அப்பா கூடவே தப்பா சேர்த்து வச்சு வெளியான போட்டோ! ஆதாயத்துக்காக அந்த நடிகை.. ஐஸ்வர்யா எமோஷனல்
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஆறு திரைப்படத்தில் சவுண்ட் சரோஜாவை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்துவிட முடியாது. அந்த கேரக்டரில் நடித்த நடிகை ஐஸ்வர்யா சமீபத்தில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகள் குறித்து வெளிப்படையாக பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் தான் எதற்காக சமூக வலைதளத்தை இப்போது பயன்படுத்தவில்லை என்பது பற்றி கோபத்தோடு பேசி இருக்கிறார். அதுபோல சினிமா துறையில் இருக்கும் ஒரு குடும்ப நண்பர் என்ற போர்வையில் இருந்த ஒரு நடிகை செய்த செயல் குறித்தும் அந்த வீடியோவில் ஐஸ்வர்யா மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அந்த வகையில் 80 மற்றும் 90ஸ் காலகட்டத்தில் கதாநாயகியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பெயர் வாங்கிய நடிகை ஐஸ்வர்யா. இவர் ராசுகுட்டி திரைப்படத்தில் நடிகர் பாக்யராஜோடு சேர்ந்து நடித்து பெரிய அளவில் பெயர் வாங்கி இருந்தார். அதிலும் அந்த திரைப்படத்தில் இவர் படித்த பணக்கார வீட்டு திமிர் பிடித்த பெண்ணின் கேரக்டரில் தத்ரூபமாக நடித்திருந்தார்.
பிறகு இவருடைய மாற்றம் ரசிகர்களின் மனதை ரொம்பவே கவர்ந்திருந்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் தான் இவர் தமிழில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதற்கு பிறகு மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழிகளில் அதிகமாக நடித்துக் கொண்டிருந்தார். அதைத் தொடர்ந்து சில வருடங்கள் கழித்து அபியும் நானும் திரைப்படத்தில் திரிஷாவின் அம்மாவாகவும், ஆறு திரைப்படத்தில் சவுண்டு சரோஜாவாகவும் நடித்திருந்தார்.
அதிலும் சவுண்டு சரோஜா கேரக்டர் அதிகமான மீம்ஸ் டெம்ப்லேட்களாக வலம் வருகிறது. இப்படியான நிலையில் தான் சமீபத்தில் ஐஸ்வர்யா பேட்டியில் பேசும்போது நான் அதிகமா சோசியல் மீடியாவை பயன்படுத்துவது கிடையாது. facebook மட்டும்தான் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். அப்படி ஒரு நாள் நான் என்னுடைய குடும்பத்தோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தேன். பிறகு ஒரு சில நாட்கள் கழித்து நான் பேஸ்புக் பார்த்து கொண்டு இருக்கும்போது அதில் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரின் கணவர் யார் தெரியுமா என்று ஒரு செய்தி இருந்தது.
நானும் யாருடா எனக்கு கணவர் என்று உள்ளே கிளிக் பண்ணி பார்த்தால் அங்கே என்னுடைய அம்மாவுடைய கணவர் அதாவது அம்மாவின் இரண்டாவது கணவரோடு நான் எடுத்த புகைப்படத்தையே அதில் தவறாக என்னுடைய கணவர் என்று பயன்படுத்தி இருக்கிறார்கள். இது எவ்வளவு கேவலமான செயல்? இவர்களை போன்றவர்களுக்கு தெரியவில்லை என்றால் விட்டுவிடலாம். நான் என்னுடைய கணவரை பல வருடங்களுக்கு முன்பே விவாகரத்து செய்துவிட்டேன்.
அதற்குப் பிறகு நான் கல்யாண வாழ்க்கையில் இல்ல இல்லை. ஆனால் இப்படி எல்லாம் தப்பான செய்திகள் பரப்புகிறார்கள் என்று தான் அதற்குப் பிறகு நான் என்னுடைய குடும்ப புகைப்படங்கள் எதையுமே இணையத்தில் போஸ்ட் போடுவது கிடையாது. சிலர் எங்கே போனாலும் போஸ்ட் போட்டு தங்களுடைய அன்பை காட்டுகிறார்கள். எனக்கு அப்படி எந்த அவசியமும் இல்லை.
அதுபோல நான் என்னுடைய அம்மாவோடு நல்ல உறவில் தான் இருக்கிறேன். அதை எல்லோருக்கும் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று ஐஸ்வர்யா கூறியிருக்கிறார். அதோடு மேலும் அவர் பேசுகையில் என்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு என்றால் என்னுடைய அம்மாவின் நெருங்கிய தோழி என்னுடைய பாட்டி எடுத்து வளர்த்த ஒரு நடிகை... அவருடைய பெயரை நான் இப்போது சொல்ல விரும்பவில்லை.
அவரும் எனக்கு நட்பாகத்தான் இருந்தார். அவர் ஒரு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அந்த திரைப்படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தேன். 15 நாள் சூட்டிங் நடித்து விட்டேன். ஆனால் அதற்கு அவர் சம்பளம் தரவில்லை. ஒருநாள் எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்பட்டபோது அவருக்கு போன் போட்டு ஆன்ட்டி இன்னும் சம்பளம் வரவில்லை என்று நினைவு படுத்தினேன்.
அதற்கு அடுத்த நாள் சூட்டிங் ஸ்பாட்டில் ப்ரொடியூசர், இயக்குனர், நடிகர்கள் என்று எல்லோரும் இருக்கும்போது என்னை கண்ட மெணிக்கு திட்டிவிட்டார். வாயில் வந்தது எல்லாமே கெட்ட வார்த்தைகளும், தவறான வார்த்தைகளும் தான். அதைக் கேட்டு நான் அந்த இடத்தில் எந்த வார்த்தையும் பேசவே இல்லை. எனக்கு அழுகை மட்டும் தான் வந்தது. நான் என்னுடைய பாட்டிக்கு போன் போட்டு பேசினேன். அவர் திரும்பி வந்துவிடு என்று சொல்ல நானும் போய்விட்டேன்.
அதற்கு பிறகு சில வருடங்களுக்கு முன்பு நான் சோப்பு விற்கும் வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தேன். அது அந்த நேரத்தில் பெரிய அளவில் வைரலாகி இருந்தது. அப்போது அந்த நடிகை தன்னுடைய youtube சேனலில் அவருடைய ஆதாயத்துக்காக அவர் எனக்காக அது பண்ணுனேன் இது பண்ணினேன் என்று வாய் கூசாமல் சொல்கிறார். அப்படி அவர் எதுவுமே எனக்கு செய்யவே இல்லை.
ஆனால் அவர் youtube சேனலுக்கு வியூஸ் வரவேண்டும் என்று எண்ணை வைத்து பேசிக் கொண்டிருக்கிறார் என்று அந்த பேட்டியில் நடிகை ஐஸ்வர்யா பேசியிருக்கையில் அது நடிகை குட்டி பத்மினியா? என்று பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள். ஆனால் அந்த வீடியோவில் ஐஸ்வர்யா யார் அந்த நடிகை என்ற பெயரை குறிப்பிடவில்லை.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications