ஒரே வேலை சாப்பாடு.. வீடு வீடாக சோப்பு விற்பனை.. கண்ணீரில் ஆழ்த்திய நடிகை ஐஸ்வர்யாவுக்கு புதிய வேலை
சென்னை: ஒரு வேலை மட்டும் சாப்பாடு, சோப்பு விற்று பிழைப்பு நடத்தி வந்த நடிகை ஐஸ்வர்யா தற்போது ஒரு புதிய வேலையில் சேர்ந்துள்ளாராம்.
1970 களில் சினிமா துறையில் புகழ்பெற்றவர் திரைப்பட நடிகை லட்சுமி. இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது தாயும் ஒரு நடிகைதான். 1970 களில் 4 தென்னிந்திய மொழிப் படங்களில் வெற்றிகளை குவித்தவர்.
இவருக்கு 17 வயது இருக்கும் போதே பாஸ்கரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து 1971 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா என்ற மகள் பிறந்தார. பின்னர் லட்சுமி சிவசந்திரனை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை ஐஸ்வர்யா
லட்சுமியை போல் ஐஸ்வர்யாவும் திரைப்பட நடிகை. ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் எஜமான் படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அது போல் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட சுயம்வரம் எனும் படத்தில் பிரபுவுடன் பாவா பாவா என காமெடியில் கலக்கியிருப்பார்.

பெண் குழந்தை
1994 ஆம் ஆண்டு தன்வீர் அகமது என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. கணவருடன் ஏற்படட கருத்து மோதல் காரணமாக தன்வீரை 1996 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இதையடுத்து நடிகை ஐஸ்வர்யா குடிக்கு அடிமையானதாக தெரிகிறது. இதையடுத்து மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தார்.

தோல்வியிலும் துவளாத ஐஸ்வர்யா
திருமண வாழ்க்கையில் தோல்வி, சினிமா வாழ்க்கையில் தோல்வி என இத்தனை தோல்விகளை கண்டாலும் 1997ஆம் ஆண்டு நன்கு படித்து சாப்ட்வேர் என்ஜீனியர் ஆனார். சில டெலிவிஷன் ஷோக்களை ஹோஸ்ட் செய்துள்ளார். இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தற்போது நானே சோப்புகளை தயாரித்து வீடு வீடாக போய் சோப்பு விற்பதாக தெரிவிக்கிறார்.

சினிமாவில் வாய்ப்பு
ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார். சினிமாவில் வாய்ப்பு கொடுத்தால் நடிக்க ரெடி என்கிறார். மேலும் சினிமா என்றில்லை, உங்கள் அலுவலகத்தில் (பேட்டி கொடுத்த ஊடகத்தில்) வேலை கொடுத்தாலும் நான் செய்வேன். பாத்ரூம் கழுவ கூட தான் ரெடி.

ரூ 40 ஆயிரம் ஊதியம்
ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு வருகிறேன் என இவர் கண்ணீர் மல்க கூறியிருந்தது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் பேட்டி கொடுத்த யூடியூப் சேனலிலேயே ஐஸ்வர்யா தற்போது வேலைக்கு சேர்ந்துள்ளார். இவருக்கு ரூ 40 ஆயிரம் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டது.

தனியார் சேனலில் வேலை
அண்மையில் நடிகர் விஜய் சேதுபதியை பேட்டி எடுத்தார். ஐஸ்வர்யா கணிசமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நன்றாக சம்பாதித்தாராம். ஆனால் அவற்றை எல்லாம் குடியில் விட்டுவிட்டாராம். இவர் குடிப்பது மட்டுமல்லாமல் தனது நண்பர்கள், சினிமா பிரபலங்களுக்கும் தன் சொந்த செலவில் மது வாங்கிக் கொடுப்பதாகவும் தெரிகிறது.எனினும் இன்று அவருக்கு உதவி செய்ய யாரும் இல்லாத நிலையில் தற்போது தொகுப்பாளினியாக வேலைக்கு சேர்ந்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications