ICUவில் இருக்கும் அறந்தாங்கி நிஷாவின் மகள்? ஊருக்கே ஓடி ஓடி உதவி செய்தவருக்கா இந்த நிலைமை!
சென்னை: சென்னையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகை அறந்தாங்கி நிஷா தன்னால் முடிந்த அளவிற்கு உதவிகளை செய்து இருந்தார்.
ஆனால் அறந்தாங்கி நிஷாவின் குழந்தைக்கு டைபாய்டு பாசிட்டிவ் என வந்து அவர் மருத்துவமனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தன்னுடைய குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரத்திலும் அறந்தாங்கி நிஷா அடுத்தவர்களுக்காக ஊரு விட்டு ஊரு வந்து உதவி செய்தது இணையத்தில் பலருடைய பாராட்டுகளை பெற்று வருகிறது.

பொதுவாக பெண்கள் எளிதாக தங்களுடைய கனவு லட்சியத்தை எட்டி விட முடியாது. அதற்கு குடும்பத்தினர்கள் சப்போர்ட் அதிகமாக தேவைப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு ஒரு பெண்ணுக்கு அவருடைய கணவர் பெண்ணுக்கு சப்போர்ட் அதிகமாக கொடுத்தால் தான் திருமணத்திற்கு பிறகு அந்த பெண்ணால் தன்னுடைய கனவில் லட்சியத்தை எட்ட முடியும்.
அந்த வகையில் சின்னத்திரையில் அறிமுகமாகி இப்போது வெள்ளி திரையிலும் கலக்கி கொண்டிருப்பவர்தான் அறந்தாங்கி நிஷா, காமெடி நிகழ்ச்சி மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கிய அறந்தாங்கி நிஷா இப்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகை ஆக நடித்துக் கொண்டிருக்கிறார். பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் தன்னுடைய குடும்பத்தையும் அறந்தாங்கி நிஷா அளவுக்கு அதிகமாக நேசித்து வருகிறார்.
தான் தன்னுடைய விருப்பப்படி நடிப்பதற்கு தன்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடுக்கும் சப்போர்ட் தான் காரணம் என்று அறந்தாங்கி நிஷா பல இடங்களில் கூறியிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறந்தாங்கி நிஷா திருச்சியில் இருந்து பெரிய இடர்பாடுகளுக்கு மத்தியிலும் பல பேருக்கு சாப்பாடு அடிப்படைப் பொருள்கள் என பலவற்றை சென்னை மக்களுக்கு வாங்கி கொடுத்தார்.
இதனால் சமூக வலைதளத்தில் அதிகமானோர் நிஷாவை பாராட்டி வந்தனர். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் பல நடிகர்கள் கூட மக்கள் சென்னையில் பாதிக்கப்படும்போது எந்த உதவிகளும் செய்யாமல் இருந்த நிலையில் வளர்ந்து வரும் நடிகையான அறந்தாங்கி நிஷா செய்த உதவி பலருடைய பாராட்டுகளை குவித்து வருகிறது. ஆனால் இந்த நிலையில் தான் அறந்தாங்கி நிஷாவின் வீட்டில் ஒரு சோகம் ஏற்பட்டு இருக்கிறது.
அதாவது அறந்தாங்கி நிஷாவின் மகள் இப்போது ICUவில் உள்ளாராம். அறந்தாங்கி நிஷாவின் மகளுக்கு டைபாய்டு பாசிட்டிவ் வந்துள்ளதாம் இந்த விஷயத்தை அவர் ஒரு வீடியோவில் பேசி இருக்கிறார் குழந்தையை விட்டுவிட்டு மக்களுக்கு உதவி செய்து வரும் அறந்தாங்கி நிஷாவின் நல்ல உள்ளம் குறித்து பலரும் பாராட்டி வருகிறார்கள் தான் கஷ்டத்தில் இருந்தாலும் கஷ்டப்படும் மக்களுக்கு தொடர்ந்து அறந்தாங்கி நிஷா உதவி செய்து வருகிறார்.












Click it and Unblock the Notifications