8 மாசத்துக்கு முன்னாடி ஆர்யாவை பார்த்தேன்.. அப்போ நடந்தது இதுதான்? அபர்ணதி ஓபன்
சென்னை: நடிகர் ஆர்யாவிற்க்கு பெண் பார்ப்பதற்காக நடத்தப்பட்ட எங்கள் வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அபர்ணதி, 8 மாதத்திற்கு முன்பு ஆர்யாவை தான் சந்தித்ததாகவும் அப்போது என்ன நடந்தது என்பது பற்றியும் பேசி இருக்கிறார்.
பண்டைய காலங்களில் உள்ள இளவரசன், இளவரசிக்கு வரன் பார்ப்பதற்காக சுயம்வரம் நிகழ்ச்சி நடத்தப்படும். அதில் பல நாட்டை சார்ந்த இளவரசர்களும், இளவரசிகளும் கலந்து கொண்டதாக கூறுவார்கள். அதுபோலத்தான் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் ஆர்யாவிற்கு பெண் பார்ப்பதற்காக எங்கள் வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடந்தது.

அதில் பல பெண்கள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுடன் ஆரியா பேசி பழகியதை பார்த்து பலர் திட்டி தீர்த்து வந்தனர். ஆனாலும் அந்த நிகழ்ச்சிக்கு நல்ல டிஆர்பி கிடைத்து வந்தது. எங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் நடிகை அபர்ணதியும் கலந்து கொண்டார்.
அபர்ணதி ஆர்யாவை அதிகமாக சொந்தம் கொண்டாடினார். ஆர்யா தன்னை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பது போலத்தான் அபர்ணதி ஆட்டிட்யூட் காட்டி இருந்தார். இது சக போட்டியாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. அந்த நிகழ்ச்சி நடைபெற்று போது அபர்ணதியின் நடவடிக்கை பற்றி தான் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பேசப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் ஆர்யா தனக்கு தான் வேண்டும் என்பது போன்று அபர்ணதி நடந்து கொண்டாலும் கடைசியில் அவருடைய ஆசை நிறைவேறவில்லை. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாரையும் ஆரியா திருமணம் செய்து கொள்ளவில்லை. மாறாக அவரோடு திரைப்படத்தில் ஒன்றாக நடித்த நடிகை சாயிஷாவை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதி தங்களுடைய திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு அழகான பெண் குழந்தையும் இருக்கின்றார். அதே நேரத்தில் அபர்ணதி இப்போ வரைக்கும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபர்ணதியின் பெயருக்கு பின்னால் 6ya என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதனால் இவர் ஆர்யாவை தான் தன்னுடைய பெயருக்கு பின்னால் வைத்திருக்கிறார் என்ற பேச்சு இணையத்தில் எழுந்து கொண்டிருக்கிறது. அதற்கு பதில் அளிக்காத அபர்ணதி தற்போது பேட்டி ஒன்றில் ஆர்யா பற்றி பேசி இருக்கிறார். அதில் 8 மாதத்திற்கு முன்பு நான் ஆர்யாவை பார்த்தேன்.
ஒரு ப்ரொடியூசர் வீட்டு பங்க்ஷனில பார்த்தேன். அப்போ அவர் என்னிடம் ஹாய் அபர்ணதி எப்படி இருக்குற? நல்லா இருக்கியா? என்று கேட்டார். எனக்கு இந்த நல்ல பாண்டு போதும். நான் அவரிடம் நான் நல்லா இருக்கிறேன் நீங்க எப்படி இருக்கீங்க என்று தான் கேட்டேன். வாடா போடா என்று கூட நான் பேசல. ஏன்னா நாங்க சந்திச்சு ரொம்ப கேப் ஆகிருச்சு, ரொம்ப வருஷம் ஆகிருச்சு.

அதனால எப்படி இருக்கீங்க என்று அந்த பாண்டில் தான் பேசினேன் அவ்வளவுதான். அதுபோல பழைய ஷார்ட்ஸ் பார்க்கும்போது கூட நான் தப்பா எதையும் எடுத்துக்கல. நான் உன் பொண்டாட்டி டா என்று கூட அந்த ஷார்ட்ஸில் ஆர்யாவிடம் பேசி இருக்கிறேன். ஆனால் அது எனக்கு தப்பா தெரியல. ஏன்னா அது சும்மா விளையாட்டா நான் பண்ணுன விஷயம். நான் விளையாட்டுக்கு பண்ணுன விஷயம் என்னை ஹர்ட் ஆக்கல. அது எனக்கு ஒரு மெமரி தான் என்று அந்த பேட்டியில் அபர்ணதி பேசி இருக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications