ராஜா ராணி 2 சீரியலில் அடுத்த சந்தியா இவர்தானா? போலீசாக இனி இவர் தான்.. ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கேரக்டரில் இனி நடிகை ஆஷா கவுடா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் இருந்து சந்தியா கேரக்டரில் நடித்து வந்த ரியா விலகி இருப்பதாக அவரே கூறி இருந்தார்.
இதைத்தொடர்ந்து அவருடைய கேரக்டரில் இனி யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த கேரக்டரில் ஜீ தமிழ் சீரியலில் நடித்த நடிகை ஆஷா கௌடா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நடிகை ஆஷா கவுடா சமீபத்தில் ஜீ தமிழில் முடிவடைந்த கோகுலத்தில் சீதை என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

முதல் சந்தியா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த சீரியலில் தொடர்ந்து பல கேரக்டர்களில் நடிகர்கள் இவருக்கு பதில் இவர் என மாறிவிட்டனர். ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்து வந்த சந்தியா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த காரணத்தால் இந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். கர்ப்பமாக இருந்த கடைசி மாதம் வரைக்கும் இவர் இந்த சீரியலில் நடித்துவிட்டு தான் விலகி இருந்தார்.

இரண்டாவது சந்தியாவும் விலகல்
கதாநாயகியை தொடர்ந்து அவருக்கு அடுத்ததாக வில்லி கேரக்டரில் நடித்து வந்த அர்ச்சனா கேரக்டரில் விஜே அர்ச்சனா நடித்து வந்தார். அவரும் திடீரென இந்த சீரியலை விட்டு தான் விலக இருப்பதாக கூறிவிட்டு விலகி விட்டார். ஆனால் அதற்கான காரணத்தை பற்றி அவர் எந்த தகவலையும் கூறியவில்லை என்ற நிலையில், தற்போது அர்ச்சனா திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக சந்தியா கேரக்டரில் நடித்து வந்த ரியா விஸ்வநாதன் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டதாக உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அடுத்தது யார்
இதைத்தொடர்ந்து சந்தியா கேரக்டரில் இனி யார் நடிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் எகிறி வருகிறது. காரணம் பல போராட்டங்களுக்குப் பிறகு இப்போது தான் சந்தியா ஐபிஎஸ் அதிகாரியாக சொந்த மாவட்டத்திலேயே பொறுப்பு ஏற்று இருக்கிறார். இனி தான் பல்வேறு பிரச்சனைகளும் இந்த சீரியலில் அடுத்தடுத்து வர இருக்கிறது. ஏற்கனவே பிரச்சனைகளுக்கும் சந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அடிக்கடி பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டிருப்பது தான் சந்தியா கேரக்டருடைய வேலை. இதில் தற்போது நடித்து வந்த ரியா நன்றாக நடித்து வந்தாலும் இவர் விலகி விட்டதால் இனி யார் அந்த கேரக்டரில் சரியாக பொருந்துவார் என்று பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.

மூன்றாவது சந்தியா
இந்த நிலையில் இந்த கேரக்டரில் ஜீ தமிழில் கோகுலத்தில் சீதை சீரியலில் நடித்து வந்த ஆஷா கவுடா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஆஷா கவுடா போலீஸ் கெட்டப்புக்கு அப்படியே பொருத்தமாக இருப்பார். அதனால் இந்த சீரியலில் ஐபிஎஸ் அதிகாரியாக இனி மிரட்டப் போக இருக்கிறார் என்று ரசிகர்கள் கருத்து கூற, சரவணனுக்கு இரண்டு ஜோடி ஏற்கனவே இருந்த நிலையில் தற்போது மூன்றாவது ஜோடி வந்துவிட்டதை வைத்து நெட்டிசன்கள் சரவணன் கேரக்டரை கலாய்த்து வருகிறார்கள். ஆஷா கவுடா நடித்த எபிசோடுகள் இன்னும் இரண்டு நாட்களில் இருந்து ஒளிபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் படிக்கட்டில் அந்த சத்தம்! யாருமே கவனிக்காத நடிகர் திலகத்தின் கை ரகசியம் -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications