முதலமைச்சர் விஜய்யின் இந்த செயலை எதிர்பார்க்கல! கையில் கட்டுடன் விஷால் வெளியிட்ட வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய் எடுத்துள்ள முக்கிய முடிவுகளில் ஒன்றாக மதுபான கடைகளை கட்டுப்படுத்தும் அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக பள்ளிகள், ஆலயங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு அருகிலுள்ள TASMAC கடைகளை மூடும் நடவடிக்கை சமூக நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக பார்க்கப்படுகிறது.

இந்த முடிவு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, சினிமா பிரபலங்களிடமும் பாராட்டுகளை குவித்து வருகிறது. அந்த வரிசையில் நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay Vishal Tamil Nadu Politics TASMAC

விஷால் வெளியிட்ட வீடியோ

அந்த வீடியோவில் விஷால் கூறியதாவது "என்னுடைய நண்பர், முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு ரொம்ப நன்றி. இன்று காலையிலேயே நீங்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ரொம்ப சந்தோஷத்தை தருகிறது. மதுபான கடைகளை மூடுவது, குறிப்பாக பள்ளிகள் பக்கத்திலும், ஆலயங்கள் அருகிலும் உள்ள கடைகளை முதலில் மூட வேண்டும் என்று எடுத்த முடிவு... இது தமிழகத்தின் தற்போதைய சூழ்நிலைக்கு ரொம்ப தேவையானது.

இந்த மாதிரி நல்ல முடிவுகள் தொடர்ந்து உங்களால் எடுக்கப்பட வேண்டும் என்று எனக்கு மிகுந்த ஆசை இருக்கிறது. இந்த விஷயம் ரொம்ப நல்லது... எனக்கு விசில் அடிக்க தெரியாது... அதனால் கைதட்டிக் கொள்கிறேன்..." என்று வீடியோவில், கையில் கட்டுடன் விஷால் பேசுவது கூட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டிருந்ததால், தற்போது கட்டு போட்ட நிலையிலேயே அவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.

விஷால் வெளியிட்ட பதிவு

மேலும் விஷால் தன்னுடைய பதிவில், "உங்களுக்கு பாராட்டுகள்... விசில்கள் உங்களுக்கே... உங்களுக்கு என் தலைவணக்கம். அன்புள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களே... 717 மதுக்கடைகளை மூடும் அறிவிப்புக்கு நன்றி... குறிப்பாக பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளை மூடுவது மிகச் சிறந்த முடிவு.

என்ன ஒரு துணிச்சலான நடவடிக்கை! பல பெண் குழந்தைகள் மற்றும் மாணவிகள் எதிர்கொள்ளும் தொல்லைகள் இதனால் குறையும். குறிப்பாக எனக்கு தெரிந்த ஒரு பெண் மாணவி, ஆர்.கே.நகரில் தினமும் TASMAC கடையை கடந்து வீட்டுக்கு செல்லும் போது சந்திக்கும் மன அழுத்தத்தை பற்றி கூறியிருந்தாள். அவள் மட்டும் அல்ல... பல சாதாரண மக்கள் இந்த முடிவை வரவேற்பார்கள்.

இந்த முடிவு பலரின் முகத்தில் சிரிப்பை கொண்டு வரும். இந்த பிரச்சனையிலிருந்து மக்கள் விடுபடுவார்கள் என்று நம்புகிறேன். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்... #Vijay #ThalapathyVijay #CMJosephVijay இன்று உங்களையும் உங்கள் அரசையும் நான் வணங்குகிறேன்." என்று அதில் கூறியிருக்கிறார்.

பொதுமக்கள் கருத்து

இந்த அறிவிப்பு வெளியானதும் பொதுமக்கள் மத்தியில் பரவலான கருத்துக்கள் கூறி வருகின்றனர். பலரும் இந்த முடிவை வரவேற்று சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பெற்றோர் வட்டாரங்களில் இருந்து அதிகமான பாராட்டுகள் எழுந்துள்ளன.

பள்ளிகளுக்கு அருகில் மதுக்கடைகள் இருப்பதால் மாணவர்கள் மனஅழுத்தத்தையும், பாதுகாப்பு சிக்கல்களையும் எதிர்கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில், அதற்கு தீர்வு காணும் முயற்சியாக இந்த முடிவு பார்க்கப்படுகிறது.

பெண் குழந்தைகள் மற்றும் மாணவிகள் பாதுகாப்பு குறித்து கவலைப்பட்டிருந்த பொதுமக்களும் இந்த நடவடிக்கையை பாசிட்டிவாக பார்க்கின்றனர். தினசரி வாழ்க்கையில் மதுக்கடைகள் காரணமாக உருவாகும் தொந்தரவுகள் குறையும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே உருவாகியுள்ளது. குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள், மாணவிகள் மற்றும் குடும்பத்தினருடன் வாழும் பொதுமக்கள், இந்த முடிவு நடைமுறையில் அமல்படுத்தப்பட்டால் சமூகத்தில் ஒரு மாற்றம் கண்டிப்பாக ஏற்படும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில், இந்த அறிவிப்பு முழுமையாக செயல்படுத்தப்படுமா என்ற கேள்வியும் சில தரப்புகளில் எழுந்துள்ளது. முன்பும் இதுபோன்ற அறிவிப்புகள் வந்திருந்தாலும், அவை முழுமையாக நடைமுறைக்கு வராத அனுபவங்கள் காரணமாக, மக்கள் இம்முறை அரசு எவ்வாறு செயல்படும் என்பதை கவனித்து பார்க்கிறார்கள். இருந்தாலும், ஆரம்ப கட்டமாக எடுத்த இந்த முடிவு அரசின் நோக்கத்தை வெளிப்படுத்துவதாகவும், தொடர்ந்து இதுபோன்ற மக்கள் நல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் பலர் வலியுறுத்துகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+