காதலித்து கல்யாணம் செய்தோம்.. 14 வருஷமா குழந்தை இல்லை! கணவர் செய்த செயல்! அபிராமி எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை அபிராமி தன்னுடைய கணவர் மற்றும் குழந்தை குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் தான் தன்னுடைய கணவரை காதலித்து திருமணம் செய்து கொண்டது பற்றியும், திருமணத்திற்கு பிறகு 14 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் தற்போது குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருவது குறித்து அந்த பேட்டியில் நெகிழ்ந்து பேசி இருக்கிறார்.

தற்போதைய சூழ்நிலையில் பல நடிகைகள் சின்னத்திரையில் இருந்து வெள்ளைத்திரையில் கொடிகட்டி பறந்து வருகிறார்கள். அந்த வரிசையில் பல வருடங்களுக்கு முன்பே வித்திட்டவர் அபிராமி. இவர் ஆரம்பத்தில் சின்ன திரையில் அறிமுகம் ஆகி அதற்குப் பிறகு நடிகர் அர்ஜுன் நடித்த வானவில் திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகியாக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

television

அடுத்தடுத்து பல ஹிட் படங்களில் நடித்துக் கொண்டிருந்த அபிராமி விருமாண்டி திரைப்படத்திற்கு பிறகு தன்னுடைய கணவர் ராகுலோடு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். 14 வருடங்கள் கழித்து மீண்டும் அவர் இந்தியாவிற்கு திரும்பி வந்திருக்கும் நிலையில் இப்போது திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தன்னுடைய கணவர் பற்றி பல விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதில், உண்மைய சொல்லனும்னா என்னுடைய கணவர் எனக்கு ஒரு நல்ல நண்பர். பள்ளி காலத்தில் இருந்து என்னுடைய கணவரை எனக்கு தெரியும். நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.

அவருக்கு சினிமா, கிளாமர், புகழ் என எல்லா விஷயங்களிலும் பெரிய ஈடுபாடு கிடையாது. எப்போதும் வாழ்க்கையை எதார்த்தமாக பார்ப்பார். நான் தான் சில நேரங்களில் நம்ம ஒரு ஹீரோயின் என்று ஒரு சிந்தனையோடு ஆகாயத்தில் மிதந்து கொண்டு இருப்பேன். அப்போது என்னிடம் நீங்க நிஜ வாழ்க்கைக்கு வாங்க, இந்த உலகம் வேறு மாதிரி ஆனது என்று அவர்தான் எனக்கு ஞாபகப்படுத்துவார்.

television

அவர் அப்படி சொல்வது தான் எனக்கும் வாழ்க்கைக்கு தேவைப்பட்டது. பொதுவாக வெவ்வேறு மாற்று சிந்தனை கொண்ட நபர்கள் வாழ்க்கையில் கணவன் மனைவியாக இணையும் போது அது மிகவும் நன்றாக இருக்கும். அது என்னுடைய விஷயத்திலும் நடந்து இருக்கிறது.

நாங்கள் இருவரும் வெளியே செல்லும்போது கூட என்னை பார்க்கும் மக்கள் என்னிடம் போட்டோ எடுக்க வேண்டும், என்னிடம் பேச வேண்டும் என்று முயற்சி செய்வார்கள். அப்போது அவர் சிரித்தபடியே விலகி நின்று கொள்வார். அவர் வெளிநாட்டில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் எனக்காக மட்டும் அங்கிருந்து இந்தியாவிற்கு வரவில்லை எங்களுடைய முழு குடும்பத்திற்காகவும் இங்கு வந்து விட்டார்.

நாங்கள் வெளிநாட்டில் 14 வருடங்களுக்கு மேலே இருந்தோம். அங்கு நான் அவருக்காக தான் இருந்தேன். தமிழ்நாட்டிற்கு வந்ததும் ஒரு குழந்தையை தத்தெடுத்த வேண்டும் என்று நினைத்தோம். காரணம் வெளிநாட்டில் குழந்தைகளை தத்தெடுக்க முடியாது. இப்போது தமிழ்நாட்டிற்கு வந்ததால் எனக்கு பல பட வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.

பொதுவாக கணவன் மனைவியாக இருக்கும்போது ஒருவருக்கொருவர் கணவன் மனைவியாக மட்டுமல்லாமல் நண்பர்களாகவும் இருக்க வேண்டும். உனக்கு என்ன தேவைப்படுகிறது? உன்னுடைய விருப்பம் என்ன? நீ ஏதாவது தனிப்பட்ட முறையில் சில விஷயங்களை விரும்புகிறாயா? உள்ளிட்ட பல கேள்விகளை இருவரும் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று தன்னுடைய திருமண வாழ்க்கை மற்றும் கணவர் குறித்து அபிராமி அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+