என்னை பற்றி வந்த கிசு கிசு.. அந்த நடிகரே அப்படி சொன்னாரு! பணம் வந்தால் எல்லாம் மாறி போகும்! அம்பிகா உருக்கம்
சென்னை: 80 காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகம் ஆகி பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை அம்பிகா இப்போது சின்னத்திரை, சினிமா என்று பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது தன்னுடைய வாழ்க்கையில் வந்த கிசுகிசு மற்றும் வாழ்க்கை மாற்றம் குறித்து பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை அம்பிகா 80ஸ் காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகம் ஆகி இப்போதும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் எல்லாம் ஒரு சில நடிகைகள் முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பார்கள். புகழின் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுவார்கள். பிறகு சினிமாவை விட்டு முழுமையாக விலகி விடுவார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டும் சினிமாவில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஒருவர்தான் நடிகை அம்பிகா.

அம்பிகாவை தொடர்ந்து அவருடைய தங்கை ராதாவும் சினிமாவில் அறிமுகமானார். அம்பிகா ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி உட்பட பல நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். அதேபோல ராதாவும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இப்போதும் ராதா மற்றும் அம்பிகா ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருக்கிறார். இந்த நிலையில் தான் சமீபத்தில் தன்னை பற்றி பரவிய வதந்திகள் பற்றி அம்பிகா மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அம்பிகா பேட்டி
அதில் அவர் பேசும்போது, எனக்கு சினிமாவில் அறிமுகமாகும் போது யாரும் துணைக்காக கிடையாது. காட் பாதர் இல்லாமல் சினிமாவில் அறிமுகமான நடிகை நான். கமல்ஹாசன் ஸ்ரீதேவி போன்றோருக்கு எல்லாம் பாரதிராஜா உறுதுணையாக இருந்தாரு. ஆனால் ஆரம்பத்தில் எனக்கு அப்படி யாரும் கிடையாது. என் தங்கை சினிமாவில் அறிமுகமாகும் போது ஆரம்பத்தில் அம்பிகாவின் தங்கை ராதா என்று சொன்னார்கள். அதற்குப் பிறகு சில வருடங்களிலேயே ராதாவின் அக்கா அம்பிகா என்று சொல்லிவிட்டார்கள். பணம் வந்தால் எல்லாமே மாறிப்போகும் என்று நானும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அதுபோல அந்த காலகட்டத்தில் எல்லாம் சினிமாவில் கிசுகிசுப்பு எழுதுவார்கள். அப்படி என்னை பற்றி ஒரு கிசுகிசு வந்தபோது நான் ரொம்பவும் உடைந்து போயிட்டேன். நான் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது அந்த கதாநாயகனுடன் எனக்கு தொடர்பு என்பது போன்று எழுதி இருந்தார்கள். நம்மளை பத்தி இப்படி எல்லாம் எழுதுறாங்களே என்று சூட்டிங் ஸ்பாட்டில் உட்கார்ந்து நான் அழுது கொண்டிருந்தேன்.
கிசுகிசு
அப்போது அந்த செட்டில் பிரேம் நசீர் சார் இருந்தாங்க. என்ன விஷயம் என்று அவங்க என்னிடம் கேட்டாங்க. அதற்கு நான் என்னை பற்றி வந்த கிசு கிசுப்பு பற்றி சொன்னேன். அதற்கு இதெல்லாம் ஒரு விஷயமா? உன்னை பற்றி கிசுகிசு வருகிறது என்றால் நீ லைம் லைட்டில் இன்னும் இருக்கிறாய் என்றுதான் அர்த்தம். இதையெல்லாம் பற்றி நீ கவலைப்படாத. உன்னுடைய வேலையில் நீ கவனமாய் இருக்கும்போது இவர்களே உன்னை பற்றி நல்ல விதமாகவும் சொல்லுவாங்க என்று சொன்னாரு.
நானும் அதற்கு பிறகு தான் எதார்த்தத்தை புரிந்து கொண்டேன். அதற்குப் பிறகு என்னைப் பற்றி எத்தனையோ கிசுகிசு வந்தது அதைப் பற்றி நான் கண்டுகொள்ளவே இல்லை. சரி ஏதோ நம்மை நினைவு வைத்திருக்கிறார்கள் என்று விட்டுவிட்டேன். ஆனால் ஆரம்பத்திலாவது கிசுகிசு மட்டும் சொல்லுவார்கள் ஆனால் இப்போது சோஷியல் மீடியாவில் அடுத்தவர்களைப் பற்றி தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்கள். அதையெல்லாம் பார்க்கும் போது வருத்தமாக தான் இருக்கிறது என்று அம்பிகா பேசியிருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்
அம்பிகா சோட்டானிக்கரை அம்மன் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு அந்த நேரத்தில் டாப்பில் இருந்த எல்லா கதாநாயகர்களுடனும் ஜோடியாக நடித்திருக்கிறார். இவருடைய ஹேர் ஸ்டைல் 80ஸ் காலகட்டத்தில் பல இளம் பெண்களின் ஃபேவரைட் ஆக இருந்தது. தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் பிஸியாக நடித்திருந்தார் அவர் கிட்டத்தட்ட இதுவரைக்கும் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications