு கெட்ட நேரம் என்று சொல்லலாம். அவருடைய தைரியம் அவரை காப்பாற்றும். அவருடைய நல்ல மனசுக்கு கூடிய விரைவில் சிங்கம் மாதிரி திரும்ப வருவார்" என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

ஜெயம்ரவி: இந்நிலையில், ஜெயம்ரவி சொன்னதுபோல, விஷால் சிங்கம் மாதிரி திரும்ப வந்துவிட்டார்.. மதகஜராஜா பிரிமியர் ஷோவுக்காக, விஷா இன்று சத்யம் தியேட்டருக்கு வந்திருந்தார். கருப்பு கலர் காரில், கெத்தாக வந்திறங்கினார்.. டீ-ஷர்ட், தொப்பியுடன் கேஷூவலாக வந்த விஷால் அங்கிருந்தவர்களை பார்த்து கைகுலுக்கினார்.. நடிகர்கள், ஷாம், நடிகை குஷ்பு என திரைபிரபலங்கள் அனைவரும் விஷாலை கட்டிப்பிடித்து வரவேற்றனர்..

கடந்தவாரம் பார்த்த விஷால் போல இன்று இல்லை.. ஆளே தெளிவுடன் காணப்படுகிறார். கண்ணில் அந்த கண்ணாடி காணவில்லை.. பார்ப்பதற்கு பழைய விஷால் போலவே காணப்பட்டார்.. இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி கொண்டிருக்கிறது. விஷாலை பார்த்ததுமே அவரது ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இணையவாசிகள்: கடந்த வாரம் விஷாலின் கை உதறலை பார்த்த இணையவாசிகள் சிலர், பட பிரமோஷனுக்காகவே அவர் இவ்வாறு நடந்து கொள்வதாக கூறியிருந்தனர். டாக்டர்கள் தரப்பினரோ, வைரல் காய்ச்சலால் அவ்வாறு காணப்பட்டதாக கூறியிருந்தனர். இதில் எது உண்மை என்று தெரியவில்லை.. ஆனால், அதே கம்பீரத்துடன், தெளிவுடன், கெத்தாக காணப்பட்ட விஷாலை பார்த்த குஷியில் ரசிகர்கள் திக்குமுக்காடி போயிருக்கிறார்கள்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+