தனுஷுக்கு அம்மாவாக நடிக்க சொன்னாங்க! மறுத்த காரணம் இதுதான்! 'பொல்லாதவன்' ரகசியம் உடைத்த நடிகை அஞ்சு
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'பொல்லாதவன்'. இந்தப் படத்தில் வில்லன் கிஷோரின் மனைவியாக நடித்த நடிகை அஞ்சு, தான் முதலில் தனுஷின் அம்மாவாக நடிக்கத்தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், பின்னர் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும் விகடனுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.
தனுஷுக்கு அம்மா
'பொல்லாதவன்' படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்கான தேடலில் அஞ்சுவிடம் முதலில் அணுகப்பட்ட கதாபாத்திரம், தனுஷின் அம்மாதான். இது குறித்துப் பேசிய அஞ்சு, "தனுஷுக்கும் எனக்கும் பெரிய வயது வித்தியாசம் இல்லை என்பதால் அம்மாவாக நடிக்க எனக்கு விருப்பமில்லை," என்று கூறி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகத் தெரிவித்தார்.

அஞ்சுவின் இந்த முடிவுக்குப் பிறகு, தனுஷின் அம்மாவாக நடிகை பானுப்ரியா நடித்தார். அஞ்சுவுக்கு, வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த கிஷோரின் மனைவியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு வாய்ப்புகளில், கிஷோரின் மனைவியாக நடிக்கும் கதாபாத்திரத்தை அவர் விரும்பி ஏற்று நடித்ததாகவும் கூறினார். இந்தப் படத்தில் அஞ்சுவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
பொல்லாதவன் படப்பிடிப்பு அனுபவம்
'பொல்லாதவன்' படத்தின் படப்பிடிப்பு அனுபவம் குறித்தும் அஞ்சு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். "தான் வெள்ளையாக இருப்பதால் அந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மேக்கப் போட்டும் சரியாக அமையவில்லை. அதனால் அப்படியே நடிக்கட்டும் என இயக்குனர் வெற்றிமாறன் கூறிவிட்டார்," என்று தெரிவித்தார்.
மேலும், தனது படப்பிடிப்பு முடிந்த பிறகுகூட கேரவனிற்குச் செல்லாமல், படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் அமர்ந்து, அங்கு இருக்கும் பெண்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்று கவனித்து கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பு கொஞ்சம் கடினமாக இருந்ததாகவும், ஆனால் அங்கு இருந்தவர்களின் உற்சாகம் தனக்கு உத்வேகத்தைக் கொடுத்ததாகவும் அஞ்சு குறிப்பிட்டார்.
பேபி அஞ்சுவின் திரைப்பயணம்
பேபி அஞ்சு, குழந்தை நட்சத்திரமாகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். 1979ஆம் ஆண்டு வெளியான 'உதிரிப்பூக்கள்' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அஞ்சு, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளிலும் நடித்துள்ளார். அந்தக் காலகட்டத்தில் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரங்களில் இவரும் ஒருவர்.
'உதிரிப்பூக்கள்' தவிர, 'அச்சமில்லை அச்சமில்லை', 'அன்புள்ள ரஜினிகாந்த்', 'ராஜாதி ராஜா' போன்ற வெற்றிப் படங்களிலும் அவர் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாகப் புகழ் பெற்ற அஞ்சு, பின்னர் கதாநாயகியாகவும், துணை கதாபாத்திரங்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். 'பொல்லாதவன்' படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம், அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்தது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications