பேசிட்டேயிருந்த விஷாலுக்கு.. பழையபடி பார்க்க முடியாதா? விஜயகாந்த்துக்கு பிறகு ஆக்ஷன் ஹீரோ: பிரபலம்
சென்னை: பொதுவாக, உடல்நலம் பாதித்த நடிகர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் வராது என்பதே உண்மை.. நடிகர் சங்க பொதுச்செயலாளர் என்ற பதவியில் உள்ளதால், அனைத்திலும் ஒரு வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார்.. அத்துடன் நடிகர் விஷாலின் உடல்நலம் பாதிப்புக்கு காரணம் என்ன? உண்மையிலேயே அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறதா? என்றும் சந்தேகம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
நேற்றுமுன்தினம் நடந்த மிஸ் திருநங்கை அழகு போட்டியில் திரைப்பட நடிகர் விஷால் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசி முடித்ததுமே, கிளம்பி செல்ல தயாரானார். அப்போது திடீரென மேடையிலேயே நடிகர் விஷால் மயங்கி கீழே சரிந்து விழுந்தார்.

கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் மயங்கிய நிலையில், டாக்டர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு மேடையிலேயே முதலுதவி சிகிச்சை தரப்பட்டது. பிறகு மயக்கம் தெளிந்து எழுந்த விஷால் காரில் ஏறி, விழுப்புரத்தில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தள்ளுமுள்ளு - உடல்நிலை
TN Voice Now என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, சிலருக்கு அதிக கூட்ட நெரிசல் உடலுக்கு ஒப்புக் கொள்ளாது.. இப்படி தள்ளுமுள்ளு நடக்கும்போது, உடல்நிலை பாதிக்கப்படலாம். ஆனால், விஷால் பங்கேற்ற விழாவின் சூழ்நிலை எப்படியிருந்தது தெரியவில்லை. மயக்கம் வந்துள்ளது.. மருத்துவமனையில் உடனே அனுமதிக்கப்பட்டு, சிறிது நேரத்தில் உடல்நிலை தேறி வீட்டுக்கு கிளம்பி சென்றுவிட்டார்.
தனக்கு படங்கள் கைவசம் இல்லை என்பதால், இபபடியெல்லாம் செய்வதாக சொல்வதை ஏற்க முடியாது. அவரது படங்கள் சரியாக போகவில்லை என்பது உண்மைதான்.. ஆனால், மார்க்கண்டேயன், மதகதராஜா இரண்டுமே நல்லாதான் ஓடியது.
கடுமையான எதிர்ப்புகள்
மே 18ம் தேதி, குமரியில் நட்சத்திர இசைத் திருவிழாவை விஷால் தலைமையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தற்கு, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இனப்படுகொலை தினத்தன்று கலை நிகழ்ச்சியை, தமிழகத்தில் நடத்துவதை விஷால் தவிர்க்கலாம் என்பதே என்னுடைய கருத்து..
நடிகர் என்பதை காட்டிலும், நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும் உள்ளார்.. யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு இந்த விஷயத்தில் விஷாலுக்கு எதிர்ப்பு கிளம்பிவிட்டது. இதை விஷாலே எதிர்பார்க்கவில்லை.. மொழி ரீதியாக அவரை விமர்சனம் செய்தார்கள்.. இதெல்லாம்கூட மனதளவில் விஷாலை பாதித்து, மயக்கம் வரை வந்திருக்கலாம். ஆனால், அந்த விழாவில் மேடையில் அவ்வளவு கூட்டம் இல்லை, தள்ளுமுள்ளும் இல்லை.. உடல் ரீதியாக அவர் சரியாக இல்லை என்றே தெரிகிறது...
உடல்நலம் சரியில்லையா
வெளியே வராவிட்டாலும், ஏன் வெளியே வருவதில்லை? நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்ற விமர்சனம் எழுகிறது.
கூவாகம் விழாவுக்கு, வீடு தேடி வந்து அழைப்பு தரும்போது, அதை அவரால் நிராகரிக்க முடியவில்லை.. அதனால் பங்கேற்றிருக்கிறார்.
ஆனால், மதகஜராஜா விழாவுக்கு வரும்போது வைரல் ஜூரம் கை நடுக்கம் வந்தது.. 4 நாளில் சரியாகிவிட்டது என்றார்.. இப்போது நார்மலாகவே விழாவுக்கு வந்த விஷால், மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்.. அப்படியானால், உண்மையிலேயே விஷாலுக்கு உடம்பு சரியில்லையா? அல்லது அதுபோல நடிக்கிறாரா? அல்லது உடல்நலம் நன்றாக இருப்பது போல நடிக்கிறாரா? என்ற நடவடிக்கைகள்தான், புரியாத புதிராக உள்ளது.
வெளிப்படைத்தன்மை இல்லை
பொதுவாக, உடல்நலம் பாதித்த நடிகர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் வராது என்பதே உண்மை.. நடிகர் சங்க பொதுச்செயலாளர் என்ற பதவியில் உள்ளதால், அனைத்திலும் ஒரு வெளிப்படைத்தன்மை இருக்கும்..
மீடியாவில் பேசினாலும் தெளிவாக பேச வேண்டும். விஷால் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார் என்றுதான் சொல்கிறார்கள்.. அவர் நார்மலாகிவிட்டார் என்பது வெளியே செய்தியாக வரவில்லை.. இதற்கு விஷால்தான் விளக்கம் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சாதாரண மயக்கம்
அதேபோல, Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "பேசிட்டேயிருந்த விஷால் திடீரென சரிந்து மயங்கி விழுந்துவிட்டார்.. உடனே ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.. டாக்டர்கள் செக்கப் செய்துவிட்டு, சாதாரண மயக்கம்தான், சரியாக சாப்பிடவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.
வெறும் ஜூஸ் மட்டுமே குடித்துவிட்டு நிகழ்ச்சிக்கு வந்ததாகவும், வெயில் அதிகம், களைப்பு காரணமாக மயக்கம் ஏற்பட்டதாகவும் விஷாலின் மேனேஜர் விளக்கம் சொல்லி உள்ளார். இதற்கு மேல் அதில் பேச எதுவும் இல்லை.
பழைய விஷால் எங்கே
ஆனால், பழைய விஷாலை பார்க்க தற்போது முடியவில்லை.. இதற்கு காரணம் கடந்த காலங்களில் விஷால் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் எல்லா நஷ்டமடைந்துவிட்டன. விஷாலின் ஃபிலிம் பேக்டரியில் வெற்றி படங்கள் இருந்தாலும், தொடர்ந்து தோல்விப்படங்களாகவே இருந்தன. வெளிபேனர்கள் படங்களும் ஓடவில்லை..
மிஷ்கின் டைரக்ஷனில், துப்பறிவாளன் 2 படத்துக்காக வெளிநாட்டில் ஷூட்டிங் எடுத்து, அதில் பலகோடிகளை செலவழித்துவிட்டார் விஷால். முக்கால்வாசி படம் எடுத்த நிலையில், மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிறகு அந்த படமும் அவ்வளவு செலவு செய்தும், நின்றுவிட்டது. இது விஷாலுக்கு மன உளைச்சலுக்கு தந்ததுடன், ஈகோ பிரச்சனையாகவும் அது வெடித்துவிட்டது.
துப்பறிவாளன் 2
மிஷ்கின் எடுத்த காட்சிகளை எல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, இதே துப்பறிவாளன் படத்தின் 2 படத்தை தானே டைரக்ட செய்ய போவதாக சவாலாக கூறியிருந்தார். அந்த முயற்சியிலும் இறங்கினார்.. ஆனால், அவருக்கு அதற்கான பைபான்ஸ் விஷாலுக்கு கிடைக்கவில்லை.
தமிழ் முகம் கொண்ட விஷாலை அனைவருக்குமே பிடிக்கும்.. தமிழ் ரசிகர்களிடம் நல்ல பெயரும் உள்ளது.. விஜயகாந்த்துக்கு பிறகு ஆக்ஷன் படங்களை சிறப்பாக செய்யக்கூடியவர் விஷால்தான்.
மன உளைச்சல் - அதிக தூக்கம்
ஆனால், சமீபகாலமாக, மன உளைச்சல், மன அழுத்தம் காரணமாக, உடலையும் சரியாக கவனித்து கொள்ளாமல் விட்டுவிட்டார். நிறைய நேரம் அதாவது 2 நாள்கூட தொடர்ந்து தூங்கும் நிலைமை ஏற்பட்டது.. இதற்கு பாலா படம் அவன், இவன் படம்தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.. ஆனால், இதன் உண்மைத்தன்மை தெரியவில்லை. பொதுவாக நரம்பு சம்பந்தப்பட்ட மாத்திரைகளை சாப்பிடும்போது, தூக்கம் அதிகமாக இருக்கும்.
முறையான உடற்பயிற்சி
சரியாக சாப்பிடவும் இல்லை.. முறையாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர் அதையும் செய்யவில்லை.. இது எல்லாம் சேர்ந்து விஷாலுக்கு ஒரு தளர்வினை தந்துவிட்டது. காரணமே இல்லாமல் இப்போது விஷால் மயங்கி விழுகிறார் என்றால், உடல்நிலையை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது. பிட்னஸ் விஷயத்தில் கவனம் செலுத்துபவர் விஷால்.. அவர் எப்படி இப்படி உடம்பை கவனிக்காமல் விட்டுவிட்டார்? என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
நமக்கு சினிமாவில் சரிவு உள்ளது, பின்னடைவு உள்ளது என்றால், அந்த காலகட்டத்தில், உடம்பை கவனித்து கொள்ள வேண்டும். இது தற்காலிக பின்னடைவுதான்.. ஒரே ஒரு படம் வெற்றிப்படம் தந்தால், மீண்டும் பழைய மார்க்கெட் விஷாலுக்கு வந்துவிடும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications