சிறகடிக்க ஆசையில் முத்து பிளாஷ்பேக் எப்போது வரப்போகிறது? அதில் ட்விஸ்ட் இருக்கு! ரகசியத்தை உளறிய விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் பிளாஷ்பேக் கதை எப்போது வரப்போகிறது என்ற கேள்விக்கு அந்த சீரியலில் விஜயா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை அனிலா ஸ்ரீகுமார் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வருகிறது. அதனால் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமாகி விடுகிறார்கள். அதிலும் வில்லி, வில்லன் கேரக்டரில் நடித்தாலும் கூட அவர்களுக்கும் அதிகமான ரசிகர்கள் உருவாகி விடுகிறார்கள். அதுபோலத்தான் இந்த சீரியலில் விஜயாவிற்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுபோல அவரை திட்டுபவர்களும் இருக்கிறார்கள்.

டிஆர்பியில் முதலிடம்
இந்த சீரியலில் விஜயா தன்னுடைய மூன்று மகன்களில் மனோஜ் மற்றும் ரவிக்கு மட்டும் அதிக செல்லம் கொடுக்கிறார். அவர்களுக்கு ஒன்று என்றால் துடித்து போகிறார். ஆனால் முத்துவிடம் சில இடங்களில் மட்டும் பாசமும் பரிவும் வருகிறது. ஆனால் பல இடங்களில் அவர் மீது கோபத்தை மட்டுமே காட்டிக் கொண்டிருக்கிறார்.
விஜயா பேட்டி
அதுபோல முத்துவின் மனைவி மீனாவை எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கிறார். மற்ற இரண்டு மருமகள் தான் தனக்கு பெருசு என்று பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த சீரியலில் விஜயா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் அனிலா பேட்டி ஒன்றில் பேசும் போது இந்த சீரியலில் முத்துவிற்கும், உங்களுக்கும் என்னதான் பிரச்சனை? எதனால் தான் விஜயா முத்துவை வெறுக்கிறார் என்ற கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
காக்கப்படும் ரகசியம்
அதற்கு அனிலா, எனக்கும் இந்த டவுட்டு இருக்கிறது. சில இடங்களில் முத்துமீது எனக்கு பாசம் இருப்பது போன்ற காட்சிகள் வருகிறது. ஆனால் எப்போது முத்து பிளஷ்பேக் கதை வரும் என்றும், இருவருக்கும் என்ன பிரச்சனை என்று தெரியவரும் என்பது சத்தியமா எனக்கும் தெரியாது. ஏனென்றால் என்கிட்ட இதுவரைக்கும் சொல்லவே இல்ல.
முத்துவின் ஃப்ளாஷ்பேக்
இன்றைக்கு என்ன காட்சிகள் நடிக்க வேண்டுமோ அதை மட்டும்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாங்களும் அதைத்தான் நடித்துக் கொண்டிருக்கிறோம். இதில் இனி என்ன வரும் என்பது எங்கள் குரூப்பில் யாருக்குமே தெரியாது. அது போல இந்த சீரியல் மூலமாக தமிழ் ரசிகர்கள் எனக்கு கொடுக்கும் அங்கீகாரம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
வெறுக்கும் விஜயா
சிலர் என்னை திட்டுகிறார்கள். சிலர் உங்களுடைய நடிப்பு அருமையாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள். அதுபோல விஜயா முத்துவை வெறுப்பதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்வதற்காக நானும் ஆர்வமாக இருக்கிறேன் என்று அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். இந்த சீரியலில் எப்போது ரோகினி மாட்டுவார் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தாலும் அதற்கு வாய்ப்பே இல்ல ராஜா என்பது போல தான் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.
அவ்வப்போது முத்து ஜெயிலுக்கு போனவன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எதற்காக ஜெயிலுக்கு போனான் என்று யாருக்கும் தெரியாது. அதுபோல முத்து செய்த ஏதோ ஒரு செயல் விஜயாவை அதிகமாக பாதித்திருக்கிறது. அதனால் தான் முத்துவை மட்டும் அவருடைய பாட்டி வீட்டில் விட்டு அண்ணாமலை வளர்த்திருக்கிறார் அது என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
மனோஜ் சொன்ன வார்த்தை
சில தினங்களுக்கு முன்பு கூட மனோஜை முத்து அடிக்கும் போது மனோஜ் முத்துவிடம் நீ ஜெயிலுக்கு போயிட்டு வந்தவன் தானே என்று பேசியிருந்தார். இதனால் முத்து மேலும் கோபப்பட்டார். அப்போது மீனா இது பற்றி விசாரிக்கும் போது முத்து உண்மையை சொல்லாமல் சமாளித்திருக்கிறார். இதனால் இந்த ஃப்ளாஷ்பேக் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications