ரிதன்யாவின் குரலால் தூக்கத்தை தொலைத்த அம்பிகா.. யாரும் பேச மாட்டீங்களா? அட்டைக்கத்தி நடிகர்கள் எங்கே

Subscribe to Oneindia Tamil

சென்னை: கதாநாயகிகள் அவ்வளவு புரட்சி பேசுகிறார்கள்.. ஆனால், ரிதன்யா விவகாரத்தில் யாருமே சின்ன வீடியோ பதிவிட்டுகூட இதை பற்றி பேசவில்லை. ஆனால், சுந்தரி சீரியலில் நடிக்கும் கேப்ரியல்லா, ஆதங்கத்துடன் வீடியோவில் பேசியிருப்பது அனைத்தும் உண்மையான வரிகள்.. உருக்கமாக பேசியிருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.. அத்துடன் பிரபலங்கள் என்று சொல்லிக் கொள்ளும் நடிகர்களுக்கு, மிக முக்கிய கேள்வி ஒன்றையும் எழுப்பியிருக்கிறார்.

Cheyyaru Balu என்ற யூடியுப் சேனலில் பேசியிருக்கும் செய்யாறு பாலு,"இந்தியாவை உலுக்கிய மிகப்பெரிய சம்பவம் ரிதன்யா.. ஆடியோவை கேட்டதுமே, குழந்தை மாதிரி ஒலித்த குரல், அனைவரையும் உலுக்கிவிட்டது. ஒட்டுமொத்த பேரும் கொந்தளித்து போயிருக்கிறார்கள்.. குற்றவாளிகளுக்கு ஜாமீன் தர முடியாது என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது. நீதியரசர்கள் நிச்சயம் சரியான தீர்ப்பை இதில் தருவார்கள்..

television actress ambika rithanya

ஆனால், பெண்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்று சொன்ன சினிமா துறையினர், எத்தனை பேர் ரிதன்யாவுக்காக வந்து குரல் கொடுத்திருக்கிறார்கள்?

மாஸ் ஹீரோக்கள் எங்கே?

மாஸ் ஹீரோ, டாப் ஹீரோ எங்கே அவர்கள் எல்லாம்? பெண்ணுக்கு அநீதி என்றதும் சினிமாவில் , எதிரிகளை அடித்து துவம்சம் செய்யும் ஹீரோக்கள் எங்கே? அதெல்லாம் அட்டை கத்தியா? நிஜக்கத்தியா? காகித புலியா? நிஜப்புலியா? சாமான்யன்கூட சோஷியல் மீடியாவில் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்கிறார்..

எத்தனை பேர் குரல் கொடுத்தாலும் போன உயிர் திரும்பி வரப்போவதில்லை. ஆனால், இதுபோல் இனி இங்கே நடக்கக்கூடாது.. பிரபல நடிகர்கள் கை விரல் காட்டினாலே, கோடி பேர் அதை பின்பற்றுகிறார்கள்.. தன்னுடைய ரசிகர்கள் இனியாவது வரதட்சணை வாங்க மாட்டோம் என்ற உறுதிமொழியை ஏற்கும்படி , பிரபல நடிகர்கள் வீடியோவை பதிவிட்டு சொல்லலாம். அதை பல ரசிகர்கள் பின்பற்ற தயாராக இருக்கிறார்கள்.

நடிகை அம்பிகா

தற்போது அம்பிகா ரிதன்யா வீட்டிற்கு சென்று, தாய், தந்தையை சந்தித்து பேசி ஆறுதல் சொல்லியிருக்கிறார்.. அம்பிகா ஒன்றும் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவில்லை.. இப்போது மாஸ் நடிகையும் கிடையாது.. இதுல பப்ளிசிட்டி தேடிக்கொள்ள வேண்டிய அவசியமும் அம்பிகாவுக்கு கிடையாது..

இந்த செய்தியை கேள்விப்பட்டதுமே 2, 3 நாள் நான் தூங்கவில்லை.. என் வீட்டில் இப்படியொரு சம்பவம் நடந்திருந்தால், நான் என்ன ஆயிருப்பேனோ? அந்த நொடியை நினைத்து பார்க்கவில்லை.. ரிதன்யாவின் ஆடியோவால் நான் தூங்க முடியவில்லை.. ஒரு தாயின் இடத்தில் நின்று பார்த்து, துடித்துப்போய்விட்டேன்.. அதனால்தான், ரிதன்யா வீட்டிற்கு சென்றிருந்தேன் என்று அம்பிகா சொல்லி உள்ளார்.

ஹீரோயின்கள் எங்கே

அம்பிகா நினைத்திருந்தால், போனில்கூட ரிதன்யா அம்மாவிடம் பேசியிருக்கலாம்.. ஆனால் அவர் நேரில் சென்றபிறகுதான், செய்தியாளர்களே வந்துள்ளார்கள். இது அந்த குடும்பத்துக்கு மிகப்பெரிய ஆறுதலை தந்துள்ளது..

கதாநாயகிகள் அவ்வளவு புரட்சி பேசுகிறார்கள், யாருமே சின்ன வீடியோ பதிவிட்டுகூட இதை பற்றி பேசவில்லை. ஆனால், சுந்தரி சீரியலில் நடிக்கும் கேப்ரியல்லா, ஆதங்கத்துடன் வீடியோவில் பேசியிருப்பது அனைத்தும் உண்மையான வரிகள்.. உருக்கமாக பேசியிருக்கிறார்கள்..

வசந்த பாலன் சவுக்கடி வரிகள்

அதுபோல, அங்காடித்தெரு டைரக்டர் வசந்த பாலனும், "ஒரு பெண் மாதவிடாய் ஆகிவிட்டால், அவளை வீட்டுக்குள் சேர்க்காத சமூகம் இது.. பெண்ணை/மகளைப் புரிந்து கொள்ள நமக்கு படிப்பில்லை, அனுபவமில்லை.. பக்குவமில்லை.. பொறுத்துப்போ என்று தொடர்ந்து குரல் கொடுக்கிற குடும்பமைப்புகளின் பலவீனங்களை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.

முதலிரவில் பெண்ணைப் பலிக்கொடுக்கிற திருமணயமைப்பை நாம் விசாரணைக்கு உட்படுத்தவேண்டும். வெறுமனே விரைவு உணவு போல விரைவு நீதியாக இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை மட்டும் தண்டித்து விட்டு கடந்து போனால் மீண்டும் மீண்டும் பெண்கள் பாலியல் சூறையாடலுக்கு உள்ளாக நேரிடும். நாளைக்கு நம் பெண் குழந்தைகளுக்கு நடக்கும்போது மட்டும் அழுது கதறி ஒரு பயனும் விளையப்போவதில்லை" என்றெல்லாம் மிக நீளமான பதிவை உணர்வுப்பூர்வமாக பதிவிட்டுள்ளார். இது வரவேற்கத்தக்க விஷயம்.

யாருமே பேச மாட்டீங்களா

ரிதன்யாவின் கணவர் திருட்டுப்பையன், கயவன், மனநோயாளி.. இதுவரை யாருமே இந்த நபரை கண்டிக்கவில்லை.. நட்சத்திர ஹீரோக்கள், மாஸ் ஹீரோக்கள், டாப் ஹீரோக்கள், சூப்பர் ஹீரோக்கள் யாருமே, ரிதன்யாவுக்காக பேச மாட்டீர்களா? சினிமாவில் மட்டும்தான் பேசுவீர்களா? அப்படின்னா, பெண்ணியவாதி, பெண்களுக்கு குரல் கொடுப்பவர்கள் என்று சொல்வதெல்லாம்?

உச்ச நட்சத்திர பிரபலங்கள், இதுபோன்ற கொடுமைகளுக்கு குறைந்தபட்சம் எதிர்ப்பை, தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+