என்னுடைய எக்ஸ் காதலருக்கு ரிவென்ஜ் கொடுக்கத்தான் இப்படி செய்தேன்.. இது பலருக்கு பாடம்! ஓபனாக பேசிய அமலா பால்
சென்னை: நடிகை அமலா பால் சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய x காதலரை பழி வாங்குவதற்காக தான் செய்த செயல் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார். இது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பலர் நாங்கள் பிரிந்து விட்டாலும் நண்பர்களாக இருக்கிறோம் என்று பேசி வருவார்கள். ஆனால் அமலா பால் மனதில் உள்ளதை இப்படி வெளிப்படையாக பேசி விட்டாரே என்று கூறி வருகிறார்கள். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
சினிமாவில் ஒரு சில நடிகர் நடிகைகள் தான் நிஜத்திலும் மனதில் பட்டதை தைரியமாக பேசி விடுகிறார்கள். ஒரு சிலர் சினிமாவில் நடிப்பது போலவே நிஜத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நடிகை அமலாபால் தற்போது பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. அமலா பால் சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

சோசியல் மீடியா பதிவு
அப்போது அவரிடம் சில மாதங்களுக்கு முன்பு அமலா பால் இரண்டாவதாக திருமணம் செய்திருக்கும் அவருடைய கணவர் குறித்து நீண்ட ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில் இப்போதுதான் நான் உண்மையான காதலை அறிந்து கொண்டேன். இப்போதுதான் திருமண வாழ்க்கையில் இப்படியும் சந்தோஷமாக இருக்கலாம் என்பதை நான் புரிந்து கொண்டேன் என்று பேசி இருந்தார். அது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
அமலா பால் விளக்கம்
அதற்கு அமலா பால் பேசுகையில் அது என்னுடைய எக்ஸை வெறுப்பேற்றுவதற்காக தான் நான் இப்படி போஸ்ட் போட்டேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் திருமண வாழ்க்கையில் எவ்வளவு சந்தோஷம் இருக்கும் என்று எனக்கு இப்போது தான் தெரிகிறது. காதலித்தால் சுதந்திரம் பறிபோய்விடும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் காதலித்த நபர் நமக்கு இவ்வளவு ஃப்ரீடம் கொடுப்பார், நம்மை ஒரு நபர் இவ்வளவு காதலிப்பார் என்பதே எனக்கு இப்போதுதான் தெரிகிறது.
குழந்தை பற்றி நெகிழ்ச்சி
எதையும் எதிர்பார்க்காமல் நமக்காக அன்பை கொட்டும் நபரை பார்க்கும்போது இப்படியும் ஒரு காதலர் இருப்பாரா என்று எனக்கு வியப்பு வருகிறது. அதனால் தான் இப்படி ஒரு போஸ்ட் போட்டேன். என்னுடைய மகன் என்னுடைய வாழ்க்கையில் வந்த பிறகுதான் என் வாழ்க்கையே முழுமை அடைந்தது. பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் ஒரு குழந்தை வரும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போது எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்னை உண்மையாக நேசிக்கும் ஒரு கணவர் இருக்கிறார் அதனால் திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது என்று பேசி இருக்கிறார்.
அமலா பால் நடித்த படங்கள்
அமலா பால் இப்படி பேசி இருப்பது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அமலா பால் தமிழ் சினிமாவில் வீரசேகரன் என்கிற திரைப்படத்தின் மூலமாகத்தான் அறிமுகமானார். ஆரம்பத்தில் நடித்த திரைப்படங்களில் இவருக்கு வித்தியாசமான கேரக்டர்கள் அமைந்திருந்தது. ஆனால் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் நடித்த பிறகுதான் சர்ச்சை கதாநாயகியாக மாறிவிட்டார். இந்த திரைப்படத்தில் அவருடைய வித்தியாசமான கேரக்டர் பலரையும் முகம் சுளிக்க வைத்திருந்தது.

முதல் திருமணம்
அதற்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் தான் அமலா பாலுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. தமிழை தாண்டி இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வந்தார். சினிமாவில் முன்னணி இடத்தில் இருந்து கொண்டிருக்கும்போது தலைவா மற்றும் தெய்வத்திருமகன் படத்தில் நடிக்கும் போது அந்த திரைப்படத்தின் இயக்குனரான ஏ.எல். விஜயை காதலித்து கடந்த 2013 ஆம் ஆண்டு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
ரசிகர்கள் கருத்து
ஆனால் திருமணமான நான்கு வருடங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதற்குப் பிறகு தனது நீண்ட நாள் நண்பரான ஜகத் தேசாய் என்பவரை கடந்த ஆண்டு அமலா பால் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அமலா பால் தன்னுடைய மகனுக்கு இலை என பெயர் வைத்திருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய எக்ஸ் என்று அமலாபால் இயக்குனர் ஏஎல் விஜய் மீது தனக்கு இருக்கும் கோபத்தை வெளிப்படுத்துகிறார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!












Click it and Unblock the Notifications