ஏசி ரூமில் பிரபலங்கள்.. ஒருத்தரும் வாய் திறக்கறதில்லை.. இருங்க சீக்கிரம் வரேன்! செம பிளானில் அம்பிகா
சென்னை: சமீப காலமாகவே தமிழகத்தில் நடந்து வரும் மிக முக்கிய சம்பவங்கள், பிரச்சனைகள் குறித்து மூத்த நடிகை அம்பிகா பேசிவருகிறார்.. அத்துடன் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லை என்ற வருத்தத்தையும் பதிவு செய்து வருகிறார்.. ஏற்கனவே ரிதன்யா வீட்டுக்கு சென்றிருந்தார், பிறகு துப்புரவு பணியாளர்களின் போராட்டத்துக்கு அம்பிகா சென்றிருந்தார்.. இப்போது சென்னை கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கி பலியான துாய்மை பெண் பணியாளர் வரலட்சுமியின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்... அதாவது அரசியலுக்கு வரப்போகிறாராம் அம்பிகா...!!
கடந்த மாதம் நடிகை அம்பிகா ரிதன்யா வீட்டிற்கு சென்று, ரிதன்யாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் சொல்லியிருந்தார்.. ரிதன்யா தற்கொலையை கேள்விப்பட்டதுமே 2, 3 நாள் நான் தூங்கவில்லை.. என் வீட்டில் இப்படியொரு சம்பவம் நடந்திருந்தால், நான் என்ன ஆயிருப்பேனோ? அந்த நொடியை நினைத்து பார்க்கவில்லை..

திருப்பூர் ரிதன்யா
ரிதன்யாவின் ஆடியோவால் நான் தூங்க முடியவில்லை.. ஒரு தாயின் இடத்தில் நின்று பார்த்து, துடித்துப் போய்விட்டேன்.. அதனால்தான், ரிதன்யா வீட்டிற்கு சென்றிருந்தேன் என்று அம்பிகா கூறியிருந்தார்..
தமிழ்நாட்டில் வேறு எந்த நடிகையும், ரிதன்யா வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லாத நிலையில், அம்பிகா சென்றிருந்தது பலரது கவனத்தையும் பெற்றிருந்தது.
தூய்மை பணியாளர்கள்
ஆனால், தமிழகத்தின் அடுத்தடுத்த முக்கிய நிகழ்வுகளிலும் அம்பினாவின் பங்கு இருந்து வருகிறது.. சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவர்களை நேரடியாகவே சென்று சந்தித்து பேசியிருந்தார் அம்பிகா.
தொடர்ந்து போராடிவரும் தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும்.. அவர்களது வாழ்வாதாரம் இந்த வேலையை மட்டுமே சார்ந்துள்ளது.. போராட்டக்காரர்களில் ஒரு பெண் கண்ணீர் வடிப்பதை பார்த்தபோது, அது தன்னுடைய குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்பட்டது போலத் தன்னைப் பாதித்துவிட்டது.. தற்கொலை எண்ணம் ஏற்படும் அளவிற்கு அவர்கள் மிகுந்த வேதனையில் இருக்கிறார்கள்.
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி போன்ற தலைவர்கள் இருந்திருந்தால், இத்தகையதொரு நிலைமை ஏற்பட்டிருக்காது... இந்த பிரச்சனை மிக விரைவாகத் தீர்க்கப்பட்டிருக்கும் அம்பிகா வேதனையையும் அதிருப்தியையும் தெரிவித்திருந்தார்.
சென்னை கண்ணகி நகர்
இந்நிலையில், சென்னை கண்ணகி நகரில், மின்சாரம் தாக்கி பலியான துாய்மை பெண் பணியாளர் வரலட்சுமியின் குடும்பத்தினரையும் நடிகை அம்பிகா நேற்று சந்தித்து பேசி, அவர்களுக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறார்..
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அம்பிகா பேசும்போது, "தினமும் நான் பயப்படுவது மின்வாரியத்தை நினைத்து தான்... ஒரு முறை ஷூட்டிங் முடித்து வீடு திரும்பும்போது, சென்னை ராமாபுரத்தில் மின்கம்பி அறுந்து கிடந்தது. மின்வாரிய அதிகாரியிடம் தகவல் தெரிவித்து, மின் இணைப்பை துண்டிக்க சொன்னேன்.
மனிதாபம் - ஆறுதல்
அதற்கு அவர், "இது என்னுடைய ஏரியா இல்லை' என்று அலட்சியமாக பதில் கூறினார். அடுத்த நிலை அதிகாரியிடம் கூறி, விபரீதத்தை தடுக்கும் உணர்வு அந்த அதிகாரிக்கு இல்லை. எனக்கு மட்டும் பவர் கிடைத்தால், மேஜிக் போல், சேதமடையும் மின் கம்பிகள் இருக்கும் இடத்தில் மின் இணைப்பை துண்டித்து விடுவேன்.
மின் வாரியத்தின் அலட்சியத்தால் தான், துாய்மை பணியாளர் வரலட்சுமி பலியானார். மனிதாபிமானம் அடிப்படையில் தான், அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வந்தேன்.
ஏசி ரூம் நடிகர்கள்
இதர நடிகர், நடிகையர் இங்கு வராதது வருத்தம் தான்... போஸ்டர் ஒட்டவும், டிக்கெட் எடுக்கவும் மட்டுமே, இந்த மக்கள், நடிகர்களுக்கு தேவையாக உள்ளனர். அதனாலேயே, இந்த மக்களின் சுக, துக்கங்களில் பங்கெடுப்பதில்லை. ஏசி ரூமிலேயே இருக்கும் நடிகர்களுக்கு, ஏழைகளின் கஷ்டங்கள் புரியாது.
தாங்கள் படும் துன்பங்களை துடைக்காவிட்டாலும், ஆறுதலாக இருக்காத நடிகர்களின் படங்களை பார்க்க மாட்டோம் என்று ஏழைகள் முடிவெடுத்தால் இந்த நடிகர்கள் பாடு திண்டாட்டமாகி விடும். இவ்வளவு துாரம் பேசுகிறீர்களே... நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டால், கண்டிப்பாக வருவேன். ஆனால், மக்கள் குறை கூற முடியாத அரசியல்வாதியாக இருப்பேன்' என்று தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications