"இதயத்தில் ஏதோ ஒன்று” ஆர்த்தி ரவி போட்ட போஸ்ட்.. அதற்கு த்ரிஷா கொடுத்த கமெண்ட்.. ஸ்ரீ தேவியின் பதில்
சென்னை: கடந்த வருடத்தில் நடிகர் ரவி மோகன் தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். இவர்களுடைய விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இருவரும் மாறி மாறி பல குற்றச்சாட்டுகள் வைத்திருந்தனர். இந்த நிலையில் ஆர்த்தி ரவி நேற்று வெளியிட்ட போஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதற்கு நடிகை திரிஷா, நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், குஷ்பூ உட்பட பலர் கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள்.
கடந்த சில வருடங்களாக சினிமா துறையில் பல பிரபலங்கள் அடுத்தடுத்து விவாகரத்து செய்தியை அறிவித்தனர். அதிலும் இவர்கள் எல்லாம் பிரியவே மாட்டார்கள் என்று நினைத்திருந்தவர்கள் எல்லாம் விவாகரத்தை அறிவித்ததும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வரிசையில் தான் ரவி மோகன் தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். அதற்கு சில மாதங்களுக்கு முன்பே இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக செய்திகள் பரவி வந்தது. ஆனால் அதுவெல்லாம் வதந்தியாக இருக்கும் என்று நினைக்கப்பட்டது, அது உண்மைதான் என்று ரவி மோகன் அறிவித்திருந்தார்.

ரவி மோகன் அறிக்கை
ஆனால் விவாகரத்து முடிவு ரவி மோகனின் தனிப்பட்ட முடிவு அவர் என்னிடம் அதை கலந்து ஆலோசிக்கவில்லை என்று ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதில் அறிக்கையை ரவி மோகன் வெளியிட்டு இருந்தார். அதில் சில குற்றச்சாட்டுகளையும் சொல்லி இருந்தார். ஆனால் தன் மீது ரவி மோகன் சொன்ன குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என்று ஆர்த்தி ரவி சில குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். இப்படியாக இரண்டு தரப்பிலும் மாறி மாறி அறிக்கைகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
நீதிமன்றம் உத்தரவு
அந்த நேரத்தில் நீதிமன்றத்தில் இவர்கள் இருவரும் வெளியிட்ட அறிக்கைகளை நீக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனால் இருவரும் சோசியல் மீடியா போஸ்ட்களை டெலிட் செய்திருக்கின்றனர். சமீபத்தில் ஆர்த்தி மற்றும் ரவி மோகனின் மூத்த மகன் பிறந்தநாள் வந்தது, அப்போது ரவி மோகன் தன்னுடைய இரண்டு மகன்களையும் சந்தித்து புகைப்படங்களை எடுத்து அதை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருந்தார்.

மகன்களுக்கு அறிவுரை
அதற்கு பிறகு தன்னுடைய மகன்களுக்கு அறிவுரை சொல்வது போல சில போஸ்ட்டுகள் போட்டு இருந்தார். தங்களை சுற்றி நடக்கும் சூழ்ச்சிகள் தெரியாமல் அந்த மாய வலையில் விழுந்து விட வேண்டாம் என்று அந்த பதிவில் ஆர்த்தி கூறியிருந்தார் இது இணையத்தில் மீண்டும் பேசப்பட்டது. இந்த நிலையில் நேற்று சோஷியல் மீடியாவில் அழகிய சில போட்டோ சூட் புகைப்படங்களை ஆர்த்தி ரவி பகிர்ந்து இருக்கிறார்.
ஆர்த்தி ரவி போஸ்ட்
ஆரம்பத்தில் இதுபோன்று பல போட்டோ சூட் புகைப்படங்களை ரவிமோகனுடன் எடுத்து வெளியிட்டு வந்த ஆர்த்தி இப்போது தன்னுடைய இரண்டு மகன்கள் உடனும் சில போட்டோ சூட் எடுத்து இருக்கிறார். அதிலும் சில புகைப்படங்களில் கருப்பு நிற புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகைகளின் சப்போர்ட்
இந்த பதிவிற்கு "இதயத்தில் ஏதோ ஒன்று" சில மாலைகள் வளரும், சில விஷயங்களுக்கு மத்தியில் ஒரு சூரிய அஸ்தமனம் இறுக்கமாக பிடித்துக் கொள்ளும். இரண்டு கரங்கள் வார்த்தைகள் இல்லாமல் நெருக்கமாக இருக்கும். இதயம் எல்லாவற்றையும் முழுமையாக உணர வைக்கும் அமைதியான அன்பு" என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பதிவுக்கு நடிகை திரிஷா "நீங்கள் எப்போதும் போல அழகாக இருக்கிறீர்கள்" என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார். அதுபோல நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் "ஸ்வீட் காட் இதேபோல தொடருங்கள்" என்று தன்னுடைய ஆதரவை தெரிவித்திருக்கிறார். அதோடு நடிகை குஷ்பூ உட்பட பல நடிகைகளும் தங்களுடைய சப்போர்ட் தெரிவித்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications