விஜய் டிவி டாப் சீரியலில் கதாநாயகியாக மாறும் “தமிழும் சரஸ்வதியும்” நடிகை.. முதல் நாளே இப்படியா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ராகிணி கேரக்டரில் நடித்து பிரபலம் அடைந்த நடிகை அஸ்ரிதா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீ நான் காதல் என்ற சீரியலில் அனு கேரக்டரில் அறிமுகமாக இருக்கிறார்.
சமீபத்தில் முடிவடைந்த தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் உண்டு. பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் ஆரம்பத்தில் பெரிய அளவில் டிஆர்பியில் முன்னணியில் இருந்தது. இந்த சீரியலில் ராகிணி கேரக்டரில் நடிகை அஸ்ரிதா நடித்து வந்தார். இவர் குழந்தை நட்சத்திரமாகவே சீரியலில் அறிமுகம் ஆகி இப்ப வரைக்கும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவருடைய பூர்வீகம் கேரளாவாக இருந்தாலும் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். இவருடைய அப்பா புரொடக்ஷன் மேனேஜராக இருந்திருக்கிறார். அதோடு அவருடைய அம்மாவும் சீரியல் நடிகையாகத்தான் இருந்திருக்கிறார். மூன்று வயதிலேயே அஸ்ரிதா சினிமா மற்றும் சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதிலும் நான் சின்னத்திரையில் "அம்மா அப்பா" என்று சீரியல் மூலமாகத்தான் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
நீ நான் காதல் சீரியலில் இருந்து விலக காரணம் இதுதான்! சாய் காயத்ரி விளக்கம்.. மீண்டும் பிரச்சனை!
அதை தொடர்ந்து கனா காணும் காலங்கள், தேன் மொழி பிஏ, நாம் இருவர் நமக்கு இருவர், தமிழும் சரஸ்வதியும், சொந்த பந்தம், கல்யாண பரிசு போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதுபோல 2015 ஆம் ஆண்டு கடல் கடந்த காவியம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு பிறகு பெரிதாக எந்த சீரியலிலும் தலை காட்டாமல் இருந்தார்.

இந்த நிலையில் இன்று நீ நான் காதல் என்ற சீரியலில் அனு கேரக்டரில் அஸ்ரிதா அறிமுகமாகி இருக்கிறார். இந்த கேரக்டரில் ஏற்கனவே இந்த சீரியல் தொடங்கி ஒரு வருடங்களாக அணு கேரக்டரில் நடிகை சாய் காயத்ரி நடித்திருந்தார். அவர் திடீரென்று இது சீரியலில் இருந்து விலகி இருந்த நிலையில் அவருக்கு பதிலாக அனுவாக அஸ்ரிதா நடித்த காட்சிகள் இன்று ஒளிபரப்பாகி இருக்கிறது.
பப்லு சூட்டிங் ஸ்பாட்டில் இப்படித்தான்! வெளியே தெரியாது! ஓபனாக பேசிய கண்ணான கண்ணே சீரியல் நிமிஷிகா
பல மாதங்களுக்குப் பிறகு இவரை சீரியலில் பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்து நிற்கின்றனர். அஸ்ரிதா சமூக வலைத்தளத்தில் செம ஆக்டிவாக இருக்கிறார். ஆனாலும் நீ நான் காதல் என்ற சீரியலில் நடிப்பது குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. நீ நான் காதல் சீரியலில் அனு- ஆகாஷ் மற்றும் அபி- ராகவ் ஜோடிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதில் அனுவும் அபியும் அக்கா தங்கையாக இருக்கின்றனர்.

அதுபோல ஆகாஷ் மற்றும் ராகவ் இருவரும் ஒரே வீட்டில் சகோதரர்களாக இருக்கின்றனர். இவர்களை பற்றி தான் இந்த சீரியலில் கதை இருக்கிறது. இந்த நிலையில் அக்கா கேரக்டரில் அனுவாக அஸ்ரிதா அறிமுகம் ஆகி இருப்பது ரசிகர்களை மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது. அதிலும் முதல் நாள் காட்சியில் இவர் படு பவ்யமாக அறிமுகமாவதை பார்த்ததும் ரசிகர்கள் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ராகிணியாக ஆட்டம் போட்ட அஸ்ரிதாவா இது என்று வியப்போடு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications