இரண்டாவது கல்யாணமும் நிலைக்கல.. இப்ப "அவருடன்" லிவ் இன் உறவு .. பூவே உனக்காக அஞ்சு அரவிந்த் எமோஷனல்
சென்னை: அந்த காலத்தில் செல்போன்கள் கிடையாது.. அதனால் நாங்கள் பிரிந்துவிட்டோம். இப்போது மீண்டும் ஒன்றுசேர்ந்துள்ளோம்.. பெங்களூரில் நான் நடத்தி வரும் டான்ஸ் பள்ளிக்கு, அஞ்சு அரவிந்த் அகாடமி ஆஃப் டான்ஸ் என்று அவர்தான் பெயர் வைத்தார்.. முதலில் ஐடி-யில் வேலை பார்த்து கொண்டிருந்தார்.. பிறகு அந்த வேலையை விட்டுவிட்டு, எழுதுவதில் கவனம் செலுத்தி வருகிறார்" என்று பூவே உனக்காக நடிகை அஞ்சு அரவிந்த் தன்னுடைய புதிய உறவை பற்றி கூறியிருக்கிறார்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக படத்தில் நடித்தவர் அஞ்சு அரவிந்த்.. நந்தினி என்ற கேரக்டரில் அஞ்சு அரவிந்த் அதில் நடித்திருந்தார். இந்த படம் விஜய் நடிப்பில் 1996ம் ஆண்டு வெளியானது..

பாப்புலரான விஜய்
விஜய்க்கு பட்டிதொட்டியெங்கும் பெயரை தந்த படம் இதுவாகும்.. தொடர்ந்து கவர்ச்சி படங்களில் நடித்து கொண்டிருந்ததாக விஜய் மீது சில விமர்சனங்கள் அந்த நேரத்தில் எழுந்தபோது, முதல்முதலாக விஜய்யை வைத்து குடும்ப படத்தை தந்திருந்தார் விக்கிரமன்.. காதல் படங்களில் இன்றுவரை முக்கிய இடத்தை பெற்று வருகிறது... இப்போதுவரை பலருக்கும் ஃபேவரிட் படமாக உள்ளது.
இதில் நடித்திருந்த அஞ்சு அரவிந்த்துக்கும் நல்ல பெயர் கிடைத்தது.. இதைத்தொடர்ந்து உன்னருகே நானிருந்தால், வானத்தைப்போல, வாஞ்சிநாதன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.. இதற்கு பிறகு தமிழில் சரியாக வாய்ப்பு கிடைக்காமல், மலையாளத்தில் நடிக்க துவங்கினார்..
திருமணம் - விவாகரத்து
பிறகு தன்னுடைய மாமா தேவராஜன் என்பவரை கடந்த 2002ல் கல்யாணம் செய்து கொண்டார். எனினும் 2 வருடங்களில் வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டார். பிறகு 2006ல் பெங்களூர் தொழிலதிபர் வினய் சந்திரன் என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். ஆனால், கணவர் இறந்துவிட்டார்..
இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். சொந்தமாக டான்ஸ் கிளாஸ் ஒன்றை நடத்தி வரும் அஞ்சு அரவிந்த், சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இந்நிலையில், ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருக்கும் அஞ்சு அரவிந்த், பல்வேறு சொந்த விஷயங்களை மனம்திறந்து பேசியிருக்கிறார்.
2 திருமணங்கள்
அதில், "2 திருமண உறவுகளும் சோகத்தில் முடிந்துவிட்டன.. என்னுடைய முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. 2வது திருமணம் நடந்தது, ஆனால் என் கணவர் இறந்துவிட்டார். இப்போது லிவ்-இன் உறவில் இருக்கிறேன். எனக்கு துணையாக இருப்பவரின் பெயர் சஞ்சய் அம்பல பரம்பத். 5 ஆண்டுகளாக மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வருகிறோம். பெங்களூருவில் நடன டீச்சர் என்ற அடையாளத்தை எனக்கு தந்ததே சஞ்சய்தான்..
நான் 8ம் வகுப்பு படிக்கும்போது சஞ்சய்தான், எனக்கு முதல் காதல். அந்த காதல் கதையை ஒரு படமாகவே எடுக்கலாம்.. நாங்கள் 2 பேரும் சேர்ந்து 96 படத்தை பார்த்தோம்.. எங்களை அந்த படம் முழுமையாக ஈர்த்துவிட்டது.
பள்ளி நாட்கள் காதல்
அந்த படம் பார்க்கும்போதெல்லாம் என்னுடைய பள்ளி நாட்கள்தான் நினைவுக்கு வந்தது.. ஏனென்றால்., அவரும் ஒரு டான்சர்தான்.. நாங்கள் முதன்முதலில் சந்தித்து கொண்டதும் ஒரு நடன வகுப்பில்தான்.. அந்த காலத்தில் செல்போன்கள் புழக்கத்தில் இல்லை.. அதனால் நாங்கள் பிரிந்துவிட்டோம். இப்போது மீண்டும் ஒன்றுசேர்ந்துள்ளோம்..
பெங்களூரில் நான் நடத்தி வரும் டான்ஸ் பள்ளிக்கு, அஞ்சு அரவிந்த் அகாடமி ஆஃப் டான்ஸ் என்று அவர்தான் பெயர் வைத்தார்.. முதலில் ஐடி-யில் வேலை பார்த்து கொண்டிருந்தார்.. பிறகு அந்த வேலையை விட்டுவிட்டு, எழுதுவதில் கவனம் செலுத்தி வருகிறார்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications