பிசின் போல மக்கள் மனதில் ஒட்டிக்கிட்ட சூப்பர் நடிகை அசின்.. ரூ.10000 கோடி சொத்துக்கு ஓனரா?: பிரபலம்
சென்னை: கஜினி படத்தையும் தன்னுடைய காதலையும் ஒப்பிட்டு நினைத்து பார்த்தாராம் அசின்.. கடைசிவரை சினிமாவில் குட்புக்கில் இருந்து சென்றவர் அசின்.. யாரிடமும் பந்தா காட்டாதவர்" என பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில் நடிகை அசின் குறித்து பல்வேறு தகவல்களையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
AramNaadu யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "கேரளாவை சேர்ந்த அசின் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்.. படிக்கும்போதே நடிப்பில் ஆர்வம் இருந்துள்ளது.. செல்போன் விளம்பரத்தில் நடித்ததன்மூலம், வாகா என்ற மலையாள படத்தில் வாய்ப்பு கிடைத்தது..

"பார்க்குறதுக்கு அந்த அளவுக்கு அசின் அழகாக இல்லையே?" என்ற சின்ன சின்ன விமர்சனங்களையெல்லாம் தன்னுடைய நடிப்பால் அடித்து நொறுக்கி, அசின் போல அழகு வேறு யார்" என்று சொல்ல வைத்தவர்.
குடும்பத்தில் ஒருவர்
கவர்ச்சியான உடைகளைகூட அணியாதவர்.. அதுக்காக குடும்ப ரீதியான படங்களிலும் அதிகமாக நடிக்கவுமில்லை.. எனினும், இளைஞர்களின் மனதில் பிசின் போல அசின் ஒட்டிக் கொண்டார்.. பெரும்பாலும் மாடர்ன் டிரஸ்ஸில் நடித்தாலும், குடும்பத்தில் ஒருவராகவே கேரள, தமிழக மக்கள் அவரை ஏற்றுக் கொண்டனர்.
எம் குமரன் சன் ஆப் மகாலஷ்மி படம், மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.. ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாதிரியான நடிப்பை வழங்கியவர் அசின்.. தசாவதாரம் படத்தில், அந்த கேரக்டராகவே மாறிவிட்டார்.. "இவ்வளவு பிரம்மாதமாக நடிக்கிறீங்களே? என்று கமலே அசினை பாராட்டினாராம். விஜய்யுடன் காவலன் சிவகாசி, போக்கிரி படங்களில் நடித்தார்..
கஜினி சூர்யா - ராகுல் ஷர்மா
சூர்யாவின் கஜினி படம், அசினுக்கு பென்ச் மார்க் படம் என்று சொல்லலாம். கஜினி படத்தில் செல்போன் அதிபர் என்று தெரியாமலேயே சூர்யாவுடன் பழகுவதைபோல, அசினிக்கு நிஜ வாழக்கையிலேயே அப்படி நடந்துவிட்டது.
மைக்ரோமேக்ஸ் செல்போன் அதிபர் ராகுல் ஷர்மா என்பவரை முதன்முதலில் அசினுக்கு நண்பர்கள் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள். அவர் செல்போன் கம்பெனி ஓனர் என்று தெரியாமல் அசினும், கேஷூவலாக காபி சாப்பிட்டபடி பேசிவிட்டு வந்தாராம். ராகுல் ஷர்மாவும் தன்னை யார் என்று காட்டிக் கொள்ளாமலேயே அசினிடம் பேசிவிட்டு சென்றுள்ளார்.
ஆச்சரியமும், மதிப்பும்
பிறகுதான் அசினிடம் அவர்தான் மைக்ரோமேக்ஸ் செல்போன் அதிபர், 10 ஆயிரம் கோடிக்கு அதிபதி என்று சொல்லவும், இதைக்கேட்டு அதிர்ச்சியும், இவ்வளவு எளிமையாக இருக்காரே? என்று ஆச்சரியமும் அசின் அடைந்தாராம். இதற்கு பிறகு, ராகுல் ஷர்மா மீது மதிப்பும், மரியாதையும் பெருகியிருக்கிறது.
ஒருநாள் அசினிடம், நாம் திருமணம் செய்து கொள்ளலாமா? என்று ராகுல் ஷர்மா அசினிடம் கேட்டதுமே, அசின் திகைத்து போய்விட்டாராம். உடனே, தன்னுடைய அப்பாவிடம் இதை சொல்லியிருக்கிறார் அசின்..
என்றும் குட்புக்கில் அசின்
அசினின் அப்பா, சிபிஐ ஆபீஸராக இருந்து ஓய்வு பெற்றவர்..பக்கா ஜென்டில்மேன். மகளின் கால்ஷீட், படங்களுக்கு கதை கேட்பது என அத்தனையும் அவர்தான் கவனித்து கொண்டிருந்தார்.. ராகுல் ஷர்மா பற்றி மகள் சொன்னதுமே, மகளின் எதிர்காலம் கருதி, சின்ன வயதிலேயே அசினுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்.
அதற்கு பிறகுதான், கஜினி படத்தையும் தன்னுடைய காதலையும் ஒப்பிட்டு நினைத்து பார்த்தாராம் அசின்.. கடைசிவரை சினிமாவில் குட்புக்கில் இருந்து சென்றவர் அசின்.. யாரிடமும் பந்தா காட்டாதவர்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications