கம்பி கட்டிய சரத்குமார்.. ஊர் நியாயம் பேசும் பிரகாஷ் ராஜ்! சினிமாவில் நடிச்சிட்டு போங்களேன்: பிரபலம்
சென்னை: முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை நாம் பாராட்டியே ஆக வேண்டும். துணிச்சலாக 25 பேர் மீது எப்ஐஆர் போட்டிருக்கிறார்.. இதை அரசியலாக பார்க்கவில்லை. எந்த விளம்பரமாக இருந்தாலும் நடிகர்கள் அதை மார்க்கெட்டிங் செய்வதை முதலில் தடை செய்ய வேண்டும். நடிகர், நடிகைகள் நாடகத்தில் நடியுங்கள், சினிமாவில் நடியுங்கள்.. ஆனால் மக்களின் வாழ்க்கையில் நீங்கள் நடிக்காதீங்க" என்று தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் சேகுவேரா.
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர்களான ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 25 பிரபலங்கள் மீது விதிகளை மீறி சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த சூதாட்ட செயலிகளில் கோடிக்கணக்கான ரூபாய் சம்பந்தப்பட்டுள்ளது. நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தினர் உள்ளிட்ட பல குடும்பங்களை துயரத்திற்கு இட்டுச் செல்கிறது என்று போலீசாரின் எப்ஐஆரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிசய பிறவிகள், தெய்வ பிறவிகள்
இந்நிலையில், King 24x7 என்ற சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றை தந்துள்ளார். அதில, "எந்த விளம்பரமாக இருந்தாலும் நடிகர்கள் அதை மார்க்கெட்டிங் செய்வதை முதலில் தடை செய்ய வேண்டும். ஏனென்றால், இவர்களை எல்லாம் நாம் நடிகர், நடிகைகளாகவே பார்த்தே பழகிட்டோம்.
இவர்களை அதிசய பிறவி போல, தெய்வ பிறவி போல, ஏழை எளிய மக்கள் பார்க்கிறார்கள். அதனால்தான் இதுபோன்ற ஏழை எளிய சாதாரண மக்களிடம், மார்க்கெட்டிங செய்வது எளிதாக இருக்கிறது. நடிகர், நடிகைகள் என்ன சொன்னாலும் இந்த மக்கள் நம்புகிறார்கள்..
சத்யராஜ், சமுத்திரகனி
அந்த தயாரிப்பு பொருளை நடிகர், நடிகைகள் பயன்படுத்தி, அதை அனுபவித்திருந்தால் தாராளமாக விளம்பரம் செய்யட்டும்.. வெறும் பணத்தை மட்டுமே வாங்கி கொண்டு, விளம்பரம் செய்வது சரியல்ல... ஈமு கோழியில் பணத்தை போடுங்க என்று சொல்லி, சத்யராஜும் அன்று சிக்கினார்.. இதனால், பல கோடி ரூபாய் நஷ்டம் அடைந்து, பல விவசாயிகள் ரோட்டுக்கு வந்துவிட்டார்கள்.
இப்போதுகூட ஒரு பேரீச்சம் பழம் டேட்ஸ் விளம்பரம் வந்துள்ளது.. அதில் ஒரு பெண், தனக்கு மாதவிடாய் சரியாக வரவில்லை என்கிறார், உடனே நடிகர் சமுத்திரகனி, 2 ஸ்பூன் இந்த டேட்ஸ் சாப்பிடுங்க என்றார். இன்னொருத்தர் வயிறு வலி என்கிறார், அவர்கிட்டயும் 2 ஸ்பூன் சாப்பிடுங்க என்கிறார்.. படிப்பது ஞாபகத்தில் இல்லை என்று மாணவர் சொன்னதுமே, 2 ஸ்பூன் சாப்பிடுங்க என்கிறார் சமுத்திரகனி. எல்லாத்துக்குமே 2 ஸ்பூனா? கொஞ்சமாச்சும் லாஜிக் வேணாமா?
பேரீச்சம் பழத்தில் சில சத்துக்கள் உள்ளது என்பது எல்லாருக்குமே தெரிந்தாலும், இப்படி ஒரு புராடக்டை சொல்லி விளம்பரம் செய்யும்போது, அதை திணிப்பது போலாகிவிடுகிறது.
ஊர் நியாயம் பேசுறாரே பிரகாஷ் ராஜ்
சமீபத்தில்கூட, காஜல், தமன்னா இருவரும் ஒரு விளம்பரத்தில் நடித்து விமர்சனம் எழுந்தது.. ரம்மி என்ற சூதாட்டத்துக்கு சரத்குமார் விளம்பரம் செய்தார். ரம்மியை தடை செய்தால் நான் ஏன் விளம்பரம் செய்ய போகிறேன் என்று கேட்டார் சரத்குமார். ஒரு அரசியல் கட்சி தலைவராக இருக்கும்போது, சமூக பொறுப்பு இல்லையா? இதுக்கு முன்னாடி TMT இரும்பு கம்பியை சொன்னார்.. அந்த கம்பியில் சரத்குமார் வீடு கட்டியிருக்கிறாரா? பெரும்பாலும், மக்களிடம் வெறுப்பை ஊட்டுவதுபோலதான் விளம்பரங்கள உள்ளன.
பிரபல நடிகர்களான விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட 25 பேர்மீது விதிகளை மீறி சூதாட்ட ஆப்பை விளம்பரப்படுத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரகாஷ் ராஜூக்கு இது சூதாட்டம் என்று தெரியாதா? விளம்பரமும் செய்துவிட்டு மன்னிப்பு போடுவதுபோல வீடியோ போடுவதால் பிரயோஜனம் இல்லை.
பிரகாஷ் ராஜ் ஊர் நியாயமெல்லாம் பேசுறாரு.. அரசியலில் அவருக்கு என்ன நிலைப்பாடு வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், சமூக பொறுப்பு வேண்டும் இல்லையா?
நடிப்பை சினிமாவோடு நிறுத்தி கொள்ளுங்கள்
இந்த 25 நடிகர்கள் என்பது ஒரு சாம்பிள்தான்.. இதுபோலவே இன்ஸ்டா பிரபலங்களும் விளம்பரங்கள் செய்கிறார்கள்.. கோடிக்கணக்கில் தமன்னா, காஜல் அகர்வால் சம்பளம் வாங்குகிறார்கள், ஆனால் 25 லட்சம் விளம்பரத்தில் நடிக்கிறார்கள் என்றால், இவர்கள் எந்த அளவுக்கு சமூக அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் பாருங்கள்...
மக்கள் சாப்பிடும் சாப்பிடறதைகூட, உடுத்தும் டிரஸ்ஸைகூட, எந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதைகூட, இதுபோன்ற விளம்பரங்கள்தான் திணிக்கின்றன..
அந்தவகையில், முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை நாம் பாராட்டியே ஆக வேண்டும். துணிச்சலாக 25 பேர் மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. நடிகர், நடிகைகள் நாடகத்தில் நடியுங்கள், சினிமாவில் நடியுங்கள்.. ஆனால், மக்களின் வாழ்க்கையில் நீங்கள் நடிக்காதீங்க" என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!












Click it and Unblock the Notifications