ஆலியா மானசா செல்வ செழிப்புக்கு காரணம் இதுதான்..? நியூ MLM மோசடி.. சைபர் கிரைம் புகார்.. பரபர காரணம்
சென்னை: சின்னத்திரை நடிகையான ஆலியா மானசா பற்றிய செய்திதான் இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது. சமீபத்தில் ஆலியா மானசா அவருடைய கணவரை விவாகரத்து செய்து விட்டதாக சிலர் புரளி கிளப்பிவிட்டனர். ஆனால் அது குறித்து பதிலடி கொடுக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் நேற்று ஆலியா மானசா மற்றும் அவருடைய கணவர் சஞ்சீவ் இருவரும் செல்லமாக சண்டையிட்டு விளையாடி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர்.
அதுபோல ஆலியா மானசா செல்வ செழிப்பாக வசதி வாய்ப்போடு இருப்பதற்கு காரணம் ஒரு எம்எல்எம் நிறுவனத்தில் தான் முதலீடு செய்ததுதான் என்று ஒரு எம் எல் எம் நிறுவனம் ஆலியா மானசா பிரபல சேனலில் பேட்டியில் பேசியதாக பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். இதுகுறித்து சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா சைபர் கிரைமில் புகார் அளித்திருக்கின்றனர். அதோடு மக்களுக்கும் சில வேண்டுகோள் வைத்திருக்கின்றனர் அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் ராஜா ராணி சீரியலில் செம்பா கேரக்டரில் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஆலியா மானசா முதல் சீரியலிலே புகழின் உச்சத்தில் வலம் வந்திருந்தார். ஆனால் அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த சீரியலில் அவரோடு கதாநாயகனாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணமும் செய்து கொண்டிருந்தார். திருமணத்திற்கு பிறகு தங்களுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு போய்க் கொண்டிருக்கும் சஞ்சீவ் மற்றும் ஆலியா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது.
இந்த நிலையில் ஆலியா மானசா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் கதாநாயகியாகவும் சஞ்சீவ் கயல் சீரியலில் கதாநாயகனாகவும் நடித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இப்போது இவர்கள் இருவரை பற்றி தான் இணையத்தில் அதிகமாக வதந்தி பரவி வருகிறது. பொதுவாக பிரபலங்கள் என்றால் வதந்திக்கு பஞ்சம் இருக்காது என்று சொல்லலாம் ஆனால் அதை ஒரு சிலர் கண்டு கொள்வதில்லை.
அந்த வகையில் ஒருவர்தான் ஆலியா மானசா தன்னை பற்றி வரும் வதந்திகளுக்கு பெரிய அளவில் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் கிடைக்கும் நேரங்களில் அதற்கு குறித்த விளக்கத்தையும் கொடுத்து விடுவார். அந்த மாதிரி சமீபத்தில் ஆலியா மானசா பிரபல டிவி சேனல் ஒன்றில் ஒரு வருடத்திற்கு முன்பு கொடுத்த பேட்டியில் ஆலியா மானசா தான் இவ்வளவு செல்வ செழிப்போடு கார், வீடு, பைக் என்று விதவிதமாக வாங்கி குவிப்பதற்கு காரணம் நான் நான் என்னுடைய பணத்தை குறிப்பிட்ட ஒரு எம் எல் எம் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாகவும்,
அதனால் எனக்கு எதிர்பார்க்காத அளவிற்கு பணம் வந்து கொண்டிருப்பதால் தான் என்னால் இந்த அளவிற்கு வசதியாக இருக்க முடிகிறது என்று ஆல்யா மானசா பேசியதாக பொய்யான ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதோடு அந்த எம்எல்எம் நிறுவனம் ஒரு லிங்கை கொடுத்து இருக்கிறது. அந்த லிங்கை தொட்டு உள்ளே போனால் 26 ஆயிரம் ரூபாய் பணம் கட்டுவது போன்று தொடங்குகிறது.
இப்படி ஒரு எம் எல் எம் நிறுவனம் ஆலியா பெயரை சொல்லி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நிறுவனத்தை சார்ந்தவர்கள் குறிப்பிட்ட சில பிரபலங்களுக்கும் போன் பண்ணி ஆலியா மானசா எங்களுடைய நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார்களாம். அதனால் அந்த பிரபலங்கள் தாங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கு முன்பு ஆலியா மானசாவிற்கு ஃபோன் பண்ணி விசாரித்து இருக்கிறார்கள்.

ஆலியா அதற்கு நான் இப்படி எதுவுமே சொல்லவே இல்லை. நான் அந்த பேட்டி ஒரு வருடத்திற்கு முன்பு கொடுத்தது ஆனால் அதில் அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதோடு அவருடைய கணவரும் பொய்யான தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது அது குறித்து நாங்கள் சைபர் கிரைமில் புகார் அளித்திருக்கிறோம் அதனால் மக்கள் யாரும் ஏமாந்து விட வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்.
அதோடு நாங்கள் வீடு, கார், பைக் என எல்லாமே இஎம்ஐயில் தான் வாங்கி இருக்கிறோம். அதற்கு இப்ப வரைக்கும் இஎம்ஐ கட்டிக் கொண்டிருக்கிறோம். அதோடு நாங்கள் இருவரும் நடிக்கும் பணத்தில் தான் எங்களுடைய குடும்ப வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது தவிர வேறு எதிலும் நாங்கள் முதலீடு செய்யவில்லை என்று ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் விளக்கம் கொடுத்திருக்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications