இவருதான் எங்க அப்பா.. கறி கடை போட்டு இருந்தாரு.. திருமண மண்டபத்தில் ஒரு நாள்! அறந்தாங்கி நிஷா எமோஷனல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமடைந்த அறந்தாங்கி நிஷா இப்போது பல திரைப்படங்களிலும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய அப்பாவை முதல் முறையாக பிரபல சேனல் ஒன்றில் காட்டி இருக்கிறார்.
அதோடு தன்னுடைய ஆரம்ப காலம் குறித்து அந்த வீடியோவில் கண்கலங்க அறந்தாங்கி நிஷா பேசியிருக்கையில் அதற்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். அறந்தாங்கி நிஷா சமீபத்தில் மிக்ஜாம் புயல் மூலமாக சென்னையில் பாதிப்பு ஏற்பட்டபோது பலருக்கும் உதவி செய்திருந்தார். ஆனால் அவருடைய வாழ்க்கையில் இத்தனை சோகங்களா? என்பது தான் பலருடைய கேள்வியாக இருக்கிறது.

அந்த வகையில் அறந்தாங்கி நிஷா சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் இப்போது காமெடியாக நடித்து பிரபலம் அடைந்து கொண்டிருக்கிறார். முன்னணி நடிகர்களோடு அதிகமான திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அறந்தாங்கி நிஷாவின் ஆரம்ப காலம் அவ்வளவு எளிமையானதாக இல்லையாம்.
அதனாலயே அறந்தாங்கி நிஷா தன்னுடைய வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய அப்பா மற்றும் தன்னுடைய கிராமத்தைப் பற்றி அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார். இந்த நிலையில் சமீபத்தில் கலாட்டா சேனலில் அறந்தாங்கி நிஷாவை பேட்டி எடுத்திருக்கின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் அறந்தாங்கி நிஷாவின் அப்பாவின் வீட்டை காட்டி இருக்கிறார்கள்.
இப்போது அந்த வீடு பெரிய அளவில் இருந்தாலும் ஆரம்பத்தில் ஓட்டு வீடாகத்தான் இருந்ததாம். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷா கலந்து கொள்வது வரைக்கும் அந்த வீடு ஓட்டு வீடாகத்தான் இருந்திருக்கிறது. அதுபோல அறந்தாங்கி நிஷா குடும்பத்திற்கு அந்த வீட்டைத் தவிர வேறு எந்த சொத்துக்களும் கிடையாதாம். வீட்டில் ஆடு, மாடுகள் இருந்திருக்கிறது. ஆடுகளை வளர்த்து தான் அவருடைய அப்பா அறந்தாங்கி நிஷாவாயும் அவருடைய தம்பியையும் வளர்த்திருந்தாராம்.
அது போல அறந்தாங்கி நிஷாவின் அப்பா கறிக்கடை போட்டு இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே பொம்பள பிள்ளையை எதற்கு இவ்வளவு படிக்க வைக்கிறீங்க என்று ஊரெல்லாம் கேட்டாலும் இவர் இல்லை என் பொண்ணு படிச்சு நல்ல நிலைமைக்கு வரணும் என்று அறந்தாங்கி நிஷாவை படிக்க வைத்திருக்கிறார். அப்போதே அறந்தாங்கி நிஷாவுக்கு அவர் எந்த விஷயத்திற்கும் தடுத்தது கிடையாதாம். ஆனால் அப்பா இது வேண்டாம் என்று சொன்னால் அதை அறந்தாங்கி நிஷாவும் செய்ய மாட்டாராம்.
ஆரம்பத்தில் அறந்தாங்கி நிஷா பட்டிமன்றங்களில் கலந்து கொள்ளும்போது அவருடைய தந்தை தடை விதிக்கவில்லையாம் ஆனால் கல்யாணம் முடிந்த பிறகு இரண்டு வருஷங்கள் எதிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று சொல்லிவிட்டாராம். ஒரு குழந்தை வேணும் அது எனக்கு பேரனாயிருந்தாலும் பரவாயில்லை பேத்தியா இருந்தாலும் பரவாயில்லை... நீ ஒரு குடும்பமாக மாறின பிறகு நீ வேலைக்கு போகலாம் என்று சொல்லிவிட்டாராம்.
அதனாலேயே அறந்தாங்கி நிஷா தன்னுடைய தந்தைக்காக தான் வேலைக்கு போகாமல் இரண்டு வருடமாக வீட்டில் இருந்திருக்கிறார். பிறகு குழந்தை பிறந்த பிறகுதான் இவர் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார். இப்போது பல நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கும் தன்னுடைய மகளை குறித்து அந்த வீடியோவில் அறந்தாங்கி நிஷாவின் அப்பா கண் கலங்கி இருக்கிறார்.
அப்போது அறந்தாங்கி நிஷா ஒரு சம்பவத்தை சொல்லி இருந்தார் அதாவது அப்பா நான் வளர்ச்சி அடைவதை பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டு இருந்தார். முதல் முறையா நான் டிவி சேனலில் வந்த போது எங்க அப்பா ஒரு மண்டபத்தை வாடகைக்கு எடுத்து அங்கு டிவி வைத்து எல்லாரையும் பார்க்க சொல்லி இருக்காரு. எல்லோரும் மண்டபத்தில் டிவி வைத்து என்னுடைய நிகழ்ச்சியை பார்த்து இருக்காங்க.
அப்பாவுக்கு அவ்வளவு சந்தோஷம் என்று தன்னுடைய தந்தையை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அறந்தாங்கி நிஷா தன்னுடைய அன்பை வெளிக்காட்ட அப்போது அவருடைய தந்தை கண் கலங்கி கொண்டிருக்கிறார். அதோடு என்னுடைய உலகம் எப்போதுமே எங்க அப்பா தான். அதற்கு பிறகு தான் என்னுடைய கணவர் கூட..
இப்ப கூட எங்க அப்பா நீ எந்த ப்ரோக்ராமுக்கும் போக கூடாதுன்னு சொன்னா நான் வீட்டிலேயே இருந்து விடுவேன். வெளியே என்னை பற்றி எவ்வளவோ நெகட்டிவ் கமெண்ட்கள் வருகிறது அதைப்பற்றி நான் கவலைப்படாததற்கு காரணமே என்னுடைய அப்பா தான். என்னை தடை செய்வதற்கோ என்னை பற்றி நெகட்டிவா பேசுறதுக்கும் எங்க அப்பாவுக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது. அவரே என்னை நம்பி எனக்கு ஆதரவு தரும்போது நான் எதற்கு அடுத்தவர்களை பற்றி கவலைப்பட வேண்டும் என்று அந்த பேட்டியில் அறந்தாங்கி நிஷா பேசியிருக்கிறார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications