அத்தனை பேரு முன்னாடி அந்த நடிகை கேட்ட கேள்வி! என்னை நானே செருப்பால அடிச்சிட்டேன்.. ஐஸ்வர்யா எமோஷனல்
சென்னை: நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் தவறவிட்ட திரைப்படங்களால் தான் பட்ட அவஸ்தை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அதோடு தனக்கு பிரபல நடிகை ஒருவர் கொடுத்த பிரச்சனை குறித்து அந்த வீடியோவில் வெளிப்படையாக ஐஸ்வர்யா பேசியிருக்கிறார்.
அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் வேறு யாருமில்லை நடிகை லட்சுமியின் மகள்தான். அதுபோல ஐஸ்வர்யாவின் பாட்டியும் நடிகையாக இருந்திருக்கிறார். சினிமா வாரிசான ஐஸ்வர்யா சினிமாவில் அறிமுகமான பிறகு பல பிரச்சனைகளையும் அவமானங்களையும் சந்தித்து இருக்கிறேன் என்று வெளிப்படையாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் அவர் பேசுகையில் நான் இந்த சினிமா துறையில் சினிமா வாரிசாக களம் இறங்கி இருந்தாலும் பல தவறான முடிவுகள் எடுத்திருக்கிறேன். அதிலும் நான் தவறவிட்ட படங்கள் எல்லாம் கேட்டால் எல்லோரும் அதிர்ச்சி ஆகுவார்கள். இவங்களா இப்படி செஞ்சுட்டாங்கன்னு தான் கேட்பாங்க. காரணம் அந்த மாதிரி படங்களை எல்லாம் நான் தவற விட்டுவிட்டேன். அதாவது மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான மூன்று படங்களை நான் தவற விட்டிருந்தேன்.
அதிலும் தளபதி, ரோஜா இரண்டு திரைப்படங்களும் என் வாழ்நாளில் மறக்க முடியாது. அந்த நேரத்தில் நான் தெலுங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் நான் மணிரத்தினம் சாரின் திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதுபோல தேவர்மகன் திரைப்படத்திலும் கௌதமி கேரக்டரில் நான் தான் நடிக்க வேண்டியது. தளபதி திரைப்படத்தில் ஷோபனா கேரக்டரில் என்னை தான் நடிக்க கேட்டார்கள்.
ஆனால் அந்த நேரத்திலும் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதுபோல ரோஜா திரைப்படத்தில் எனக்கு மதுபாலா கேரக்டரில் நடிக்க வாய்ப்பு வந்தது. நான் அந்த கேரக்டரில் அப்போது நடிக்காமல் போய்விட்டேன் ஆனால் அந்த திரைப்படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்ததும் நான் செய்த பெரிய தவறை நினைத்து என்னை நானே செருப்பால் அடித்துக் கொண்டேன்.
அதுபோல நான் தவறவிட்ட படங்களை மட்டுமே சொல்லவில்லை. ஒரு சிலர் தவற விட்டதால் எனக்கும் நல்ல படங்கள் கிடைத்தது. அதாவது ஆறு, அபியும் நானும், சுயம்வரம் போன்ற படங்கள் வேறு ஒருவருக்கு கமிட்டாகி அவர்கள் கடைசி நேரத்தில் வேண்டாம் என்று சொன்னதால் நான் அந்த திரைப்படத்தில் நடித்தேன். அது எனக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் அதுபோல சினிமா துறையில் நான் மறக்கவே முடியாத நிகழ்வு என்றால் ஒரு நிகழ்வும் இருக்கிறது.
அதாவது பிரபல நடிகை ஒருவர் எனக்கு குடும்ப நண்பர் தான். அம்மாவின் நெருங்கிய தோழி, பாட்டிக்கும் அவங்களை நல்லாவே தெரியும். அதனால் அவருடைய படத்தில் நடித்தேன். ஆனால் 15 நாட்கள் நடித்த பிறகு அவர் எனக்கு சம்பளம் போடவில்லை. அதனால் நான் அவருக்கு போன் போட்டு சம்பளம் கேட்டேன். அப்போது அவர் எதுவும் சொல்லாமல் போனை வைத்து விட்டார்.

அடுத்த நாள் நான் சூட்டிங் ஸ்பாட்டில் நடித்துக் கொண்டிருக்கும் போது நேரில் வந்து சூட்டிங் ஸ்பாட்டில் அத்தனை பேர் முன்பு என்னை அசிங்க அசிங்கமாக திட்டினார். நான் அந்த நேரத்தில் அங்கேயே அழுதுவிட்டேன். பிறகு பாட்டி சொன்னதால் நான் சூட்டிக்கிலிருந்து கிளம்பி விட்டேன் என்று அந்த பேட்டியில் ஐஸ்வர்யா பேசியிருக்கையில் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் அது வேறு யாருமில்லை குட்டி பத்மினி தானே என்று பதில் கொடுத்து வருகிறார்கள். ஆனால் ஐஸ்வர்யா அந்த வீடியோவில் நான் அந்த நடிகையின் பெயரை சொல்ல விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications