யாரையும் நம்ப கூடாது.. மம்மூட்டி எனக்கு கொடுத்த அட்வைஸ்! ஆனால்.. நடிகை அபிராமி ஓபன்
சென்னை: நடிகை அபிராமி, மம்மூட்டி குறித்து பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் நடிகை அபிராமி அதிகமான மலையாள சினிமாக்களிலும் நடித்திருக்கிறார். அப்போது தான் மம்மூட்டியுடன் நடிக்கும் போது அவர் எனக்கு கொடுத்த அட்வைஸை நான் இப்ப வரைக்கும் பின்பற்றி வருகிறேன் என்று அபிராமி பேசியிருக்கிறார்.
இப்போது மலையாள சினிமா உலகில் சினிமா நடிகைகளுக்கு நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை மற்றும் பாலியல் தொந்தரவுகள் குறித்து பல நடிகைகள் பல்வேறு பிரச்சினைகளை வெளிப்படையாக பேசி வருகின்றனர். இது இதுவரைக்கும் மலையாள நடிகர்கள் மீது ரசிகர்களுக்கு இருந்த மதிப்பை கெடுத்து இருக்கிறது. அதே நேரத்தில் நடிகை அபிராமி தன்னோடு நடித்த நடிகர் மம்மூட்டி குறித்து பேசியது பலரையும் பலர் கருத்தையும் பெற்று வைத்திருக்கிறது.

அதாவது ஒரு திரைப்படத்தில் அபிராமியோடு மம்மூட்டி நடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்களாம். அந்த நேரத்தில் மம்மூட்டிஅபிராமியிடம் நான் உனக்கு ஒரே ஒரு அட்வைஸ் மட்டும் சொல்கிறேன் அதை மட்டும் உன்னுடைய வாழ்க்கையில் கடைபிடித்து கொள். அது என்னன்னா, நீ எவ்வளவு சம்பாத்தியம் செய்தாலும் யாரையும் நம்பாதே.
நீ எவ்வளவு சம்பாத்தியம் செய்கிறாய் என்பதையும் தெரிந்து கொள். அது போல நீ எவ்வளவு செலவு செய்கிறாய் என்பதையும் ஒரு நோட்டு போட்டு எழுதி வைத்துக் கொள். என்னதான் அம்மா அப்பாவாக இருந்தாலும் சரி, கூட பிறந்தவர்களாக இருந்தாலும் சரி, கணவராக இருந்தாலும் சரி பண விஷயத்தில் நீ கருத்தாக இருக்க வேண்டும். இது இந்த துறையில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் எல்லா துறைகளில் இருப்பவர்களும் சரியாக செய்ய வேண்டும்.

பணம் விஷயத்தில் சரியாக இருக்கும் போது நம்முடைய உறவுகள் மீது நமக்கு வெறுப்பு வராது. அவர்களுக்கு தேவையானவை நீ தான் செய்ய வேண்டும். பணத்தை சரியாக நிரூபிக்கும் பொறுப்பு உனக்கு இருக்க வேண்டும். ஆனாலும் நீ செலவு செய்வதை சரியாக குறிப்பு எடுத்துக் கொண்டால்தான் உனக்கு அந்த பணத்தோட அருமை தெரியும் என்று சொன்னார்.

அதை நான் இப்ப வரைக்கும் பின்பற்றி வருகிறேன். மம்மூட்டி சார் சொல்லும்போது நம்முடைய உறவுகளை நம்பக்கூடாது என்று அவர் சொல்லவில்லை. ஆனால் பணம் விஷயம் நாம் கஷ்டப்பட்டு சம்பாதிப்பதற்க்கு சரியான மரியாதை கொடுத்து அதை நிர்வகிக்க தெரிய வேண்டும் என்று சொன்னார் என்று அந்த பேட்டியில் நடிகை அபிராமி பேசியிருக்கிறார்.
நடிகை அபிராமி முதல் முதலாக நடிகர் பிரபு நடிப்பில் வெளியான மிடில் கிளாஸ் மாதவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலம் அடைந்திருந்தார். இவருடைய சொந்த ஊர் கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் தானாம். ஸ்கூல், காலேஜ் படித்து முடித்ததும் மலையாளத்தில் திரைப்படங்களில் சின்ன சின்ன பாத்திரங்களில் அபிராமி நடித்துக் கொண்டிருந்திருக்கிறார்.
பிறகு தான் இவருக்கு பெரிய அளவில் கேரக்டர் அமைய தொடங்கி இருக்கிறது. அதுவும் முதலில் இவருக்கு கிடைத்த மிடில் கிளாஸ் மாதவன் திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை கொடுத்ததும் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. 2001 ஆம் ஆண்டு தமிழில் நடிக்க வந்த அபிராமிக்கு தொடக்கத்தில் அதிகமான வாய்ப்பு கிடைத்தது.
அந்த நேரத்தில் சரத்குமாருடன் தோஸ்த், சமுத்திரம் திரைப்படங்களிலும் அதுபோல பிரபு உடன் சார்லி சாப்ளின் போன்ற திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்திலேயே பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற அழகு மற்றும் இயல்பான நடிப்பு பலரையும் கவர்ந்திருந்தது.

இந்த நிலையில் தான் சரத்குமார் உடன் சேர்ந்து மூன்றாவது முறையாக சமஸ்தானம் என்ற திரைப்படத்தில நடிகை அபிராமி சேர்ந்து நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு நடிகர் கமலஹாசன் உடன் விருமாண்டி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படம் பெரிய அளவில் அபிராமியின் நடிப்பை வெளிக்கொண்டு வந்தது. அதுவும் இவருடைய வித்தியாசமான கெத்தான அன்னலட்சுமி கேரக்டரை யாரும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது.
அதுவரைக்கும் அமைதியாகவும் காதல் காட்சிகளிலும் நடித்து வந்த அபிராமி விருமாண்டி திரைப்படத்தில் ஒரு திமிர் ஆன கேரக்டர் மூலமாக அனைவருடைய மனதிலும் நிறைந்து இருந்தார். அந்த நேரத்தில் இவர் இனி சினிமாவில் பெரிய அளவில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் சினிமாவிற்கு கேப் விட்டு விட்டார்.
பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு மாதவனின் மாறா திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதைத் தொடர்ந்து கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் வெப் சீரிஸ்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சின்ன திரையில் சமீபத்தில் இவர் ஒரு நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications